பொது செய்தி

தமிழ்நாடு

வங்கிகளில் ரூ.2,000 கோடி கடன் வாங்க மின்வாரியம் முடிவு

Updated : ஏப் 08, 2020 | Added : ஏப் 08, 2020 | கருத்துகள் (6)
Share
Advertisement
சென்னை: மின் கட்டணம் வசூலிக்காததால் ஏற்பட்டுள்ள நெருக்கடியை சமாளிக்க, மின் வாரியம், மத்திய அரசின் நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கிகளிடம் இருந்து, 2,000 கோடி ரூபாய் கடன் வாங்க முடிவு செய்துள்ளது.பராமரிப்பு பணி:தமிழக மின் வாரியத்திற்கு, மின் கட்டணம் வாயிலாக, மாதம் 3,000 கோடி ரூபாய்க்கு வருவாய் கிடைக்கிறது. மின் கொள்முதல், ஊழியர்கள் சம்பளம், மின் நிலையங்களுக்கான
electricity board, Tamil Nadu, bank loan, TNEB, coronavirus crisis, covid 19, lockdown

சென்னை: மின் கட்டணம் வசூலிக்காததால் ஏற்பட்டுள்ள நெருக்கடியை சமாளிக்க, மின் வாரியம், மத்திய அரசின் நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கிகளிடம் இருந்து, 2,000 கோடி ரூபாய் கடன் வாங்க முடிவு செய்துள்ளது.


பராமரிப்பு பணி:


தமிழக மின் வாரியத்திற்கு, மின் கட்டணம் வாயிலாக, மாதம் 3,000 கோடி ரூபாய்க்கு வருவாய் கிடைக்கிறது. மின் கொள்முதல், ஊழியர்கள் சம்பளம், மின் நிலையங்களுக்கான எரிபொருள், பழுது மற்றும் பராமரிப்பு பணி போன்றவற்றுக்காக செலவு செய்யப்படுகிறது. வரவை விட, செலவு அதிகமாக இருப்பதால், மத்திய அரசின், 'ரூரல் எலக்ட்ரிபிகேஷன், பவர் பைனான்ஸ்' ஆகிய நிதி நிறுவனங்களிடம் இருந்தும், பொது மற்றும் தனியார் துறை வங்கிகளிடம் இருந்தும், மின் வாரியம் கடன் வாங்குகிறது.


latest tamil newsதமிழகத்தில், கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க, மார்ச், 24 நள்ளிரவு முதல், ஏப். 14ம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால், மக்கள் வீடுகளை விட்டு வெளியே வராமல், வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர். இதையடுத்து, மார்ச், 25 முதல் மின் கட்டணம் செலுத்த வேண்டியவர்கள், அபராதம் இன்றி, ஏப். 14ம் தேதி வரை, மின் கட்டணம் செலுத்த, மின் வாரியம், அவகாசம் வழங்கியுள்ளது. மேலும், மின் கட்டணம் செலுத்தாத இணைப்புகளில், மின் இணைப்பு துண்டிக்கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


சிக்கல்:


தொழிற்சாலைகள், வணிக வளாகங்கள் போன்றவை செயல்படாததால், தினமும், 10 கோடி யூனிட்கள் வரை, மின்சார விற்பனையும் பாதித்துள்ளது. இதனால், செலவுகளை எதிர்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.எனவே, மத்திய நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கிகளிடம் இருந்து, குறுகிய கால கடனாக, 2,000 கோடி ரூபாய் வாங்க, மின் வாரியம் முடிவு செய்துள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Soundar - Chennai,இந்தியா
08-ஏப்-202012:50:02 IST Report Abuse
Soundar Do the ministry functions without corruption and works efficiently. This ministry has been spoiled a lot by the politicians.
Rate this:
Cancel
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
08-ஏப்-202010:41:19 IST Report Abuse
ஆரூர் ரங் மின்வாரியநஷ்டத்துக்கு முக்கிய காரணங்களில் ஒன்று விவசாயத்துக்கு முழு இலவச மின்சாரம்தான். பணக்கார விவசாயிகள் அனுமதியில்லாமல் ஆயிரம் அடி போர் போட்டு மிகப்பெரிய பம்ப்செட்டுகள்மூலம் நிலத்தடி நீரை காலிபண்ணி நமக்கு அத்தியாவசியமில்லாத பண்டங்கள் விதிகளைமீறி இலவசத்துக்கு உட்படாத சாகுபடி செய்து ஏற்றுமதி நடக்கிறது. ஆலைகளுக்கு கூட போர்வெல் தண்ணீர் விற்கின்றனர். குடிநீர் ஆதாரங்களிலிருந்து நீரைத் திருடுகின்றனர் அதிக ஆழத்தில் போர்பொடுவதால் தாது உப்புக்களோடு உள்ளநீர் வெளியேறி நிலவளத்தைக் கெடுக்கிறது. நிலத்தடிநீர் குறைந்து குடிநீர்ப் பஞ்சம் உருவாகிறது. மின்திருட்டு சர்வசாதாரணம். பணக்கார விவசாயிகளுக்கும் இலவச மின்சாரம் அதுவும் அதிகம் வேறு பயன்பாடுகளுக்கு திருப்பிவிடபடுவது சர்வ சாதாரணம். எனவே குறிபிட்ட அளவுக்குமேல் யூனிட்டுக்கு கட்டணம் வசூலித்தாக ஆகவேண்டும். விளைநிலங்கள் அருகே சோலார் மின்னுற்பத்தியும் இன்னும் வளரவில்லை (வெங்கடராமன், மன்மோகன் சிங் கூற்று தேவைக்கு மேற்பட்டவர்கள் விவசாயம் சார்ந்த தொழிலில் இருப்பதால்தான் நாடு முன்னேற முடியாமல் இருக்கிறது). உள்நாட்டுத் தேவைக்கு மேலேயே உணவு உற்பத்தி செய்கிறோம். அதிக நீர்தேவையுள்ள பயிர்களை பயிரிட்டு ஏற்றுமதி செய்வது நாட்டின் எதிர்காலத்துக்கு கேடு. எதிர்காலத்தில் குடிநீருக்கே அல்லாடுவோம்
Rate this:
08-ஏப்-202012:21:38 IST Report Abuse
234 லட்சியம்   180 நிச்சயம்  வெற்றி முதலில் MGR தான் தமிழ்நாட்டிற்கு இலவசம் என்று வந்து அது TNEB யில் தொடங்கி அதை பின்னால் வரும் அரசுகளும் போட்டி போடு கொண்டு இலவசம் வழங்க இந்த நிலை , அதை விட அம்மணி கடைசி காலத்தில் 100 unit வரை இலவசம் என்று சொல்லி இதனால் 87 லக்சம் service பணம் கடும் நிலை இல்லாமல் போனது...
Rate this:
Cancel
Tamil - chennai,இந்தியா
08-ஏப்-202010:02:24 IST Report Abuse
Tamil மின்வாரியம் நஷ்டத்தில் தான் ஓடுகிறது அதை டாஸ்மாக் வரும் பணத்தை வைத்துதான் அரசு ஈடு கட்டுகிறது மற்றும் இலவச மின்சாரம் மானியம் வழங்குகிறது. மேலும் மேலும் கடன் வாங்காமல் ஆன்லைன் மூலம் டாஸ்மாக் விற்பனை door டெலிவரி தொடங்குவது நல்லது. டாஸ்மாக் ஊழியர்கள் பலர் சரக்குகளை பதுக்கி டபுள் ரேட் விற்பனை செய்வதாக செய்தி வருகிறது. குடிகாரன் தானாக திருந்தினால் தான் உண்டு. 150 ரூபாய்க்கு குடிபவன் 300 ரூபாய் கொடுத்து குடிப்பானே தவிர குடியை நிறுத்த வாய்ப்பில்லை. Black மார்க்கெட் மூலம் விற்பனை மற்றும் சாராயம் குடிப்பதில் விழைவாக ஏதேனும் விபரீதம் ஏற்படும் முன் அரசு ஆன்லைன் விற்பனை தொடங்குவது நல்லது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X