அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஊரடங்கை கடுமையாக்க வேண்டும்: அன்புமணி

Added : ஏப் 08, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement

சென்னை : -'ஊரடங்கை இன்னும் கூடுதல் சுமையுடன் அரசு நடைமுறைப்படுத்த வேண்டும்' என பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

அவரது அறிக்கை:இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் துவங்கிய நாளில் இருந்தே நான் கூறிவருவது சமூக இடைவெளியை பராமரிப்பது மட்டும் தான். இது தான் கொரோனாவுக்கு ஒரே மருந்து. அதனால் தான் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கை பொதுமக்கள் கடைப்பிடிப்பதில் பல்வேறு குறைபாடுகள் இருப்பது தான் கவலை அளிக்கிறது.

ஊரடங்கு என்பது ஒருவரும் வீட்டை விட்டு வெளியில் வராமல் இருக்கும் நிலை. அந்த நிலையை உறுதி செய்தால் மட்டுமே சமூகப்பரவல் எனப்படும் மூன்றாவது நிலையை தமிழகம் அடைவதை தடுத்து நிறுத்த முடியும்.எனவே பொது மக்கள் அத்தியாவசிய பணிகளுக்கு மட்டும் தான் வெளியே வர வேண்டும். பொதுமக்கள் கூட்டமாக கூட வாய்ப்புள்ள அனைத்து நிகழ்வுகளுக்கும் தடை விதிக்க வேண்டும். ஊரடங்கை தற்போது உள்ளதை விட இன்னும் கூடுதல் சுமையுடன் அரசு நடைமுறைப்படுத்த வேண்டும். இவ்வாறு அன்புமணி கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
muthu Rajendran - chennai,இந்தியா
08-ஏப்-202020:24:47 IST Report Abuse
muthu Rajendran இப்பவே வியாபாரிகள் கொள்ளைக்கு அளவே இல்லை ஏழை எளியவர்களுக்கு நிதி உதவி அளிக்காவிடில் ரொம்பவும் சிரமம்
Rate this:
Cancel
சுரேஷ் குமார் கு மிகவும் சரியான ஆலோசனை டாக்டர். மருந்துகள் தவிர அத்தியாவசிய பொருட்கள் மற்றும் காய்கறிகள் வாகனங்கள் மற்றும் காவல்துறை உதவியுடன் வீட்டிற்கு விற்பனை செய்ய வேண்டும். குறைந்தது ஒரு வாரம் தீவிர ஊரடங்கு கடைப்பிடித்தல் நமக்கும் நாட்டுக்கும் நலம் பயக்கும்.
Rate this:
Cancel
பாலசுப்பிரமணியன் அ இந்த டாக்டர் கூறுவது சரி. மக்களின் உயிரே முக்கியம். பலருக்கு ஊரடங்கு அவசியம் பற்றி தெரியவில்லை. இதை தீவிரமாக கடைப்பிடிக்க ஊரடங்கை மேலும் நீட்டிக்க வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X