சிறப்பு பகுதிகள்

பக்கவாத்தியம்

'என்ன கொடுமை சார் இது...'

Added : ஏப் 07, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
 'என்ன கொடுமை சார் இது...'

திண்டுக்கல்லில், 'அம்மா' உணவகம், ரேஷனில், 1,000 ரூபாய் நிவாரண தொகை வழங்குதல் போன்றவற்றை, வனத்துறை அமைச்சர், சீனிவாசன், சமீபத்தில் ஆய்வு செய்தார்.பின், நிருபர்களிடம், அவர் கூறுகையில், 'சமூக விலகலை கடைப்பிடித்து, பொருட்கள் வாங்கும் மக்களுக்கு, மாநகராட்சி சார்பில், சிறப்பு பரிசு திட்ட, 'டோக்கன்' வழங்கப்படும்.

இம்மாத முடிவில், குலுக்கல் முறையில் பரிசு வழங்கப்படும். முதல் பரிசாக, பிரிட்ஜ்; இரண்டாவது பரிசாக, இரு நபர்களுக்கு, பீரோ; மூன்றாவது பரிசாக, மூன்று நபர்களுக்கு, குக்கர்; சிறப்பு பரிசாக, 108 பேருக்கு, சேலை வழங்கப்படும்' என்றார்.

அங்கிருந்த நிருபர் ஒருவர், 'மக்களுக்கு இலவசம் வாங்கி பழகிருச்சுன்னு, அமைச்சருக்கு தெரிஞ்சுருக்கு... அதான், நோய் பரவலை தடுக்க, பரிசு வழங்குறார்... நம் மக்களை திருத்தவே முடியாது...' என்றார்.அருகிலிருந்த சக நிருபர், 'என்ன கொடுமை சார் இது...' என்றதும், சுற்றியிருந்தோர் சிரித்தனர். -

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Girija - Chennai,இந்தியா
08-ஏப்-202007:00:03 IST Report Abuse
Girija ஓசியில் எதையும் வாங்கியது இல்லையா ?
Rate this:
Cancel
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
08-ஏப்-202006:21:06 IST Report Abuse
D.Ambujavalli ‘நீயும் உன் குடும்பமும் நோய்ப்படாமல் இருக்கவும், ஊர் பூரா பரப்பாமல் இருக்கவும் நீ இடைவெளி விடுகிறாய். ‘ என்று விழிப்புணர்த்தாது, ஏதோ பெரிய தியாகம் செய்வது போல் மக்கள் நினைத்து, அதற்கும் ‘இலவச’ லஞ்சம் எதிர்பார்க்க வைத்திருக்கிறாரே நியாயமில்லாமல் வாங்கிய கைதான் கொடுக்க நீளும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X