அரசியல் செய்தி

தமிழ்நாடு

மாலையில் உத்தரவு; இரவில் வாபஸ்

Added : ஏப் 08, 2020
Share
Advertisement

சென்னை : தமிழகத்தில், இரும்பு, சிமென்ட், உரம், சர்க்கரை உட்பட, 13 தொழிற்சாலைகள் செயல்பட, அனுமதி அளித்து வெளியிட்ட உத்தரவு, அடுத்த சில மணிநேரத்தில், தமிழக அரசால் திரும்பப் பெறப்பட்டது.

தமிழகத்தில், 144 தடைஉத்தரவு அமலில் உள்ள நிலையில், மத்திய அரசு அறிவுரையின்படி, அத்தியாவசிய பொருட்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் செயல்பட, தமிழக அரசு அனுமதி வழங்கியிருந்தது. அனுமதி வழங்கப்பட்ட ஆலைகள் குறித்து, அதிகாரிகளிடம் குழப்பம் நிலவியது. அதைத் தொடர்ந்து, தலைமைச் செயலர், சண்முகம், அனைத்து துறை செயலர்கள் மற்றும் மாவட்ட கலெக்டர்களுக்கு, கடிதம் எழுதியுள்ளார்.

அதில், அவர் கூறியிருப்பதாவது:தமிழகத்தில், அத்தியாவசிய பொருட்கள் தயாரிப்பு தொழிற்சாலைகளுடன், இரும்பு, சுத்திகரிப்பு, சிமென்ட், ரசாயனம், உரம், ஜவுளி, சர்க்கரை, கண்ணாடி, காகிதம், 'டயர்' உட்பட, 13 ஆலைகள் செயல்பட, தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை, 'பேக்' செய்யவும், ஏற்றுமதி செய்யவும், அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.எனினும், இந்த உத்தரவு வெளியான சில மணிநேரத்தில், அதை தமிழக அரசு திரும்பப்பெற்றது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X