அரசியல் செய்தி

தமிழ்நாடு

'அரசியல் சூழ்ச்சி இப்போது தேவையா?': ஸ்டாலின்

Updated : ஏப் 08, 2020 | Added : ஏப் 07, 2020 | கருத்துகள் (14)
Share
Advertisement
சென்னை: 'உயிர் காக்கும் நேரத்திலும், அரசியல் சூழ்ச்சிகளில், அ.தி.மு.க., அரசு ஈடுபடுவது சரியல்ல' என, தி.மு.க., தலைவர், ஸ்டாலின் கூறியுள்ளார்.'டுவிட்டர்' பக்கத்தில், அவர் கூறியிருப்பதாவது: அரவக்குறிச்சி, தி.மு.க., - எம்.எல்.ஏ., செந்தில் பாலாஜி, தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து, கரூர் மாவட்ட அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு, நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்.'கொரோனா'
dmk,stalin,mkstalin,திமுக,ஸ்டாலின்

சென்னை: 'உயிர் காக்கும் நேரத்திலும், அரசியல் சூழ்ச்சிகளில், அ.தி.மு.க., அரசு ஈடுபடுவது சரியல்ல' என, தி.மு.க., தலைவர், ஸ்டாலின் கூறியுள்ளார்.

'டுவிட்டர்' பக்கத்தில், அவர் கூறியிருப்பதாவது: அரவக்குறிச்சி, தி.மு.க., - எம்.எல்.ஏ., செந்தில் பாலாஜி, தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து, கரூர் மாவட்ட அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு, நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்.'கொரோனா' நோயால் பாதிக்கப்பட்ட, அவரது தொகுதி மக்கள், அங்கு தான் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிதி ஒதுக்கீட்டை, முதலில் ஏற்ற நிர்வாகம், பின் மறுத்திருப்பது கண்டனத்துக்குரியது. உயிர் காக்கும் நேரத்திலும், அரசியல் சூழ்ச்சிகளில், அ.தி.மு.க., அரசு ஈடுபடுவது சரியல்ல. முறையான அனுமதி வழங்கி, மக்களை காக்குமாறு, முதல்வரை கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

செந்தில் பாலாஜி, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்; தினகரன் ஆதரவாளராக இருந்து, பின், தி.மு.க.,வில்இணைந்தவர்.

Advertisement




வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
chenar - paris,பிரான்ஸ்
14-ஏப்-202022:48:43 IST Report Abuse
chenar திட்டுகிறார்களா ? ஆமாம் அப்போ இவர் சொல்றது சரி
Rate this:
Cancel
jayanantham - tamilnaadu ,இந்தியா
13-ஏப்-202006:15:29 IST Report Abuse
jayanantham சூழ்ச்சியின் ஊற்றுக்கண்ணே, நயினா தானே சுடலை. இதை இந்த உலகம் உள்ளவரை மறுக்கவோ மாற்றவோ முடியாது. உங்க ஆட்கள் உதவி செய்யிறேன் பேர்வழி என்ற சாக்கில், தம்பட்டம் அடிக்க கார் ஊர்வலம், கட்சி கும்பல் என்று ஊரடங்கு உத்தரவுக்கே பங்கம் விளைவித்து அரசுக்கு குடைச்சல் கொடுக்கும் சதித்திட்டம் ஊருக்கே தெரியும் சுடலை. முதலைக்கண்ணீர் நடிப்பதிலும் மு.க.தான் மன்னர்......
Rate this:
Cancel
Muruga Vel - Mumbai,இந்தியா
12-ஏப்-202020:07:33 IST Report Abuse
 Muruga Vel இன்னிக்கு ஏதாவது அறிக்கை விடாம இருந்தா வீட்ல மொத்து விழும் போல இருக்கு ..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X