அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஊரடங்கை நீட்டிக்க தினகரன் கோரிக்கை

Added : ஏப் 07, 2020
Share
Advertisement

சென்னை : 'தேவைப்பட்டால் ஊரடங்கை, மேலும் சில வாரங்கள் நீட்டிக்க வேண்டும்' என, அ.ம.மு.க., பொதுச்செயலர், தினகரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

அவரது அறிக்கை:கொரோனா தொற்று நோய் பாதிப்பில், தமிழகம், இரண்டாமிடத்தில் இருப்பது, கவலை அளிக்கிறது. இதனால், நாம் அனைவரும் இணைந்து, முழு வீச்சில் கொரோனாவை எதிர்த்து போரிட வேண்டிய, கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது.அடுத்த இரண்டு வாரங்கள், இன்னும் சவால் நிறைந்ததாக இருக்கும் என, வல்லுனர்கள் எச்சரித்து வருகின்றனர். மக்களை முழுமையாக காப்பாற்ற, தேவைப்பட்டால், வரும், 14க்கு பின், ஓரிரு வாரங்களுக்கு, ஊரடங்கை நீட்டிக்கலாம்.

அப்படி அமல்படுத்துவதற்கு முன்பாக, தமிழக அரசு, கொரோனா பரிசோதனை மற்றும் சிகிச்சையிலும், மக்களின் வாழ்வாதாரத்திற்கான ஏற்பாடுகளை செய்வதிலும், உரிய கவனம் செலுத்த வேண்டும்.டாக்டர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள் போன்றோருக்கு, போதுமான கவச உடைகள் கிடைப்பதை, அரசு உறுதி செய்ய வேண்டும். நடமாடும் அம்மா உணவகங்களை செயல்படுத்துவது, மக்களுக்கு பேருதவியாக இருக்கும். இவ்வாறு, தினகரன் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X