பொது செய்தி

தமிழ்நாடு

நாட்டு மக்கள் நலனே முக்கியம்: சொல்கிறார் சிவகணேஷ்

Updated : ஏப் 08, 2020 | Added : ஏப் 08, 2020 | கருத்துகள் (9)
Share
Advertisement
covid-19, corona, coronavirus, fight against corona, people's welfare, corona in TN, corona in Tamil Nadu,

கோவை: ''கொரோனாவால் நாடு இக்கட்டான சூழலில் தவிக்கும் வேளையில், நம்மிடம் இருக்கும் பணத்தை பூட்டி வைத்தால், அது மிகப்பெரிய துரோகம் ஆகி விடும்,'' என்கிறார், கோவை ஸ்ரீதேவி டெக்ஸ்டைல்ஸ் உரிமையாளர் சிவகணேஷ்.

கோவையை சேர்ந்த இவர், ஆன்மிகத்தில் அதிக ஈடுபாடு கொண்டவர். வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் கோசாலை நடத்தி வருகிறார். பல்வேறு ஆன்மிகம், தர்ம காரியங்களுக்கு உதவி செய்வதை வழக்கமாக கொண்டுள்ள சிவகணேஷ், தமிழக அரசுக்குகொரோனா நிவாரண நிதியாக, ஒரு கோடி ரூபாய், முதல்வரிடம் கொடுத்துள்ளார்.

ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டோருக்கு உணவு வழங்கும் பணியிலும் முன்னிற்கிறார். போலீசார், துாய்மைப் பணியாளர்கள், வீடில்லா தொழிலாளர்கள், பாதுகாவலர்கள் என, தினமும் 4,500 பேருக்கு இலவசமாக, உணவு வழங்கி வருகிறார்.

சிவகணேஷ் கூறுகையில், ''உணவு வழங்குவதோ, உதவி செய்வதோ நான் தேசத்துக்கு செய்யும் சேவை கிடையாது. இந்த நேரத்தில் பணத்தை வைத்துக்கொண்டு, இது போன்ற நற்காரியம் செய்யாமல் இருந்தால், அது நாட்டுக்கு செய்யும் துரோகம் ஆகி விடும். நாடு, கொரோனா பாதிப்பால் இக்கட்டான சூழ்நிலையில் தத்தளிக்கிறது.

இந்த நேரத்தில் நம்மிடம் இருக்கும் பணத்தை பூட்டி வைப்பது தவறு. விரைவில் நிலைமை சரியாக வேண்டும். இதே நிலை நீடித்தால், இன்னும் கூடுதலான உதவிகளை மக்களுக்கு செய்வதற்கு தயாராக இருக்கிறேன். பணம் முக்கியமில்லை. நாட்டு மக்கள் நலனே முக்கியம்,'' என்றார்.

Advertisement
வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vbs manian - hyderabad,இந்தியா
08-ஏப்-202019:09:10 IST Report Abuse
vbs manian மழை நிச்சயம் இவரை போன்று சிலர் இருப்பதால்.
Rate this:
Cancel
Samuel -  ( Posted via: Dinamalar Android App )
08-ஏப்-202013:29:44 IST Report Abuse
Samuel I am very much happy to see and hear that humanity and humans are still alive thanks and hats off to u sir my knee bows to u sir
Rate this:
Cancel
s.rajagopalan - chennai ,இந்தியா
08-ஏப்-202012:47:10 IST Report Abuse
s.rajagopalan இன்றைய பிரச்னை கஞ்சத்தனம் அல்ல ..இவர் சொல்வதை எல்லோரும் ஏற்பார்கள். ஆனால் நம் அரசியல்வாதிகளை நம்ப முடியவில்லையே ? நேர்மையற்றவர்களாக இருக்கிறார்களே ? செல்வதில் பிறந்து செல்வத்திலும் கல்வியிலும் புரண் ட ஒரு அமைச்சராயிருந்தவருக்கு கூட பணப்பேய் பிடித்திருக்கிறதே ?
Rate this:
venkat - chennai,இந்தியா
09-ஏப்-202015:40:53 IST Report Abuse
venkatபசி...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X