மத்திய அரசுக்கு அமெரிக்க அதிபர், டிரம்ப் மிரட்டல்! 'மலேரியா மருந்தை தராவிட்டால் பதிலடி'

Updated : ஏப் 09, 2020 | Added : ஏப் 07, 2020 | கருத்துகள் (51+ 43)
Share
Advertisement
Trump,US,Modi,India,டிரம்ப்,இந்தியா,அமெரிக்கா,மோடி,மிரட்டல்

வாஷிங்டன்: 'கொரோனா' பாதிப்பு, அமெரிக்காவில் மிகவும் தீவிரமடைந்து வரும் நிலையில், வைரசால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு அளிப்பதற்காக, மலேரியாவுக்கு வழங்கப்படும், 'ஹைட்ராக்சிகுளோரோக்வின்' என்ற மருந்தை, 'சப்ளை' செய்யும்படி, சமீபத்தில், இந்தியப் பிரதமர், நரேந்திர மோடியிடம், அந்த நாட்டின் அதிபர், டொனால்டு டிரம்ப் கேட்டிருந்தார். இந்த நிலையில், 'மருந்தை தராவிட்டால், பதிலடியை சந்திக்க நேரிடும்' என, டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார்.

கொரோனா வைரஸ் பாதிப்பு, உலகெங்கும் தீவிரமடைந்து வருகிறது. அமெரிக்காவில் அதன் தாக்கம் மிகத் தீவிரமாக உள்ளது. கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோருக்கு, மலேரியாவுக்கு வழங்கப்படும், ஹைட்ராக்சிகுளோரோக்வின் என்ற மருந்து வழங்கப்படுகிறது. அமெரிக்க அதிபர், டொனால்டு டிரம்பும், இந்த மருந்தே, தற்போதைக்கு, கொரோனா நோயாளிக்கு சிறந்த மருந்து என்று தொடர்ந்து கூறி வருகிறார்.

மிகவும் விலை குறைந்த இந்த மருந்து, நீண்ட காலமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது, உலகின் தேவையில், 25 சதவீதத்தை, இந்தியா வழங்கி வருகிறது. இந்தியாவிலும், கொரோனா வைரஸ் பாதிப்பு துவங்கியவுடன், இந்த மருந்து உட்பட, 26 முக்கிய மருந்துகளின் ஏற்றுமதிக்கு, மத்திய அரசு கடந்த மாதம் தடை விதித்தது.

தற்போது அமெரிக்காவில், வைரஸ் பாதிப்பு மிகத் தீவிரமடைந்து வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடியை, அதிபர் டொனால்டு டிரம்ப், சமீபத்தில் தொலைபேசியில் அழைத்து பேசினார். 'ஏற்கனவே கொடுக்கப்பட்டுள்ள ஆர்டர்களின்படி, மருந்தை சப்ளை செய்ய வேண்டும்' என, அப்போது டிரம்ப் கேட்டுக் கொண்டார்.

அதிபர் டிரம்ப், நேற்று முன்தினம், நிருபர்களிடம் கூறியதாவது: இந்த மருந்தை ஏற்றுமதி செய்ய முடியாது என்று, பிரதமர் மோடி முடிவு எடுத்தால், ஆச்சரியமடைவேன். நான் அவரை தொலைபேசியில் அழைத்த போது, அதை அவர் கூறியிருக்க வேண்டும். மருந்து சப்ளையை விரைவாக அனுப்ப வேண்டும் என்று, அவரிடம் கேட்டுக் கொண்டேன். அந்த மருந்தை அவர் அனுப்பாவிட்டாலும், சரி. ஆனால், அதற்கான பதிலடியை அவர் சந்திக்க வேண்டும். நாம் ஏன், பதிலடி கொடுக்கக் கூடாது. அமெரிக்கா, இந்தியா இடையே நல்ல நட்பு உள்ளது. அதனால், நம் கோரிக்கையை, இந்தியா மறுக்காது என்று நினைக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.


10,000 பேர் பலி:

அமெரிக்காவில், கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, 3.66 லட்சத்தை தாண்டிஉள்ளது. பலியானோர் எண்ணிக்கை, 10 ஆயிரத்து, 800ஐத் தாண்டியுள்ளது. மிகவும் பாதிக்கப்பட்டுள்ள நியூயார்க்கில் மட்டும், 4,758 பேர் உயிர் இழந்துள்ளனர்; 1.30 லட்சம் பேருக்கு தொற்று உள்ளது உறுதியாகி உள்ளது.

'இந்த வைரஸ் பாதிப்பால், அமெரிக்காவில், இரண்டு லட்சம் பேர் உயிரிழப்பர்' என, அதிபரின் வெள்ளை மாளிகையில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பு நடவடிக்கை குழு எச்சரித்திருந்தது. தற்போது, 'கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதால், அமெரிக்காவில், கொரோனாவால், ஒரு லட்சம் பேர் உயிரிழப்பர்' என, அந்தக் குழு கூறியுள்ளது.


இந்தியர்களுக்கும் தொற்று:

'இந்தியாவை பூர்வீகமாக கொண்ட பலருக்கும், வைரஸ் பாதிப்பு உள்ளது உறுதியாகி உள்ளது; சிலர் உயிரிழந்துள்ளனர்' என, அமெரிக்க வாழ் இந்தியர் சங்கங்கள் தெரிவித்துள்ளன. இது தொடர்பான, புள்ளி விபரங்கள் ஏதும் இல்லை. ஆனால், அமெரிக்க வாழ் இந்தியர்கள் வைரசால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வந்த வண்ணம் உள்ளதாக, சங்க நிர்வாகிகள் கூறியுள்ளனர்.

வைரஸ் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நியூயார்க் மற்றும் நியூ ஜெர்சி நகரில் தான், இந்தியர்கள் அதிக அளவில் உள்ளனர். சிலிகான் வேலியில் அதிக அளவு தகவல் தொழில்நுட்ப இன்ஜினியர்கள், நிபுணர்கள் உள்ளனர். வைரஸ் பாதிப்பு அதிகரித்ததைத் தொடர்ந்து, இந்தியாவில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. வெளிநாடுகள் செல்வதற்கான பயணத்துக்கு தடை விதிக்கப்பட்டது. இதனால், இந்தியாவில் அதிக அளவு அமெரிக்கர்கள் தவித்து வந்தனர். சிறப்பு ஏற்பாட்டின்படி, 1,300 அமெரிக்கர்களை, சிறப்பு விமானத்தில் அமெரிக்க அரசு அழைத்து சென்றுள்ளது.


பிடனுடன் பேச்சு:

இந்தாண்டு இறுதியில், அதிபர் தேர்தல் நடக்க உள்ளது. அதில், ஜனநாயகக் கட்சி சார்பில் வேட்பாளராவதற்கான போட்டியில், முன்னாள் துணை அதிபர், ஜோ பிடன் முன்னிலையில் உள்ளார். அவருடன், அதிபர் டிரம்ப், தொலைபேசியில் பேசினார். 'கொரோனாவை தடுக்க, ஜோ பிடன் பல ஆலோசனைகள் வழங்கி உள்ளார். அவருடன் நடந்த பேச்சு மிக சிறப்பாக இருந்தது' என, டிரம்ப் கூறியுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (51+ 43)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
08-ஏப்-202023:24:30 IST Report Abuse
Kannan Seenivasagan போற்றுவார் போற்றட்டும் - புழுதிவாரித்தூற்றுவார் தூற்றட்டும்போகட்டும் கண்ணனுக்கே.ஏற்றதொரு கருத்தைஎனதுள்ளம் என்றால்எடுத்துரைப்பேன் எவர்வரினும்நில்லேன் அஞ்சேன்’ என்ற துணிவு, கீதை போட்ட பாதையில் செல்பவர்க்கே வரும்.எமனுக்கும் அஞ்சதவர் என் சிங்கத்தலைவன் எங்கள் நரேந்திர மோடி...
Rate this:
Cancel
08-ஏப்-202023:20:33 IST Report Abuse
Kannan Seenivasagan போற்றுவார் போற்றட்டும் - புழுதிவாரித்தூற்றுவார் தூற்றட்டும்போகட்டும் கண்ணனுக்கே.ஏற்றதொரு கருத்தைஎனதுள்ளம் என்றால்எடுத்துரைப்பேன் எவர்வரினும்நில்லேன் அஞ்சேன்’ என்ற துணிவு, கீதை போட்ட பாதையில் செல்பவர்க்கே வரும்.
Rate this:
Cancel
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
08-ஏப்-202020:20:37 IST Report Abuse
skv srinivasankrishnaveni அமெரிக்க அதிபரே நீங்க ரிக்வஸ்ட் பண்ணலாம் அதிகாரம் ஆர்டர் இதெல்லாம் தவறு , ஒலோபெரிய நாடு யு எஸ் எ அங்கே ஒருமருந்துகிடையாதா????மேலும் உங்கள் ஊரிலே வேப்பைலை கிடைக்குமான்னு தெரியாதுங்கய்யா , ப்ளீஸ் சுக்கு மிளகு ஓமம் வசம்பு சுக்கு பனைவெல்லம் சேர்த்து லேக்கியமா கிளறி கொடுங்க
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X