மஹராஷ்டிராவில் ஊரடங்கு நீட்டிப்பா ?உத்தவ் பதில்

Updated : ஏப் 07, 2020 | Added : ஏப் 07, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
Lockdown, Curfew, Maharashtra, Maha CM, chief Minister, Uddhav Thackeray, Lockdown extension

மும்பை: மஹாராஷ்டிராவில் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து ஏப். 14-ம் தேதிக்கு பின் முடிவு செய்யப்படும் என அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்ரே கூறினார்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்தும் வகையில் நாடு முழுதும், 21 நாள் ஊரடங்கை மத்திய அரசு அமல்படுத்தியது. ஏப். 14-ம் தேதி நிறைவு பெறுகிறது.இந்நிலையில் ஊரடங்கை, மேலும் நீட்டிக்க வேண்டும் என, பல்வேறு மாநில அரசுகள் மற்றும் நோய் தடுப்புத்துறை நிபுணர்கள், மத்திய அரசுக்கு விடுத்துள்ள கோரிக்கை தொடர்பாக, மத்திய அரசு தீவிர ஆலோசனை நடத்தி வருகிறது.


latest tamil news



இது குறித்து மஹாராஷ்டிரா சிவசேனா கட்சி முதல்வர் உத்தவ் தாக்கரே கூறியது, கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் தேவையான மருத்துவ வசதிகள் குறித்தும், அமைச்சரவை மற்றும் உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. ஏப். 14-ம் தேதிக்கு பிறகு ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முடிவு செய்யப்படும் என்றார்.

முன்னதாக மஹாராஷ்டிராவில் கொரோனாவுக்கு இதுவரை இல்லாத வகையில் 1,018 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பலி எண்ணிக்கையும் அதிகரித்து முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Loganathan Kuttuva - Madurai,இந்தியா
08-ஏப்-202006:47:55 IST Report Abuse
Loganathan Kuttuva மஹாராஷ்டிராவில் குரானா பாதிப்பு அதிகம் உள்ளது ஊரடங்கு உத்தரவை படிப்படியாக நீக்க வேண்டும்.தொழிற்சாலைகள் அதிகம் உள்ள மாநிலம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X