சீனாவில் உயிரிழப்பு நின்றது| China reports no new coronavirus deaths for first time | Dinamalar

சீனாவில் உயிரிழப்பு நின்றது

Added : ஏப் 08, 2020 | கருத்துகள் (9)
Share
corona, china, coronavirus death, coronavirus crisis, coronavirus in china, death toll, positive cases, கொரோனா, வூஹான், பாதிப்பு, தொற்று, அமெரிக்கா,ஊற்றுக்கண்

பீஜிங் : சீனாவில், கடந்த மூன்று மாதங்களில் முதன் முறையாக, நேற்று முன்தினம், கொரோனாவால் ஒருவர் கூட உயிரிழக்கவில்லை என, அந்நாட்டு தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது. சீனாவில், கொரோனாவால், 3,331 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று முன்தின நிலவரப்படி, அங்கு, 81 ஆயிரத்து, 740 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில், 77 ஆயிரத்து, 167 பேர், குணமடைந்து வீடு திரும்பி விட்டனர்; 1,242 பேர் சிகிச்சையில் உள்ளனர்.சீனாவில் உயிரிழப்பு தடுக்கப்பட்ட போதிலும், புதிதாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.


latest tamil news



நேற்று முன்தினம், ஒரே நாளில், 32 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில், 30 பேர், எவ்விதமான அறிகுறியும் இல்லாமல் இருந்தும், நோய்த் தொற்று பரப்ப, அதிக வாய்ப்புள்ளவர்களாக கருதப்படுகின்றனர். இந்த புள்ளிவிபரத்தை, கடந்த வாரம் முதல், சீனா வெளியிட்டு வருகிறது. அங்கு, இதுவரை, 1,033 பேர், நோய் அறிகுறி இல்லாமல், தொற்று பரப்ப வாய்ப்புள்ளோராக அறியப்பட்டுள்ளனர். கடந்த, 2019, டிசம்பரில், வூஹான் நகரில் தான், கொரோனா பாதிப்பு முதலில் கண்டறியப்பட்டதாக, சீனா அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. எனினும், அந்நோய் எங்கிருந்து வந்தது என்பதை, சீனா அறிவிக்கவில்லை. ஆனால், 'சீனா தான் கொரோனாவின் ஊற்றுக்கண்' என, அமெரிக்கா குற்றஞ்சாட்டி வருகிறது. அதை, சீனா மறுத்துள்ளது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X