ஊரடங்கின் போது பூஜை:மகா.,பா.ஜ.,எம்.எல்.ஏ.,மீது வழக்கு

Updated : ஏப் 07, 2020 | Added : ஏப் 07, 2020 | கருத்துகள் (16)
Share
Advertisement

முமு்பை: ஊரடங்கின் போது கோவில் பூஜையில் கலந்து கொண்டதாக பா.ஜ., எம்.எல்.ஏ.,மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.latest tamil newsகொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதனால் பல்வேறு நிறுவனங்கள் முடங்கி உள்ளன.இதன் காரணமாக கோவில்பூஜைகள் ஆகம விதிப்படி வழக்கம் போல் நடைபெறும் என பல்வேறு மாநில அரசுகள் அறிவித்துள்ளன. மேலும் மக்கள் கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்தவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.


latest tamil newsமகாராஷ்டிரா மாநிலத்திலும் ஊரடங்கு உத்தரவு கடை பிடிக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில் அம்மாநில பா.ஜ., எம்.எல்.ஏவான சுஜித்சிங் தாக்கூர் சோலாப்பூர் மாவட்டத்தில் பூட்டப்பட்டிருந்த கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்தியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனையடுத்து அவர் மீது வழக்கு பதிவு செய் யப்பட்டுள்ளது.

இது குறித்து பா.ஜ.,எம்.எல்.ஏ., சுஜித்சிங் தாக்கூர் கூறுகையில், இரண்டு நாட்களுக்கு முன்னர் சம்பந்தப்பட்ட கோவில் அறங்காவலர்களிடம் இருந்து அழைப்பு வந்தது. அதன் பின் தான் சென்றேன். இதில் எந்த விதி மீறலும் ஏற்படவில்லை என்றார்.


latest tamil newsஅதே நேரத்தில் கோயிலின் துணைப்பிரிவு அதிகாரி மற்றும் நிர்வாக அதிகாரி ஆகியோர் கோவிலில் கூட்டம் இல்லை என்று கூறி அரசுக்கு அறிக்கை அனுப்பியுள்ளனர்.


latest tamil newsஇதனையடுத்து ஊரடங்கை மீறியதாக எம்.எல்.ஏ சுஜித்சிங் தாக்கூர் மீது பேரிடர் மேலாண்மை சட்டம் மற்றும் தொற்றுநோய் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
பாமரன் - நம்மூர்தான்,இந்தியா
08-ஏப்-202010:17:57 IST Report Abuse
பாமரன் இந்த மாதிரி ஆளுங்க மேல் வழக்கு போட்டு என்னத்தை கிழிக்க முடியும்...??? நம்ம வாய்தா ஃபெசிலிட்டி அவ்ளோ ஸ்ட்ராங்.... பேசாமல் போனவன் எல்லாரையும் கொரோனோ வார்டில் ஒரு வாரத்திற்கு அடைச்சு வைக்கனும்... அதுக்குள்ள தொத்துச்சுன்னா சிகிச்சை கண்டினியூ... இல்லைன்னா வெளியே விட்ரனும்.... ஜென்மத்துக்கும் பயத்திலையே கெடப்பானுவ.... பகோடா கம்பெனி மட்டுமல்ல... எந்த கம்பெனி ஆளாயிருந்தாலும் இதை செய்யலாம்...
Rate this:
Cancel
chander - qatar,கத்தார்
08-ஏப்-202009:32:41 IST Report Abuse
chander இவங்களை பிடித்து உள்ளே போடுங்க சாமியோவ்
Rate this:
Cancel
NARASIMHAN - CHENNAI,இந்தியா
08-ஏப்-202008:04:29 IST Report Abuse
NARASIMHAN There are so many religious people available to take care of temple administration. Will the temple authorities who invited this leader be replaced. Maharashtra is one of the worst affected state. Curfew is for all. Though no opposition leader condemned Delhi illegal Congress, these type of inviting VIP'S for temple daily / special rituals should be stopped. I have come across in TTD live seva tele few people gathered in the name of temple official/ VIP, violating social distance. We should set example for others in this.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X