பொது செய்தி

தமிழ்நாடு

விற்பனையாகாத வீடுகள், 'கொரோனா' முகாம்களாக மாற்றம்?

Updated : ஏப் 09, 2020 | Added : ஏப் 08, 2020 | கருத்துகள் (15)
Share
Advertisement
house,coronaward,flat,வீடுகள்,கொரோனா,முகாம்,மாற்றம்?

சென்னை: விற்பனையாகாத தனியார் அடுக்குமாடி குடியிருப்புகளை கொரோனா தனிமை முகாம்களாக மாற்றுவதற்கான நடவடிக்கைகளை, சுகாதார துறை துவங்கி உள்ளது.

தமிழகத்தில், தற்போதைய நிலவரப்படி, 92 ஆயிரம் பேர் தனிமைப்படுத்தப் பட்டுள்ளனர். சுகாதாரத் துறைஇவர்களில், தொற்றுக்கான அறிகுறி உள்ளவர்களை, தனிமை முகாம்களில் வைக்க வேண்டியது அவசியம். அடுத்து வரும் வாரங்களில், தனிமை முகாம்கள், சிறப்பு வார்டுகள் தேவை அதிகரிக்கும் என, கணக்கிடப்பட்டு உள்ளது. இதற்கான வசதிகளை ஏற்படுத்தும் பணிகளை, அரசு முடுக்கி விட்டுள்ளது. இதற்காக, கட்டி முடிக்கப்பட்ட, அரசு கட்ட டங்களை, சுகாதார துறை ஆய்வு செய்து வருகிறது.


சிறப்பு வார்டு:

இந்நிலையில், கட்டி முடிக்கப்பட்டு, விற்கப்படாமல் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளை, தனிமை முகாம்கள், சிறப்பு வார்டுகளாக மாற்றுவது குறித்து, அரசு ஆராய்ந்து வருகிறது. இதற்காக, இந்திய கட்டுனர் வல்லுனர் சங்கம், இந்திய ரியல் எஸ்டேட் மேம்பாட்டாளர் சங்கங்களின் கூட்டமைப்பான, 'கிரெடாய்' உடன், சுகாதார துறை அதிகாரிகள் பேச்சு நடத்தி வருகின்றனர்.

இதில், 100 சதவீத வீடுகளும் விற்காமல் அல்லது ஒப்படைக்கப்படாமல் இருக்கும் வளாகங்களை மட்டுமே, கொரோனா முகாம்களுக்கு பயன்படுத்த முடியும் என்பதால், இது தொடர்பான பேச்சு நடந்து வருவதாக, அதிகாரிகள் கூறினர்.

Advertisement




வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
K.ANBARASAN - muscat,ஓமன்
15-ஏப்-202009:06:52 IST Report Abuse
K.ANBARASAN ரியல் எஸ்டேட் காரர்கள் தாங்கள் இதுவரை கொள்ளையடித்த பாவங்களை இதன் மூலம் கழுவி கொள்ள ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது
Rate this:
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
14-ஏப்-202020:26:49 IST Report Abuse
Lion Drsekar ஜெமினி ஸ்டுடியோவில் கட்டி முடிக்கப்படாத பல லட்சம் கோடி மதிப்பில் உள்ள கட்டிடங்களை பயன்படுத்தியிருக்கலாம் ? இன்று வரை யாருமே எதுவுமே கண்டு கொள்ளாமல் அப்படியே இருக்கிறது, கடந்த 25 ஆண்டுகளாக கட்டி முடித்திருந்தால் அரசுக்கு எவ்வளவு வருமானம் வந்திருக்கும், ? அந்த இடத்தை தற்போது அரசாங்கமே கட்டியிருந்தாலும் , பாதிக்கப்பட்டவர்களுக்கு கொடுத்திருக்கலாமே? வந்தே மாதரம்
Rate this:
Cancel
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
14-ஏப்-202012:57:55 IST Report Abuse
A.George Alphonse ஐயோ பாவம் பில்டர்களுக்கு இப்படி ஒரு ஆப்பா? அந்த வீடுகளுக்கு முன்பணம் கட்டியவர்களும்,செலவு செய்து மாடிபிகேஷன் செய்த ஓனர்களுக்கும் சேர்ந்தே மிக பெயரை சோதனை.கரோனா காம்பலட்சுன்னு பேருவந்தால் சும்மா கொடுத்தால் கூட யாரும் வாங்க மாட்டார்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X