எக்ஸ்குளுசிவ் செய்தி

தமிழ்நாடு

கொரோனா வைரஸ்: உலக பொருளாதாரத்துக்கு என்ன பாதிப்பு?

Updated : ஏப் 08, 2020 | Added : ஏப் 08, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
 கொரோனா வைரஸ்: உலக பொருளாதாரத்துக்கு என்ன பாதிப்பு?

மதுரை: உலக பொருளாதாரத்தில் கொரோனா வைரஸ் ஏற்படுத்தும் பாதிப்பு குறித்து கத்தார் நாட்டின் தோஹா வங்கி சி.இ.ஓ., சீதாராமன் தினமலர் நாளிதழுக்கு அளித்த பேட்டி:

* உலகப் பொருளாதாரத்தில் கொரோனா வைரஸின் பாதிப்பு என்ன?

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர் எண்ணிக்கை 12 லட்சத்தை தாண்டிவிட்டது. பெரும்பாலான நாடுகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பயணம், தங்கும் விடுதி, போக்குவரத்து, நிலம் வாங்குவது விற்பது, வங்கி போன்ற தொழில்களும், நுகர்வும் பெருமளவு பாதிக்கப்படும். கொரோனா உலக அளவில் பொருளாதார பின்னடைவை ஏற்படுத்திவிட்டது என்று ஐ.எம்.எப்., தெரிவித்துள்ளது. 2021ல் இதிலிருந்து மீண்டுவிடும் என நம்புகிறோம் என ஐ.எம்.எப்., தலைவர் கிறிஸ்டால்லினா ஜியார்ஜிவா கூறினார். உண்மையில் பெருமளவு மீளாக்கம் இருக்கும். ஆனால் எல்லா இடங்களிலும் வைரசை கட்டுப்படுத்துவதில் வெற்றி பெற்றால் தான் இது முடியும்.

வைரஸ் நோயை கட்டுப்படுத்தவும், பொருளாதார பின்னடைவை சமாளிக்கவும் 5 ட்ரில்லியன் டாலர்களை ஜி20 நாடுகள் ஒதுக்கவுள்ளன.ஐ.எம்.எப்., நிதி ஆதாரத்தை இரண்டு மடங்காக உயர்த்த திட்டமிட்டுள்ளது. உதவி தேவைப்படும் நாடுகள் விண்ணப்பிக்க கேட்டுள்ளது. அமெரிக்க அரசு இரண்டு பில்லியன் டாலர்கள் நிவாரண மசோதாவை நிறைவேறியிருக்கிறது. பல அரசுகளும் பொருளாதாரத்தை துாண்டும் நடவடிக்கைகளை எடுத்திருக்கின்றன. உலகெங்கும் பல மைய வங்கிகள் வரி விகிதங்களை குறைப்பது கட்டுப்பாடுகளை தளர்த்துவது போன்ற முயற்சிகளை மேற்கொண்டுள்ளன.

* இந்திய பொருளாதாரத்தை கொரோனா எவ்வாறு பாதிக்கும்?

முழு ஊரடங்கால் உற்பத்தி, எண்ணெய், நிதி முதலான பல துறைகளில் பாதிப்பு இருக்கும். கடந்த ஆறு காலாண்டுகளாக மந்த நிலையில் இருக்கும் இந்திய பொருளாதாரம் இன்னும் மோசமாகியுள்ளது.

* இந்திய ரிசர்வ் வங்கி, நிதியமைச்சர் எடுத்துள்ள நடவடிக்கைகள் பற்றி?

நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், 1.7 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான நிவாரணத்தை அறிவித்தார். இது கொரோனா வைரஸ் முழு அடைப்பால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பாதுகாப்பு தருவதையும், மருத்துவ பணியாளர்களுக்கு காப்பீடு வழங்குவதையும் நோக்கமாக கொண்டது.

80 கோடி மக்களுக்கு பொது விநியோக திட்டத்தின் கீழ் அரிசி, கோதுமை இலவசமாக வழங்கப்பட உள்ளது. ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை குறைத்துள்ளது.வங்கி கடன் தவணை, முதலீட்டு கடன் தவணைகள் தள்ளிப்போட அனுமதியளித்துள்ளது. சம்பளம் குறைக்கப்பட்டுள்ளதால் கடன்தாரர்களுக்கு இது நிவாரணமாக இருக்கும். ஊரடங்கால் பாதிக்கப்பட்டிருக்கும் இந்திய பொருளாதாரத்திற்கு இவை வரவேற்கத்தக்க நடவடிக்கைகள்.அரசு நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறது. இந்திய பொருளாதாரத்தை மீட்கத் தகுந்த நடவடிக்கைகளை அரசு எடுக்கும். இவ்வாறு கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kabali - Madurai,இந்தியா
08-ஏப்-202018:25:49 IST Report Abuse
Kabali அமெரிக்க அரசு இரண்டு பில்லியன் டாலர்கள் நிவாரண மசோதாவை நிறைவேறியிருக்கிறது. பல அரசுகளும் பொருளாதாரத்தை துாண்டும் நடவடிக்கைகளை எடுத்திருக்கின்றன. - இரண்டு பில்லியன் இல்லை மண்டை இரண்டு டிரில்லியன் , நீங்களெல்லம எண்ணத்தை படிச்சியாலோ தெரியவில்லை
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X