அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஏப்., 14ம் தேதிக்கு முன்பே 'டாஸ்மாக்' திறப்பு இல்லை

Added : ஏப் 08, 2020
Share
Advertisement
நாமக்கல் : ''வரும், 14ம் தேதி வரை, தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாது,'' என, மின்சாரம் மற்றும் மதுவிலக்கு துறை அமைச்சர் தங்கமணி கூறினார். நாமக்கல்லில் நேற்று அவர் அளித்த பேட்டி:நாமக்கல் மாவட்டத்தில்,இதுவரை, 28 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு லட்சத்து, 12 ஆயிரம் பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.அரசுக்கு இழப்புகரூர், மருத்துவக் கல்லுாரி

நாமக்கல் : ''வரும், 14ம் தேதி வரை, தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாது,'' என, மின்சாரம் மற்றும் மதுவிலக்கு துறை அமைச்சர் தங்கமணி கூறினார்.

நாமக்கல்லில் நேற்று அவர் அளித்த பேட்டி:நாமக்கல் மாவட்டத்தில்,இதுவரை, 28 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு லட்சத்து, 12 ஆயிரம் பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.அரசுக்கு இழப்புகரூர், மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை என்பதால், அங்கு, 500 படுக்கைகள் உள்ளன. மேலும், மருத்துவர்கள் அதிகம் பேர் இருப்பதால், நாமக்கல், திண்டுக்கல் மாவட்டத்தில், கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், அங்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஊரடங்கு அமலில் இருக்கும் வரும், 14ம் தேதி வரை, டாஸ்மாக் கடைகள் திறப்பு இல்லை.

அதற்கு மேல் என்ன முடிவு எடுப்பது என்பது, இப்போது தெரியாது. மதுவுக்கு அடிமையானவர் களுக்கு, அரசு மருத்துவ கல்லுாரியில் கவுன்சலிங் கொடுப்பதற்காக, நிதி ஒதுக்கீடு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. டாஸ்மாக் கடைகளை மூடியிருப்பதால், ஒரு நாளைக்கு, 80 கோடி ரூபாய், அரசுக்கு இழப்பு ஏற்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார். 5 பேர் சஸ்பெண்ட்கடந்த, 5ம் தேதி இரவு, நாமக்கல் பஸ் ஸ்டாண்டில் உள்ள டாஸ்மாக் கடையில், தடையை மீறி, மது விற்பனை செய்தது தெரியவந்தது.

கடையில் ஆய்வு செய்தபோது, இருப்பு குறைந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, கடை மேற்பார்வையாளர் மற்றும் விற்பனையாளர்கள் என ஐந்து பேரை, டாஸ்மாக் மாவட்ட மேலாளர் பண்டரிநாதன், சஸ்பெண்ட் செய்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X