மெகபூபா முப்தி இடமாற்றம் ; சொந்த வீட்டில் சிறை வைப்பு

Updated : ஏப் 08, 2020 | Added : ஏப் 08, 2020 | கருத்துகள் (11)
Share
Advertisement

ஸ்ரீநகர் : ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வரும், மக்கள் ஜனநாயக கட்சி தலைவருமான, மெகபூபா முப்தி, வீட்டுச் சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.latest tamil newsகடந்த, 2019, ஆக., 5ல் காஷ்மீருக்கு, சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து, அரசியல் கட்சிகள் மற்றும் பிரிவினைவாத தலைவர்கள் வீட்டுச்சிறையில் வைக்கப் பட்டனர். மெகபூபா முப்தி, ஸ்ரீநகரில், லால் சவுக் அருகே, மவுலானா ஆசாத் சாலையில் உள்ள, அரசு பங்களாவில் சிறை வைக்கப்பட்டார். இந்தாண்டு, பிப்., 6ல், அவர் மீது பொது பாதுகாப்பு சட்டமும் பாய்ந்தது. இதே சட்டத்தில் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டிருந்த, ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர்கள், பரூக் அப்துல்லா, ஒமர் அப்துல்லா இருவரும், சமீபத்தில், அடுத்தடுத்து விடுதலை செய்யப்பட்டனர். இதைத் தொடர்ந்து, மெகபூபா முப்தியும் விடுதலையாவார் என, எதிர்பார்க்கப்பட்டது.


latest tamil newsஆனால், நேற்று அவர், அரசு பங்களாவில் இருந்து, குப்கர் சாலையில் உள்ள அவரது அதிகாரபூர்வ, 'பேர்வியூ' பங்களாவுக்கு மாற்றப்பட்டார்.இதற்கிடையே, ''எட்டு மாதங்களாக வீட்டுச் சிறையில் உள்ள, மெகபூபா முப்தியை விடுதலை செய்ய வேண்டும்; வீட்டிற்கு அனுப்பினாலும், காவலில் வைத்திருப்பது சரியல்ல,''என, ஒமர்அப்துல்லா, 'டுவிட்டரில்' வலியுறுத்தியுள்ளார்.


Advertisement
வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Milirvan - AKL,நியூ சிலாந்து
08-ஏப்-202017:33:07 IST Report Abuse
Milirvan உளவுத்துறை, இந்த மெகபூபா பாரதத்தை வெறுக்கும், வெறி தலைக்கேறிய, பக்கி'ஸ்தானிய சார்பு கொண்ட நச்சரவம் என்பதை குறிப்பாக எழுதி அரசுக்கு அனுப்பியிருக்கும்..
Rate this:
Cancel
Pannadai Pandian - wuxi,சீனா
08-ஏப்-202017:05:53 IST Report Abuse
Pannadai Pandian அப்துல்லா குடும்பமும் முஃதி குடும்பமும் இனி காஷ்மீர் அரசியலில் தலையெடுக்க கூடாது. நல்ல தேசிய எண்ணம் கொண்ட (அருணாச்சல பிரதேஷ் தலைவர்கள் போல) தலைவர்களை உருவாக்கி காஷ்மீரை ஆக்க பூர்வ பிரதேசமாக ஆக்க வேண்டும். விவேகானந்த கேந்திரா, ராம கிருஷ்ணா மிஷன் போன்ற நிறுவனங்களுக்கு அரசு மானியம் தந்து லடாக், ஜம்மு பிரதேசங்களில் நிறைய ஸ்கூல், தொண்டு நிறுவனங்களை நிறுவ வேண்டும். காஷ்மீரில் இது தொடர வேண்டும். இன்று விதைத்தால் 20 ஆண்டுகளுக்கு பிறகு விளைந்து தளிர்க்கும். 1977இல் விவேகானந்த கேந்திரா அருணாச்சல பிரதேசத்தில் ஆரம்பிக்கப்பட்டது. அது ஒரு சிறு விதை தான். இன்று அங்கு பூத்து குலுங்குகிறது. விவேகானந்த கேந்த்ரா உருவாக்கிய மாணவர்கள் இன்று அரசு துறைகளில் முழுவதும் வியாபித்துள்ளார்கள். அவர்கள் தேசிய பார்வையில் செயல் படுகிறார்கள். மத்திய அரசின் செல்ல பிள்ளையாக அருணாச்சல பிரதேஷ் செயல் படுகிறது. அதே சமயம் அருணாச்சல பிரதேசத்தை விட அதிக சலுகைகள், மானியங்கள் வாங்கி கேட்டு போன பிரதேசம் காஷ்மீர். காரணம் மக்களில் சிந்தனை பாகிஸ்தானின் மத வெறி தூண்டுதல், ஜிஹாத், ஹூரியாத்.....இனி வசந்த காலம் தான்.....
Rate this:
Pannadai Pandian - wuxi,சீனா
08-ஏப்-202017:48:37 IST Report Abuse
Pannadai Pandianஇங்கு ஒன்றை நான் சொல்ல ஆசைப்படுகிறேன். விவேகானந்த கேந்திரா நாட்டின் மீது தேசப்பற்றையும், ஒழுக்கம், கட்டுப்பாடு, நேர் கொண்ட பார்வையை மாணவர்களிடம் போதிக்கிறது. 1977 வாக்கில் நாங்கள் சீனர்கள் என்று சொல்லிக்கொண்டிருந்த இந்த மக்கள் 1985 வாக்கில் நாங்கள் இந்தியர்கள், பாரத் வாசி என்று கூற ஆரம்பித்துவிட்டனர். இதற்கு காரணம் நல்ல தலைவர்கள், விவேகானந்த கேந்திரா, ராம கிருஷ்ணா மிஷன் போன்ற நிறுவனங்கள், மத்திய அரசின் உதவி. மக்களும் நேர்மையாக நடந்து கொண்டுள்ளார்கள். இந்த அருணாச்சல பிரதேஷ் மாணவர்களுக்கு மத்திய அரசு பல பல்கலைக்கழகங்களில் இடம் ஒதுக்கி டாக்டர்களாக, இன்ஜினியர்களாக, தொழில் நுட்ப வல்லுனர்களாக, காட்டிலாக்கா ஆபீசர்களாக ஆக்கி இவர்களின் வாழ்வில் ஒளி ஏற்றி வைத்துள்ளது. ஆனால் எண்ணி பாருங்க...1950களில் நாகாலாந்து, மிசோராம், மணிப்பூர் போன்ற மாநிலங்களில் கால் ஊன்றிய கிருஸ்துவ நிறுவனங்கள் என்ன செய்தது? காஷ்மீரில் மதரஸாக்களும் ஹூரியாத்தும் செய்யும் வேலையைத்தான் இவர்களும் செய்தார்கள். மக்களிடம் விஷத்தை விதைத்து, தாங்கள் கிருஸ்துவர்கள், இந்தியர்கள் இந்துக்கள், எனவே தனி நாடு வேண்டும் என்ற வேற்றுமையை விதைத்தார்கள். இதை செய்த ஒரு வெளிநாட்டு பாதிரி 1955 ஆம் வருடம் இந்தியாவில் இருந்து வெளியேற்றப்பட்டார். இருந்தும் இவர்களின் பிரிவினை தொடர்ந்தது. கிறிஸ்துவம் இவர்களை பிரிக்க முடிந்ததா? நல்லவர்களாக, செல்வந்தர்களாக, படிப்பில் கெட்டிக்காரர்களாக ஆக்க முடிந்ததா? தருதலைகளாகத்தான் ஆக்கி கையில் துப்பாக்கியை ஏந்த வைத்தது. இன்று இந்த மக்கள் உணர்கிறார்கள் தாங்கள் தவறாக வழிநடத்தப்பட்டதாக. ஆனால் காலம் கடந்து விட்டது.. 4 ஜெனரேஷன் குட்டி சுவராகி விட்டது.இந்த நஷ்டத்துக்கு கிருஸ்துவ மிஷனரிகள் பதில் என்ன ???...
Rate this:
Cancel
N.DURAI - trivandrum,இந்தியா
08-ஏப்-202012:52:37 IST Report Abuse
N.DURAI இவரது குடும்பம் உள்ளே இருந்தே திட்டம் தீட்டுவதில் வல்லவர்கள். எச்சரிக்கை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X