அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஊரடங்கை மீறினால் நுாதன தண்டனை: வாசன்

Added : ஏப் 08, 2020
Share
Advertisement

சென்னை : 'தேவையில்லாமல், இருசக்கர வாகனங்கள் ஓட்டி வருபவர்களை கண்டுபிடித்து, சாலை போக்குவரத்து பணியில், ஒரு நாள் முழுவதும் ஈடுபடுத்த வேண்டும்' என, த.மா.கா., தலைவர், வாசன் கூறியுள்ளார்.

அவரது அறிக்கை:தமிழகத்தில், கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, அரசின் விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டியது, ஒட்டு மொத்த மக்களின் கடமை. கொரோனா வைரஸ் பாதிப்பு, நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது. சென்னை உள்ளிட்ட பெருநகர மாவட்டங்களில், அவசியமில்லாமல், இருசக்கர வாகன ஓட்டிகள் வெளியே பயணிப்பது அதிகரித்து வருகிறது.போலீசாரிடம் மாட்டும், இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு தரப்படும் சிறு தண்டனைகளை பார்த்து, மற்ற இருசக்கர வாகன ஓட்டிகள் திருந்துவதாக தெரியவில்லை.

அரசின் விதிமுறைகளை கடைப்பிடிக்காமல், இருசக்கர வாகனத்தில் தேவையில்லாமல் செல்பவர்களுக்கு, உடனடி தண்டனையாக, போலீசாரின் போக்குவரத்து பணிகளில், ஒரு நாள் முழுவதும் ஈடுபடுத்த வேண்டும்.இவ்வாறு, வாசன் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X