அரசியல் செய்தி

தமிழ்நாடு

மயிலாடுதுறை மாவட்டம் அரசாணை வெளியீடு

Added : ஏப் 08, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

சென்னை : தமிழகத்தின், 38வது மாவட்டமாக, மயிலாடுதுறை மாவட்டம் உருவாக்க, நேற்று அரசாணை வெளியிடப்பட்டது.

தமிழகத்தில், 32 வருவாய் மாவட்டங்கள் இருந்தன. 2019ல், புதிதாக, செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, திருப்பத்துார், தென்காசி என, ஐந்து மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன. இதனால், மாவட்டங்களின் எண்ணிக்கை, 37 ஆக உயர்ந்தது.இந்நிலையில், மார்ச்சில் நடந்த சட்டசபை கூட்டத்தில், 'நாகப்பட்டினம் மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து, தமிழகத்தின், 38வது மாவட்டமாக, மயிலாடுதுறை மாவட்டம் உருவாக்கப்படும்' என, முதல்வர், இ.பி.எஸ்., அறிவித்தார் .

அதைத் தொடர்ந்து, தடையுத்தரவு காலம் மற்றும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் முடிந்த பின், புதிய மாவட்டத்தை உருவாக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள, வருவாய் துறை செயலருக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.இதற்கான அரசாணையை, தமிழக அரசின் தலைமை செயலர், சண்முகம் வெளியிட்டுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pannadai Pandian - wuxi,சீனா
08-ஏப்-202018:18:26 IST Report Abuse
Pannadai Pandian நல்ல தலைவர் எடப்பாடி. இவரது வழிகாட்டுதலின் பேரில் போலீஸ் அபாரமாக அர்ப்பணிப்பு உணர்வுடன், மக்களை காக்க தங்களை வருத்தி செயல் படுகிறது. எல்லா புகழும் எடப்பாடிக்கே.....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X