அரசியல் செய்தி

தமிழ்நாடு

குறைவாக நிதி ஒதுக்கியது ஏன்? மத்திய அரசுக்கு ஸ்டாலின் கேள்வி

Updated : ஏப் 09, 2020 | Added : ஏப் 08, 2020 | கருத்துகள் (83)
Share
Advertisement
dmk,stalin,mkstalin,திமுக,ஸ்டாலின்

சென்னை: 'தமிழகத்தில், கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில், மத்திய அரசு குறைவாக நிதி ஒதுக்கியது ஏன்; கொரோனாவிலும் அரசியல் தானா...' என, தி.மு.க., தலைவர், ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

அவரது அறிக்கை: மஹாராஷ்டிரா மாநிலத்தை அடுத்து, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, தமிழகத்தில் தான் அதிகம். கொரோனாவால், 234 பேர் பாதிக்கப்பட்ட, உ.பி., மாநிலத்திற்கு, 966 கோடி ரூபாய்; ஆனால், தமிழகத்திற்கு, 510 கோடி ரூபாய் தான், மத்திய அரசு நிவாரண நிதியாக ஒதுக்கி உள்ளது.

பா.ஜ., ஆளாத மாநிலம் என்பது தான் காரணமா... மற்ற மாநிலத்திற்கு ஏன் அதிக நிதி ஒதுக்கினீர்கள் என்று கேட்கவில்லை. தமிழகத்திற்கு ஏன் குறைவாக, ஒதுக்குகிறீர்கள் என்று தான், கேட்க விரும்புகிறேன்.

தமிழக அரசு முதலில், 9,000 கோடி ரூபாயும், பின், 3,200 கோடி ரூபாயும், மத்திய அரசிடம் கேட்டுள்ளது. ஆனால், மத்திய அரசிடமிருந்து வந்திருப்பது, 510 கோடி ரூபாய் தான். இதிலிருந்து, மத்திய அரசின் பாரபட்சமான அணுகுமுறை மட்டும் தான் தெரிகிறது; கொரோனாவிலும் அரசியல் தான்.

எம்.பி.,க்களுக்கு, கூடுதல் நிதி ஒதுக்கி, தொகுதி மக்களின் நல்வாழ்வுக்கு உதவி செய்யுங்கள் என, சொல்வதை விடுத்து, இருந்த நிதியையும் பறிப்பது என்பது, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட, எம்.பி.,க்களை, நெருக்கடியில் நிறுத்துவதாக உள்ளது.இவ்வாறு, ஸ்டாலின் கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (83)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
bal - chennai,இந்தியா
09-ஏப்-202020:29:22 IST Report Abuse
bal ஏனென்றால் உன்னை போல பண பெருச்சாளிகள் திருடுவதற்கு காத்துக் கொண்டிருப்பதால்தான்.
Rate this:
Cancel
SIVA - chennai,இந்தியா
09-ஏப்-202009:38:47 IST Report Abuse
SIVA இங்க பிஜேபி வோட்டு வாங்கும் போது நோட்டா கூட போட்டி போடுது , அதனால அங்க நீங்க நிதி நீதி இரண்டிற்கும் இந்த மாதிரி தான் போட்டிபோட வேண்டியிருக்கும் , இங்க நீங்க உங்கள மாத்திக்கிற வரை அங்கேயும் எதுவும் மாறாது
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
08-ஏப்-202023:15:19 IST Report Abuse
sankaseshan இவனுக்கெல்லாம் குறை சொல்வதை தவிர வேறு வேலை கிடையாது தூக்கமும் வராது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X