கோர்ட் செய்தி

தமிழ்நாடு

நீதிமன்றங்களில் வழக்கு விசாரணை துவங்குவது எப்போது ?

Updated : ஏப் 08, 2020 | Added : ஏப் 08, 2020 | கருத்துகள் (5)
Share
Advertisement
Madras High Court, chief justice, district judges, lawyers, Coronavirus, curfew, lockdown, tn news, நீதிமன்றங்களில் ,வழக்கு விசாரணை,துவங்குவது,எப்போது ?

சென்னை :நீதிமன்றங்களில், வழக்கு விசாரணை மேற்கொள்வது குறித்து, மாவட்ட நீதிபதிகள், வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவர்கள் மற்றும் பார் கவுன்சில் நிர்வாகிகளுடன், சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி, ஏ.பி.சாஹி, நேற்று ஆலோசனை நடத்தினார்.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, ஊரடங்கு மற்றும், 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், உயர் நீதிமன்றம், கீழமை நீதிமன்றங்களின் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அவசர வழக்குகள் மட்டுமே, விசாரணைக்கு எடுக்கப்படுகின்றன. ஊரடங்கு, 144 தடை உத்தரவு, வரும், 15ம் தேதி காலை வரை அமலில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது நீட்டிக்கப்படுமா; தளர்த்தப்படுமா; குறிப்பிட்ட பகுதிகளுக்கு மட்டும் நீட்டிப்பு அல்லது தளர்வு இருக்குமா என்பது குறித்து, அரசு முடிவெடுக்கும்.


latest tamil news




இந்நிலையில், ஊரடங்கு தளர்த்தப்படும் பட்சத்தில், நீதிமன்ற பணிகளை எப்படி துவங்குவது; நீதிமன்றங்களில் அதிகம் பேர் கூடுவதை எப்படி தவிர்ப்பது என்பது குறித்து, மாவட்ட நீதிபதிகள் கருத்து தெரிவிக்கும்படி, ஏற்கனவே உயர் நீதிமன்ற பதிவுத்துறை அறிவித்திருந்தது.தலைமை நீதிபதி, ஏ.பி.சாஹி மற்றும் மூத்த நீதிபதிகள், காணொலி காட்சி வழியாக ஆலோசனை கூட்டம் நடத்தினர்.

முதலில், வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவர்கள் மற்றும் பார் கவுன்சில் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடந்தது.ஆலோசனையில், அட்வகேட் ஜெனரல், விஜய் நாராயண், சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க தலைவர், மோகனகிருஷ்ணன், சென்னை பார் அசோசியேஷன் தலைவர், ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், தமிழ்நாடு பார் கவுன்சில் தலைவர், அமல்ராஜ், இந்திய பார் கவுன்சில் துணைத் தலைவர், பிரபாகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஜாமின் மனுக்களுக்கு முக்கியத்துவம் அளித்து விரைந்து விசாரித்தாலே, பெருமளவு கூட்டத்தை தவிர்க்க முடியும் என, வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. பின், மாவட்ட முதன்மை நீதிபதிகளுடன், தலைமை நீதிபதி மற்றும் மூத்த நீதிபதிகள் விவாதித்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா
08-ஏப்-202012:53:42 IST Report Abuse
அசோக்ராஜ் துளிக்கூட வெட்கமே இல்லாமல் வயிறு வளர்க்கும் சோம்பேறிகள் கூட்டம். திறந்து கிடந்தால் என்ன? மூடிக்கிடந்தால் என்ன? கிடக்கும். அவ்ளோதான்.
Rate this:
Cancel
RajanRajan - kerala,இந்தியா
08-ஏப்-202009:06:41 IST Report Abuse
RajanRajan இப்போ ஒண்ணும் அவசரமில்லை. எல்லாம் அடுத்த வருசம் பார்த்துக்கலாம் சமாதானமா. சம்பளம் படி எல்லாத்தையும் குரானா தடுப்பு நிதியா கொடுங்க சாமிகளா. இப்ப தான் ஒரு வக்கீல் ரயில் பெட்டி எப்படி வார்டு ஆச்சுன்னு மனு தாக்கல் செய்து இருக்கான். குரானான்னா என்ன சும்மாவா???
Rate this:
Cancel
08-ஏப்-202007:17:42 IST Report Abuse
ஆப்பு கட்டப் பஞ்சாயத்து அதிகரிக்கும்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X