மெகபூபா முப்தி இடமாற்றம் சொந்த வீட்டில் சிறை வைப்பு| Dinamalar

மெகபூபா முப்தி இடமாற்றம் சொந்த வீட்டில் சிறை வைப்பு

Added : ஏப் 08, 2020
Share

ஸ்ரீநகர் : ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வரும், மக்கள் ஜனநாயக கட்சி தலைவருமான, மெகபூபா முப்தி, வீட்டுச் சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

கடந்த, 2019, ஆக., 5ல் காஷ்மீருக்கு, சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து, அரசியல் கட்சிகள் மற்றும் பிரிவினைவாத தலைவர்கள் வீட்டுச்சிறையில் வைக்கப் பட்டனர். மெகபூபா முப்தி, ஸ்ரீநகரில், லால் சவுக் அருகே, மவுலானா ஆசாத் சாலையில் உள்ள, அரசு பங்களாவில் சிறை வைக்கப்பட்டார். இந்தாண்டு, பிப்., 6ல், அவர் மீது பொது பாதுகாப்பு சட்டமும் பாய்ந்தது. இதே சட்டத்தில் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டிருந்த, ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர்கள், பரூக் அப்துல்லா, ஒமர் அப்துல்லா இருவரும், சமீபத்தில், அடுத்தடுத்து விடுதலை செய்யப்பட்டனர்.

இதைத் தொடர்ந்து, மெகபூபா முப்தியும் விடுதலையாவார் என, எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நேற்று அவர், அரசு பங்களாவில் இருந்து, குப்கர் சாலையில் உள்ள அவரது அதிகாரபூர்வ, 'பேர்வியூ' பங்களாவுக்கு மாற்றப்பட்டார்.இதற்கிடையே, ''எட்டு மாதங்களாக வீட்டுச் சிறையில் உள்ள, மெகபூபா முப்தியை விடுதலை செய்ய வேண்டும்; வீட்டிற்கு அனுப்பினாலும், காவலில் வைத்திருப்பது சரியல்ல,''என, ஒமர்அப்துல்லா, 'டுவிட்டரில்' வலியுறுத்தியுள்ளார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X