அரசியல் செய்தி

தமிழ்நாடு

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்ய வைகோ வலியுறுத்தல்

Added : ஏப் 07, 2020 | கருத்துகள் (6)
Share
Advertisement

சென்னை, ஏப். 8-'பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்ய வேண்டும்' என, ம.தி.மு.க., பொதுச்செயலர், வைகோ கூறியுள்ளார்.

அவரது அறிக்கை:பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தள்ளி போனதால், தேர்வு எழுத துடித்துக் கொண்டிருந்த லட்சக்கணக்கான, மாணவ, மாணவியர் துவண்டு விட்டனர். துள்ளி விளையாட வேண்டிய இளம் பிஞ்சுகள், ஊரடங்கு உத்தவரால், மன உளச்சலுக்கு ஆளாகி, முடங்கி கிடக்கின்றனர்.மாணவர்களின் கல்வித் திறனை, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளில், மேம்படுத்திக் கொள்ளும் வாய்ப்பு இருக்கிறது.எனவே, தமிழக அரசு, இந்த கல்வி ஆண்டில், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்ய வேண்டும்.

அனைத்து மாணவர்களையும், தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்க வேண்டும்.மேலும், தொழிலாளர் வாழ்வாதாரத்திற்கு, அடிப்படையான சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால், தொழிலாளர்களின் வாழ்க்கை நெருக்கடிக்கு ஆளானது மட்டுமின்றி, தொழில் முனைவோரும், பெரும் பாதிப்புகளை சந்திக்கும் நிலைமை உருவாகி வருகிறது.வாழ்வாதாரம் இழந்துள்ள தொழிலாளர்களுக்கு, உதவித் தொகையாக, மாதம், 15 ஆயிரம் ரூபாய் வழங்க, மத்திய, மாநில அரசு உதவிக்கரம் நீட்ட வேண்டும்.தொழில் துறை போலவே, வேளாண்மை தொழிலும், மிகக் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது.

விவசாயத் தொழிலாளர்களுக்கு, கொரோனாவில் இருந்து, முழுமையாக விடுபடும் வரையில், உதவித் தொகையாக, மாதம், 10 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Parthasarathy Badrinarayanan - jakarta,இந்தோனேசியா
08-ஏப்-202009:38:50 IST Report Abuse
Parthasarathy Badrinarayanan சைகோ உளற ஆரம்பித்து விட்டார். நல்லவேளை ப்ளஸ் டூ பரீட்சை முடிந்துவிட்டது. இல்லாவிடில் அதையும் ரத்து செய்யக் கேட்பார்கள்
Rate this:
s.rajagopalan - chennai ,இந்தியா
08-ஏப்-202012:35:02 IST Report Abuse
s.rajagopalanநீட் தேர்வையும் ரத்து செய்ய வேண்டும் என்றும் சொல்லியிருக்கலாமே ? யாரும் இவரை கண்டுகொள்வதில்லை ...இஷ்டத்திற்கு உளறலாமே ? ஆ ..மா....அதென்ன ம தி மு க தலீவர்னு போடுறீங்க ...? அந்த கட்சி எப்போதோ இருந்ததாக நினைவு...
Rate this:
Cancel
veeramani - karaikudi,இந்தியா
08-ஏப்-202006:45:17 IST Report Abuse
veeramani ஒரு கல்வியாளராக எனது கருத்து..நிச்சயம் பத்தாம் வகுப்பு தேர்வு நடைபெற வேண்டும். மாணவர்களின் கற்கும் திறனை சோதித்து பார்ப்பதுதான் பள்ளி இறுதி தேர்வு . இதிலு சலுகை வேண்டாம்.அனால் ஜூன் மாதம் தேர்வு நடத்தலாம். மாணவர்களுக்கு அப்பொழுதுதான் கல்வியின் அருமை தெரியும். மேலும் இந்த வருடம் பள்ளிகளை ஆகஸ்ட் மாதம் திறக்கலாம். ஆனால் பாடங்களை போதிப்பதற்கு சனி, ஞாயிறு நிச்சயம் பள்ளிகளை நடத்தவேண்டும். அரசியல் இதில் பண்ணுவது மாணவர்களுக்கு நன்மை பயக்காது.
Rate this:
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
08-ஏப்-202006:39:38 IST Report Abuse
Bhaskaran Nee innumaa veliyil irukke onnai pannai veettil moonruadukku paathu kaapoda paththiramaa irukennusonnaangale
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X