'கொரோனா' வைரஸ் பாதிப்பு: ஐ.நா.,வில் நாளை ஆலோசனை

Updated : ஏப் 08, 2020 | Added : ஏப் 08, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement

நியூயார்க் : கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து, ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் நாளை ஆலோசனை நடக்கவுள்ளது.latest tamil newsசீனாவில் ஏற்பட்ட கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இத்தாலி, ஸ்பெயின், பிரிட்டன் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளிலும், அமெரிக்காவிலும் ஏராளமான உயிரிழப்புகளை ஏற்படுத்தி உள்ளது. நம் நாட்டிலும், பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

இதுவரை, உலகம் முழுவதும், 82 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர்; 14 லட்சத்துக்கும் அதிகமானோர் வைரஸ் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். 'வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்துவதற்கு, அனைத்து நாடுகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்' என, ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில், சமீபத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.


latest tamil newsஇந்நிலையில், ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில், கொரோனா பாதிப்பு, தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக, அனைத்து நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்கும் உள்ளரங்கு கூட்டம், நாளை நடக்க உள்ளது. இதில், 'வீடியோ கான்பரன்ஸ்' மூலமாகவும் பிரதிநிதிகள் பங்கேற்கஉள்ளனர். ஐ.நா., பொதுச் செயலர் அன்டோனியோ குட்டரெசும் இதில் பங்கேற்கவுள்ளார். ஆலோசிக்கப்பட்ட விஷயங்கள் குறித்து, கூட்டத்தின் முடிவில் அறிக்கை வெளியிடப்படும் என தெரிகிறது. ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலின் தலைமை பொறுப்பு, ஒவ்வொரு மாதமும், ஒவ்வொரு நாட்டின் பிரதிநிதிகளிடம் இருக்கும். இதன்படி, இந்த மாதத்துக்கான தலைமை பொறுப்பு, கரீபியன் தீவு நாடான டொமினிகன் குடியரசு நாட்டின் பிரதிநிதி ஜோஸ் சிங்கரிடம் இருக்கும். கொரோனா குறித்த ஆலோசனை கூட்டத்துக்கு, ஜோஸ் சிங்கரே தலைமை வகிப்பார்.

பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் குறித்து, ஜோஸ் சிங்கர் கூறுகையில், ''இந்த கூட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து தீர்மானம் நிறைவேற்றப்படுவது குறித்த திட்டம் எதுவும் இல்லை. ''முதலில், பிரச்னை குறித்து ஆலோசிக்க வேண்டும் என்பதற்காகவே, இந்த கூட்டம் கூட்டப்படுகிறது,'' என்றார்.

உலக சுகாதார நிறுவனம் கவலைஉலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கூறியதாவது:கொரோனா வைரசை தடுக்க, முக கவசம் அணிய வேண்டும்; அடிக்கடி கைகளை கழுவ வேண்டும். சமூக விலகல் அவசியம் என, தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். இதை பின்பற்றி, பெரும்பாலான நாடுகள், தங்கள் மக்களிடம், இந்த நடைமுறையை பின்பற்றும்படி கூறுகின்றன.பெரும்பாலான மக்களும் முக கவசம் அணியத் துவங்கியுள்ளனர். ஆனால், அடிக்கடி கைகளை கழுவுவது, சமூக விலகல் போன்றவை, பல நாடுகளில் சாத்தியமில்லாத ஒன்றாக உள்ளது.


Advertisement
வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Tamilan - NA,ஐக்கிய அரபு நாடுகள்
08-ஏப்-202015:20:41 IST Report Abuse
Tamilan அதுவாக தீரும் வரை இவர்கள் தொடர்ந்து விவாதித்து கொண்டே இருப்பார்கள் . தீர்ந்த பிறகு உலகுக்கு தெரிவிப்பார்கள் . தீர்ந்துகொண்டிருக்கும் போது அவ்வப்போது status கூறுவார்கள் .
Rate this:
Cancel
Subburamu Krishnaswamy - Coimbatore,இந்தியா
08-ஏப்-202008:59:25 IST Report Abuse
Subburamu Krishnaswamy Finance to UN bodies are colossal waste. An toothless body maned by might five nations with VETO powers. USA, UK, China, Russia France are more powers than India, Brazil, Germany, Japan, and many other countries. There is no equal power among the countries. Either UN must be reorganised or dissolved and in the present UN status it is nothing but a comedian group.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X