குடிபெயர்ந்த தொழிலாளர்களுக்கு ஊதியம்; உச்ச நீதிமன்றம் மறுப்பு

Updated : ஏப் 09, 2020 | Added : ஏப் 08, 2020 | கருத்துகள் (8)
Share
Advertisement
supremecourt,SC,lockdown,quarantine,21days,curfew,உச்சநீதிமன்றம், மறுப்பு

புதுடில்லி : கொள்கை முடிவுகள், மத்திய அரசின் தனிப்பட்ட உரிமை என்பதால், அதில் தலையிட மறுத்த உச்ச நீதிமன்றம், குடிபெயர்ந்த தொழிலாளர்களுக்கு, ஊதியம் வழங்குவது தொடர்பாக, இப்போதைக்கு உத்தரவு பிறப்பிக்க, நேற்று மறுத்துவிட்டது.

'கொரோனா' தடுப்பு நடவடிக்கையாக, 21 நாட்கள் முழு அடைப்புக்கு, மத்திய அரசு உத்தரவிட்டதை அடுத்து, பல்வேறு மாநிலங்களில் இருந்தும், பிழைப்புக்காக குடிபெயர்ந்த தொழிலாளர்கள், வேலை மற்றும் வருமானம் இன்றி, இன்னல்களுக்கு ஆளாகினர்.உத்தர பிரதேசத்தில் இருந்து டில்லிக்கு குடிபெயர்ந்த தொழிலாளர்கள், ஆயிரக்கணக்கில் திரண்டு, சொந்த ஊர்களுக்கு சென்றது, சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில், இரு சமூக ஆர்வலர்கள் சார்பில், உச்ச நீதிமன்றத்தில், பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டது. அதன் விபரம்:இந்த முழு அடைப்பு நாட்களில், குடிபெயர்ந்த தொழிலாளர்கள், வேலையின்றி, உணவின்றி பட்டினி கிடக்கும் நிலைக்கு ஆளாகி உள்ளனர்.

சொந்த ஊரில் உள்ள குடும்பத்தினருக்கு அனுப்ப, அவர்களிடம் பணம் இல்லை. இந்த முழு அடைப்பு காலகட்டத்துக்கு உண்டான கூலி, அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும். அடிப்படை வாழ்வாதாரம் உறுதி செய்யப்பட வேண்டும். இவ்வாறு, அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மனு, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே, நீதிபதிகள் எஸ்.கே.கவுல், தீபக் குப்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது.அப்போது, நீதிபதிகள் கூறியதாவது:சுகாதாரம் மற்றும் குடிபெயர்ந்த தொழிலாளர்களின் பணி நிர்வாகங்களை கையாளும் அளவுக்கு, நாங்கள் நிபுணர்கள் அல்ல.

புகார்களை பதிவு செய்வதற்கு, உதவி மையத்தை அமைக்குமாறு, மத்திய அரசுக்கு உத்தரவு பிறப்பிக்க முடியும். கொள்கை முடிவுகள் என்பது, அரசின் தனிப்பட்ட உரிமை. அதில், நாங்கள் தலையிட முடியாது.இவ்வாறு, அவர்கள் கூறினர். பின், வழக்கு விசாரணை, இம்மாதம் 13க்கு, ஒத்திவைக்கப்பட்டது.


22,000 முகாம்கள்


உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட, பொது நல மனு மீது, மத்திய அரசு தரப்பில், நேற்று விளக்கம் அளிக்கப்பட்டது.அதில், 'மாநில அரசுகள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சார்பில், நாடு முழுவதும், 578 மாவட்டங்களில், 22 ஆயிரம் நிவாரண முகாம்கள் நடத்தப்படுகின்றன. லட்சக்கணக்கான ஏழை எளிய மக்கள், இந்த முகாம்களில் தங்கியும், உணவு அருந்தியும் வருகின்றனர்' என, விளக்கம் அளிக்கப்பட்டது.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
08-ஏப்-202012:38:49 IST Report Abuse
ஆப்பு நல்லா வேணும். எதுக்கு குடி பெயர்ந்தாங்க? போட்ட 15 லட்சத்தையும், 2 கோடி வேலையில் ஒண்ணையும் அவிங்கவங்க கிராமத்தில் பாத்துக்கிட்டு நிம்மதியா வாழாமே.... அரசாங்கத்தையே குறை சொல்றாய்ங்க.
Rate this:
Cancel
vbs manian - hyderabad,இந்தியா
08-ஏப்-202012:27:09 IST Report Abuse
vbs manian வேலை இழந்து பசியால் தவிக்கும் மக்களுக்கு சிறிய ஊர்களில் காஞ்சி பெரியவர் சொன்ன வீடு தோறும் பிடி அரிசி திட்டத்தை நடைமுறை படுத்தி ஒரு வேளையாவது உணவு வழங்கலாம்.
Rate this:
Cancel
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
08-ஏப்-202011:11:33 IST Report Abuse
ஆரூர் ரங் புலம் பெயர் தொழிலாளிகள் பணிபுரிவது பெரிய கார்போரேட்டுகளில் அல்ல. பெரும்பாலும் நடுத்தர மற்றும் சிறு தொழில்களில்தான் . வருமானமே இல்லாமல் சம்பளம் கொடுத்தால் மூடவேண்டியதுதான் அரசு நிவாரண முகாம்களில் வைத்து கொடையாளர்கள்மூலம் உணவு உடை கொடுக்கலாம் .சாத்தியமில்லாததைச்செய்யசொல்லி கோர்ட்டுக்குப் போவது அர்த்தமில்லை .கொரோனவால் தொழில்கள் முடங்கி அரசு வரிவருமானமே முடங்கியுள்ளபோது தனியார் தொழிலாளிகளுக்கு முழு சம்பளம் சாத்தியமில்லை
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X