பொது செய்தி

இந்தியா

இளம் ஜோதிடர் அபிக்ஞாவின் இன்னொரு முன்னெச்சரிக்கை

Updated : ஏப் 08, 2020 | Added : ஏப் 08, 2020 | கருத்துகள் (91)
Share
Advertisement

மைசூரு: கொரோனா வைரஸ் உருவாகி பரவுவதற்கு முன்பே, 'உலகிற்கு ஆபத்து' என, எச்சரிக்கை விடுத்த, இளம் ஜோதிடர், அபிக்ஞா ஆனந்த், வரும் டிசம்பர் மாதம் மற்றொரு பேரழிவு ஏற்படும் என, எச்சரித்துள்ளார்.



latest tamil news



உலகம் முழுவதும், கொரோனா வைரசின் தாக்குதல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த பேரழிவு குறித்து, இந்தியாவை சேர்ந்த இளம் ஜோதிடர், அபிக்ஞா ஆனந்த், கடந்த ஆகஸ்ட் மாதமே, சமூக வலைதளத்தில் ஒரு, 'வீடியோ' வெளியிட்டார். 'நவ., 2019 முதல் ஏப்., 2020வரை உலகிற்கு மிகப்பெரும் ஆபத்து' என, தலைப்பிடப்பட்ட அந்த வீடியோவில், மக்களை பெரும் துன்பத்தில் ஆழ்த்தி வரும், கொரோனா வைரசின் தாக்குதல், மே, 31ம் தேதியுடன் முடிவுக்கு வரும் என, கூறி இருந்தார்.

அடுத்தகட்டமாக, 'மே, 31ம் தேதியில் வைரஸ் பரவல் முடிவுக்கு வராது; இரண்டு நாட்கள் குறைந்து பின், ஜூன்,30ம் தேதி வரை பாதிப்பு தொடரும். அது வரையிலும் மக்களுக்கு நல்ல செய்தி கிடைக்காது' என, கூறியிருந்தார்.

இந்நிலையில், அபிக்ஞா ஆனந்த் வெளியிட்டுள்ள புதிய வீடியோவில், 'இந்த ஆண்டு, டிச., 20ம் தேதி, உலகிற்கு மற்றொரு பேரழிவு ஏற்படும்' என, தெரிவித்து உள்ளார்.வீடியோவில், அவர் கூறியிருப்பதாவது: வரும், டிச., 20ம் தேதி, உலகை தாக்கும் புதிய பேரழிவு, அடுத்த ஆண்டு மார்ச், 31ம் தேதி வரை நீடிக்கும்.


latest tamil news



இது கொரோனா தொற்றை விட கொடியதாக இருக்கும். நம் நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டினால் மட்டுமே, புதிதாக உருவாகும் தொற்றுகளிலிருந்து, நம்மை பாதுகாக்க முடியும். அடுத்து, விலங்குகளை கொல்வதை நாம் நிறுத்த வேண்டும். இயற்கை அன்னைக்கு எதிரான நடவடிக்கைகளால், நம் கர்மவினை உயர்கிறது.இதை நிறுத்தாவிட்டால், பூமித்தாயின் கோபத்திற்கு ஆளாக நேரிடும். இறைச்சிவிற்பனையாளர்கள், ஒரு தியாகமாக நினைத்து, தங்கள் தொழிலை நிறுத்த வேண்டும். இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (91)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ocean kadappa india - kadappa,இந்தியா
13-ஏப்-202016:42:48 IST Report Abuse
ocean kadappa india எவரோ எழுதிக்கொடுத்ததை இந்த பிள்ளையாண்டான் சொல்லிக்கொண்டிருக்கிறார்.
Rate this:
Cancel
ocean kadappa india - kadappa,இந்தியா
13-ஏப்-202016:40:15 IST Report Abuse
ocean kadappa india ஹசன் குரானும் டுபாக்கூர் தான்.
Rate this:
Cancel
ocean kadappa india - kadappa,இந்தியா
13-ஏப்-202016:37:57 IST Report Abuse
ocean kadappa india இனி உலகிற்கு ஆபத்து என எல்லாருக்கும் தெரியும்.இந்த பூமி கால சர்ப்ப தோஷத்தில் சிக்கியுள்ளது. இந்த தோஷம் ஜூன் 30வரை இருக்கும். இந்த பிள்ளையாண்டான் இதை வெளியில் சொல்லாமல் பூடகமாக சொல்லுகிறார்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X