மக்கள் ஒழுக்கம் என்றால் சிங்கப்பூர் தான்; முதல் நாள் ஊரடங்கு எப்படியிருந்தது?

Updated : ஏப் 09, 2020 | Added : ஏப் 07, 2020 | கருத்துகள் (23+ 31)
Share
Advertisement
lockdown,quarantine,curfew,singapore,coronavirus,covid19

சிங்கப்பூர்: 'கொரோனா' அச்சுறுத்தல் காரணமாக, சிங்கப்பூரில், நேற்று முதல், ஒரு மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும், 'கொரோனா' வைரஸ் பரவாமல் கட்டுப்படுத்த, சமூக விலகலை கடைப்பிடிப்பது தான் ஒரே வழி. இதற்காக பல்வேறு நாடுகளில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. அவ்வகையில், சிங்கப்பூரில் நேற்று முதல், ஒரு மாதம் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படும் என, பிரதமர் லீ சியங் லூங் அறிவித்திருந்தார். அங்கு, தற்போது வரை 1,375 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதை கட்டுப்படுத்தும் நோக்கில், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக கூறப்பட்டது. இந்த ஊரடங்கு உத்தரவை, முதல் நாளிலேயே, அங்குள்ள மக்கள் ஒழுக்கமாக பின்பற்றி அனைவருக்கும் முன்மாதிரியாக திகழ்ந்துள்ளனர்.


நடமாட்டம் குறைவு:

சமூக விலகலை கடைப்பிடிக்க, குறைந்தது ஒரு மீட்டர் தொலைவை பின்பற்றுதல், அதிக மக்கள் கூடும் ஓட்டல்களில், இருக்கைகள் அகற்றப்படுதல் என, அனைத்து விதமான முன்னேற்பாடுகளும், மக்களே முன்வந்து பின்பற்றுகின்றனர்.

ராபிள்ஸ் பிளேஸில் உள்ள வங்கியில் பணிபுரியும் கெவின் கே என்பவர் கூறுகையில், ''சில வாரங்களுக்கு முன் இருந்த வழக்கமான கூட்டம், தற்போது குறைந்துள்ளது. சிலர் வீட்டில் இருந்தே வேலை செய்ய துவங்கியுள்ளனர். கண்களை மூடிக்கொண்டே சுற்றினாலும், யார் மீதும் மோத வாய்ப்பு குறைவு தான். அந்தளவிற்கு மக்கள் நடமாட்டம் குறைந்துள்ளது,'' என்றார்.

இன்று முதல் பள்ளிகளும் மூடப்படும் என அறிவித்துள்ளதால், தற்போது குழந்தைகளை பள்ளிக்கு அழைத்து செல்லும் பெற்றோர் கூட, வெளியே வரமாட்டார்கள். எனவே, ''ஊரடங்கின் தாக்கம் இன்று தான் உணரப்படும்,'' என மற்றொரு வங்கி ஊழியரான கென்னி சுவா கூறினார். ஆனால், அனைவரும் வீட்டிலேயே சமைத்து சாப்பிட வேண்டிய நிலை ஏற்பட்டதால், சந்தையில் இறைச்சி கடையில் வழக்கத்தை விட வர்த்தகம், சற்று விறுவிறுப்பாக இருந்ததாகவும் கூறப்படுகிறது.

சந்தைக்கு அருகிலுள்ள ஓட்டல்களில், அனைத்து இருக்கைகளும் அகற்றப்பட்டன. இதனால் சாப்பிட வந்தவர்கள் இடம் கிடைக்காமல் அவதிப்பட்டனர். இருக்கைகள் வைத்திருந்தால், சமூக விலகல் கடைப்பிடிப்பது சிரமம் என அகற்றப்பட்டதாக கூறப்படுகிறது.


வெறிச்சோடிய கடைகள்:

மீன் சூப் கடையின் உரிமையாளர் கூறுகையில், 'காலை முழுவதும் வாடிக்கையாளர்கள் வரவில்லை. எல்லோரும் வீட்டில் சமைக்கிறார்கள். இப்படியே ஒரு மாதத்துக்கு தொடர்ந்தால், நாங்கள் அவ்வளவு தான்' என்றார். நேற்று, சிங்கப்பூர் முழுவதும், பல்வேறு அரசு நிறுவனங்களை சேர்ந்த மொத்தம் 2,600 அதிகாரிகள், தொலைதூர தூதர்கள் மற்றும் அமலாக்க அதிகாரிகளாக நிறுத்தப்பட்டனர். ஷாப்பிங் மால்களில், பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டதால் வெறிச்சோடி காணப்பட்டன.

ஆர்ச்சர்ட் சாலை ஒரு பேய் நகரமாக காட்சியளித்தது. எப்போதும் அதிகளவு இருக்கும் ஐஸ்கிரீம் வண்டிகள் கூட, அப்பகுதியில் காணப்படாத நிலையில், நடைபாதைகள் வெறிச்சோடின. மக்களின் உரையாடல், போக்குவரத்து நெரிசல் போன்ற வழக்கமான சலசலப்புகள் இன்றி காணப்பட்டன. நெக்ஸ் ஷாப்பிங் மால், மதிய உணவு நேரத்தில் வெறிச்சோடியது.

செரங்கூன் எம்.ஆர்.டி., நிலையம், வழக்கமாக வார நாட்களில், காலை 8:30 மணி முதல் காலை 9:00 மணி வரை நிரம்பி வழியும். ஆனால், நேற்று காலையில் இருந்து காலியாக இருந்தது. ரயில்கள் வந்தால் பெரும்பாலும், ஒரு நிமிடத்துக்குள் இருக்கைகள் நிரம்பிவிடும். ஆனால், பெரும்பாலான ரயில்களில் அனைவருக்கும் இருக்கைகள் கிடைத்தன.

Advertisement
வாசகர் கருத்து (23+ 31)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ray - Chennai,இந்தியா
09-ஏப்-202007:03:11 IST Report Abuse
Ray வேறே ஒண்ணுமில்லே அங்கே அந்த ரோத்தா அடி இருக்கே அதன் மகிமைதான் நான் யார் தெரியுமாண்ணேல்லாம் டான்ஸ் ஆட முடியாது அதற்க்கு முன்னே அடி விழுந்துடும் எவரும் அந்த அடியில் ஆடித்தான் போயிடனும்
Rate this:
Cancel
NARAYANAN.V - coimbatore,இந்தியா
08-ஏப்-202021:03:50 IST Report Abuse
NARAYANAN.V தேவலோகத்தில் உள்ள அரக்கர்கள் எல்லாம் அரசியல்வாதிகள் வேடம் பூண்டு இந்தியாவிற்குள் வந்து நுழைந்து பல மாமாங்கங்கள் ஆகிவிட்டதாக நான் கருதுகிறேன் .இங்கே நிர்வாகம் என்ற பெயரில் தினசரி இலவசங்களை அறிவிப்பதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள்.இங்கு நாற்காலியே குறி என்று அரசியல்வாதிகள் நாட்களைக் கடத்திக்கொண்டு இருப்பதை நாம் பலகாலமாகப் பார்த்துக்கொண்டு இருக்கிறோம்.இவர்கள் நாற்காலியைப் பிடிக்கப் போடும் ஆட்டத்தில் பொதுமக்கள் நிற்கதியாவதுதான் தொடர்கிறது. அரசியல்வாதிகள் செய்யும் கண்கட்டு வித்தைகளில் நாம் ஏமாறாமல் இருந்தால் மட்டும் தான் நம் நாட்டையும் சிங்கப்பூர் போல ஆக்க முடியும்.
Rate this:
Cancel
SSP - Ramnad,இந்தியா
08-ஏப்-202020:03:21 IST Report Abuse
SSP This news is not correct at all. First of all, there is no lockdown imposed in Singapore, they call it circuit breaker. Companies are asked to allow the employees work from home. Essential services are still on, taxis, and public transport such as Bus, Train services are operational. Supermarkets, grocery shops and we markets are . Food court and restaurants are still but only for pick up, no dine in. People are allowed walk/jog outside. Overall, it is normal as usual. So this news is not correct at all.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X