சிறப்பு பகுதிகள்

சிந்தனைக் களம்

நான்கு சுவர்களும், நம் உயிரும்!

Updated : ஏப் 08, 2020 | Added : ஏப் 07, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
coronavirus, corona, sindhanaikalam, lalithamathi, house, government, PmModi, CmEps, palanisamy

'உங்கள் உயிரை பாதுகாத்துக் கொள்ள வீட்டிலேயே இருங்கள்' என, அரசு சொன்னால், பாதி பேருக்கு மேல், அப்போது தான், வானம் இடிந்து விழுந்து விடுவது போல நினைத்து, வீதியிலே சுற்றித் திரிகின்றனர். கண்டதையும் சமைத்து சாப்பிட, இறைச்சி கடையில் இருந்து, காய்கறி கடை வரை ஒட்டிக்கொண்டு நிற்கின்றனர்.

ஒரு மாதத்திற்கு, வீட்டிற்குள்ளேயே கஞ்சி காய்ச்சி குடித்தாலும், நம் உடம்புக்கு எதுவும் ஆகிவிடாது. ஆனால் உயிருக்கு... வெளியில் சென்று, நோயை தொற்றி வந்தால், என்ன ஆகும்; ஒட்டு மொத்த குடும்பமும் அல்லவா குலைந்து போகும்? இது, விடுமுறை கொண்டாட்டமா, நாம் விதவிதமாய் சமைச்சு சாப்பிடுவதற்கு... தொட்டால் ஒட்டி, நம் உயிரை குடிக்க காத்துக் கொண்டிருக்கிறது, கண்ணுக்குத் தெரியாத விஷக்கிருமி, கொரோனா. உலகின் வல்லரசு நாடான அமெரிக்காவே, அதனிடமிருந்து தப்பிக்க, 'நான்கு சுவர்களுக்கு நடுவில் இருங்கள்' என்று அறிவுறுத்துகிறது.அங்கு அதிகரிக்கும் நோய் தொற்றால், பதறியுள்ள அந்த வல்லரசு நாடு, நம் நாட்டிடம், மருந்து கேட்கும் நிலைக்கு வந்துள்ளது.

நிலைமை அப்படி இருக்கும்போது, 130 கோடி மக்கள் தொகைக் கொண்ட நாம், எங்கே போய் உதவிக்கு கையேந்துவது...ஆனால், நம் மக்கள், அதை புரிந்து கொள்ளாமல், அலட்சியம் காட்டுகின்றனர். ஆட்டு மந்தைகளைப் போலவே, வெளியில் சுற்றித் திரிவேன் என்று அடம் பிடிக்கின்றனர். மெல்ல கொல்லும் விஷம் போல, கொரானோ அறிகுறியும் உடனடியாகத் தெரிவதில்லை. 14 அல்லது, 28 நாட்களைத் தின்று, பிறகு தான், நம்மையும் தின்ன காத்துக் கொண்டிருக்கிறது. உடனடியாக தெரிந்தாலாவது, நோய் கொல்லி மருந்து சாப்பிட்டு தப்பித்து கொள்ளலாம். அதற்கும் வழியற்று, கதியற்று தான், 'விலகி இரு, வீட்டிலிரு' என்று அறிவுறுத்துகிறது, அரசு.

இதை விடக் கொடுமை, நோய் வந்த ஊரை, வீட்டை அடையாளம் கண்டு, நோய் பரவாமல் தடுக்க, மருத்துவ குழுக்கள் ஊருக்குள் சென்றால், அவர்களையும் விரட்டி அடிக்கும் கும்பல் இருக்கவே செய்கிறது. இவர்களை எல்லாம் என்னவென்று சொல்வது... கண்டதும் சுடச் சொல்லி, பிலிப்பைன்ஸ் அரசு உத்தரவு போட்டுள்ளது போல, 'கொடுங்கோல்' உத்தரவைத்தான், நம் மக்கள் எதிர்பார்க்கின்றனரா?

ஆட்சியாளர்களை, எல்லா மக்களுக்கும் பிடிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஆனால், அப்படி பிடிக்காத மக்களுக்கும், மோடி தான் பிரதமர்; இ.பி.எஸ்., தான் முதல்வர்.அனைத்து உயிர்களையும் காக்க வேண்டிய பொறுப்பு, அவர்களுக்கு இருக்கிறது. அதை விடுத்து, 'மோடி சொன்னால் கேட்க மாட்டேன்; பழனிச்சாமி சொன்னால் எதிர்த்து நிற்பேன்' என்று பிடிவாதம் பிடிப்பது, எந்த வகையில் நியாயம்?இந்தப் புரட்சியாளர்கள் மட்டும், பாதித்தால் பரவாயில்லை; விட்டு விடலாம். இவர்களால், நம் உயிரும் அல்லவா கேள்விக்குறியாக்கப்படுகிறது.

நம்மை, அரசு சிறை இருக்கவா சொல்கிறது... இந்த நோயில் இருந்து, சீக்கிரம் விடுபட வேண்டும்; இந்த நோயால், பெரிய உயிரிழப்புகள் ஏதும் நிகழ்ந்து விடக் கூடாது என்று தானே பதறுகிறது. உங்களுக்குப் பிடித்த, உங்கள் அன்பிற்கு நெருக்கமான, நீங்கள் நின்று, நடந்து இளைப்பாறும் வீட்டில் தானே, கொஞ்ச நாட்களுக்கு இருங்கள் என்று அறிவுறுத்துகிறது...அதை செய்வதில் உங்களுக்கு என்ன இடைஞ்சல்?

கடவுள் கூட, நடை சாத்திக்கொண்டு கோயிலுக்குள், நான்கு சுவர்களுக்குள் அமைதியாக உட்கார்ந்து இருக்கிறார். இது, அனைத்து மதத்தினருக்கும் பொருந்தும். கிறிஸ்தவர்களின் புனிதத் தலமான, வாடிகன் தேவாலயம் பூட்டப்பட்டு விட்டது. முஸ்லிம்களின் மெக்கா, மதினாவுக்கு யாரும் வர வேண்டாம் என, சவுதி அரேபிய அரசு, தடை உத்தரவே போட்டு விட்டது.அதை மீறி, விமானத்தில் சென்றோரை, நாட்டிற்குள்ளே விடாமல் தடுத்து நிறுத்தியது, அந்நாடு. நிலைமை அப்படி இருக்க, தென்காசியில் ஒரு சிலர், கும்பலாக கூடி, இறைவனை தொழுவேன் என்று அடம் பிடித்தது எந்த வகையில் நியாயம்?

இந்த நாட்டின் சட்டத்தை மதிக்க மாட்டேன் என்று அடம் பிடிப்பதற்கு, இதுவா நேரம்; உங்களின் அடத்தால், அப்பாவி உயிர்கள் அல்லவா பாதிக்கப்படுகின்றன?கொரோனா பிரச்னையை, மோடி முதன் முதலாக எழுப்பிய போது, 'சி.ஏ.ஏ., எனப்படும் குடியுரிமை திருத்த சட்டத்தை திசை திருப்பவே, மோடி இவ்வாறு சொல்கிறார்' என்று குற்றம் சாட்டினார், மேற்கு வங்க முதல்வர், மம்தா பானர்ஜி. இப்போது நிலைமை என்ன என்பது, மம்தாவுக்கே புரிந்திருக்கும்!

இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் முதல், ஸ்பெயின் இளவரசி மரியா தெரசா உட்பட யாரையும் விட்டு வைக்கவில்லை, இந்த கொரோனா. இதில், ஸ்பெயின் இளவரசி நோயிலிருந்து விடுபடாமலே உயிர் நீத்து விட்டார். பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனும், மருத்துவமனையில், ஐ.சி.யு.,வில் படுத்துக் கிடக்கிறார். அமெரிக்கா, ஸ்பெயின், இத்தாலி, இங்கிலாந்து போன்ற முன்னேறிய நாடுகளின் மக்களே, நோயின் கோரப்பிடியில் சிக்கி, உயிர் நீத்துக் கொண்டிருக்கும் போது, விளிம்பு நிலை மக்களை அதிகம் கொண்ட நம் நாட்டில், இந்த நோய் அதிகம் பரவினால் எப்படி தாங்கும்?

ஆகையால், 1,௦௦௦ பண பலம் இருந்தாலும், படை பலம் சுற்றி நின்றாலும், உலகமே மெச்சும் உயர் பதவியில் அமர்ந்து இருந்தாலும், இந்த நோயிலிருந்து நாம் தப்பிக்க, இப்போதைக்கு ஒரே வழி, வெளியில் வராமல், வீட்டிலிருப்பது தான். உங்கள் வீடு, அமைதி அற்றது எனினும், அது தான், உங்கள் உயிருக்கு பாதுகாப்பு என்பதை உணர வேண்டும்.கண்டம் விட்டு கண்டம் தாக்கும் ஏவுகணை; விண்ணைக் கிழித்துச் செல்லும் ராக்கெட்; ஒரு மனிதனைப் போலவே இன்னொரு மனிதனை உருவாக்கும், 'குளோனிங்' அறிவியல் நுட்பம் என, மனிதனின் அறிவு வானளாவி இருந்தாலும், கொரோனாவிற்கு பயந்து, வீட்டில் ஒளிந்திருக்க வேண்டிய நிலையில் தான் நாம் இருக்கிறோம்.இந்த நிதர்சனம் புரிந்து, அனைவரும் அவரவர் இல்லத்தில் இருங்கள்; கொரோனா இருள் அகன்ற பிறகு, சிறகை விரிக்கலாம். இப்போதைக்கு உங்கள் உயிர் இருப்பு, மிக மிக அவசியம் என்பதை உணருங்கள்!
இ.எஸ்.லலிதாமதி
பத்திரிகையாளர்-

தொடர்புக்கு:இ-மெயில்: lalithamathi2015@gmail.com

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
12-ஏப்-202009:18:08 IST Report Abuse
மோகன் அருமையான கட்டுரை சகோதரி அவர்களே.
Rate this:
Cancel
ravi - chennai,இந்தியா
11-ஏப்-202009:11:45 IST Report Abuse
ravi பொழுதுவிடிந்தால் கொரானா தடுக்கநினைப்பவன் சாகிறான் பரப்பநினைப்பவன் அலைகிறான் பன்றிகளால் பசுக்கள் பாதிக்கின்றன நன்றியில்லா ஜனங்கள் வாதிக்கின்றன பற்றுக்கொண்டவன் நாட்டைமதிக்கிறான் ஒட்டிக்கொண்டவன் வேட்டை ஆடுகிறான் சொன்னாலும் உரைக்கவில்லை தானேவும் எதுவும் தெரியவில்லை இறைவனை ஒதுக்கிவிட்டு பக்தியாம் ஊரானை அழிக்கும் இதற்குபெயர் சக்தியாம் விலங்காகவே வாழும் இவனுங்களை விலக்கவும் முடியலே இருக்கவும் முடியலே ஒழிந்துபோகவும் மாட்டேங்கிறான் ஒளியாக இருந்து வாழவும் மறுக்கிறான் எப்போதுதான் இவர்கள் மனிதனாவார்கள் அப்போதுதான் நாம் நிம்மதியாவோம் மனித உயிர்களை வைத்து விளையாடறான் புனிதம் என்று சொல்லி ஊரை ஏமாத்தறான் வெள்ளைதொப்பிக்குள் கறுப்பு எண்ணங்களை மறைத்துவைத்து நாட்டை கருக்குகிறான் தன்னுடைய தீவிரவாத பயங்கரவாத தீயில் அன்னை பாரதத்தை அப்படியே சுருக்குகிறான் தீக்குஞ்சில் முளைக்கும் புனித கைகளில் விழுந்து மடிகிறான் எல்லாமே தலைகீழாகத்தான் நினைக்கிறான் எழுதுவதும் தலைகீழாய் பார்ப்பதும் அப்படித்தானே குரான் புனிதநூலாம் உயிர்களை மதிக்குமாம் பயங்கரவாதம் தான் அதுசொன்ன அறிவுரையாம் கெட்டவனாய் இருக்க எதற்கு மசூதியாம் பட்டும் திருந்தவில்லை பாடம் எதற்காம் அழித்து வாழும் பிழைப்பில் எங்கே அர்த்தமாம் அழியும் நாள் தானே இவனுங்களுக்கு இறுதிசத்தமாம்
Rate this:
nicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா
13-ஏப்-202006:28:41 IST Report Abuse
 nicolethomsonமிக தெளிவாக சொல்லியுள்ளீர்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X