சீனாவில் உயிரிழப்பு நின்றது

Added : ஏப் 08, 2020 | கருத்துகள் (9)
Share
Advertisement
corona, china, coronavirus death, coronavirus crisis, coronavirus in china, death toll, positive cases, கொரோனா, வூஹான், பாதிப்பு, தொற்று, அமெரிக்கா,ஊற்றுக்கண்

பீஜிங் : சீனாவில், கடந்த மூன்று மாதங்களில் முதன் முறையாக, நேற்று முன்தினம், கொரோனாவால் ஒருவர் கூட உயிரிழக்கவில்லை என, அந்நாட்டு தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது. சீனாவில், கொரோனாவால், 3,331 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று முன்தின நிலவரப்படி, அங்கு, 81 ஆயிரத்து, 740 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில், 77 ஆயிரத்து, 167 பேர், குணமடைந்து வீடு திரும்பி விட்டனர்; 1,242 பேர் சிகிச்சையில் உள்ளனர்.சீனாவில் உயிரிழப்பு தடுக்கப்பட்ட போதிலும், புதிதாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.


latest tamil news



நேற்று முன்தினம், ஒரே நாளில், 32 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில், 30 பேர், எவ்விதமான அறிகுறியும் இல்லாமல் இருந்தும், நோய்த் தொற்று பரப்ப, அதிக வாய்ப்புள்ளவர்களாக கருதப்படுகின்றனர். இந்த புள்ளிவிபரத்தை, கடந்த வாரம் முதல், சீனா வெளியிட்டு வருகிறது. அங்கு, இதுவரை, 1,033 பேர், நோய் அறிகுறி இல்லாமல், தொற்று பரப்ப வாய்ப்புள்ளோராக அறியப்பட்டுள்ளனர். கடந்த, 2019, டிசம்பரில், வூஹான் நகரில் தான், கொரோனா பாதிப்பு முதலில் கண்டறியப்பட்டதாக, சீனா அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. எனினும், அந்நோய் எங்கிருந்து வந்தது என்பதை, சீனா அறிவிக்கவில்லை. ஆனால், 'சீனா தான் கொரோனாவின் ஊற்றுக்கண்' என, அமெரிக்கா குற்றஞ்சாட்டி வருகிறது. அதை, சீனா மறுத்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
elakkumanan - Naifaru,மாலத்தீவு
08-ஏப்-202014:34:58 IST Report Abuse
elakkumanan கம்மிகள் உலக அமைதியின் சத்ருக்கள்.....உலகம் கண்டு கூடாது....விதைப்பு முடிந்தது.......இனி, அறுவடை நிச்சயம் உண்டு........கம்மிகள் இந்த உலகத்திலிருந்தே அகற்றப்படலாம்................அறுவடை காலம் வந்துவிட்டது........நோயிலிருந்து தப்பலாம்.....பேயிடம் தப்பலாம்.....செய்த வினை.......................சைனா அறுவடை செய்தே ஆகவேண்டும்........உங்களுக்கு, அறிவியல் மேல் நம்பிக்கை இருந்தால், நியூட்டனின் 3 ம் விதி.....மெய்ஜானம் மேல் நம்பிக்கை இருந்தால், கர்மா பலன்........மோடி ஒழிக கோஷமும் கூட ஒரு எதிர் வினையே.....அவர் குஜராத் முதல்வராக இருந்த பொது ஆற்றிய வினைக்கு இன்று எதிர் வினை. .................................ஏற்பது கஷ்டம்தான்.....உண்மைகள் மெதுவாகவே வெளி வரும்.....டெல்லி caa எதிர்ப்பு மாநாடு உண்மை வெளிவந்துவிட்டதே............................
Rate this:
Cancel
Vena Suna - Coimbatore,இந்தியா
08-ஏப்-202013:20:38 IST Report Abuse
Vena Suna அமெரிக்கா சொல்லுவதில் என்ன தப்பு? சீனா நிறைய விஷயங்களை மறைக்கின்றது..அவர்கள் பல சதிகளை செய்துள்ளதாக தெரிகிறது. உலகமே அவர்களை ஒதுக்கி நஷ்ட ஈடு கேட்க வேண்டும்.
Rate this:
dandy - vienna,ஆஸ்திரியா
08-ஏப்-202014:05:42 IST Report Abuse
dandyசீனாவை ஒதுக்குவது கனவில் நடக்காலம் ..முதலில் உங்களை ஒதுக்கி வைக்கவும் ...அந்த பக்கம் ஒடடக மார்க்கம் அதிகம்...
Rate this:
Cancel
Sampath Kumar - chennai,இந்தியா
08-ஏப்-202009:25:18 IST Report Abuse
Sampath Kumar சீனாக்காரன் மருத்து கண்டு புடிச்சிட்டானா >> அப்போ முகக்கவசம் வாங்குனது போல மருந்தும் வாங்கு என்று சொல்ல போறான் உலக ஆடுகள் அவன் பின்னால் நம்ம நாடு ??????
Rate this:
dandy - vienna,ஆஸ்திரியா
08-ஏப்-202014:08:32 IST Report Abuse
dandyஒரு நாட்டு மக்கள் அரச சட்டங்கள் ..விதிகள் ..ஒழுங்கு இவைகையா பின்பற்றினால் எதுவும் சாத்தியம் செம்மறிகளுக்கு எதுவும் கிடையாதே ..CORONAகட்டுமரம் சிந்திக்க முடியாமல் செய்து விட்டான் ஓரங்கனு வேளையிலும் டாஸ்மாக் சரக்கு தேடும் மாக்களை என்ன என்று சொல்வது இவர்களில் பெரும்பான்மையினர் அன்றாடம் காச்சிகள்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X