ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? எதிர்க்கட்சி தலைவர்களுடன் இன்று மோடி ஆலோசனை

Updated : ஏப் 08, 2020 | Added : ஏப் 08, 2020 | கருத்துகள் (38)
Share
Advertisement
Coronavirus update, PM Modi, corona crisis, covid 19, coronavirus, Narendra modi, political party meet, video conferencing, கொரோனா,வைரஸ்,பிரதமர்,மோடி

புதுடில்லி: கொரோனா தடுப்பு குறித்து இன்று (ஏப்.,8) எதிர்க்கட்சி தலைவர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்துகிறார். அப்போது, நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு நீட்டிக்கப்படுவது குறித்து ஆலோசிக்கப்படலாம் என கூறப்படுகிறது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள 21 நாள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக பல்வேறு தரப்பினருடன் 'வீடியோ கான்பரன்சிங்' வாயிலாக பிரதமர் மோடி ஆலோசனை நடத்தியுள்ளார்.


latest tamil news



இந்நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து இன்று (ஏப்.,8 ம் தேதி) பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களுடன் காலை 11 மணியளவில் வீடியோ கான்பரன்சிங் வாயிலாக உரையாடுகிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில் பார்லிமென்ட்டின் லோக்சபா, ராஜ்யசபா என இரு சபைகளிலும் 5க்கும் மேற்பட்ட எம்.பி.க்களை கொண்ட அரசியல் கட்சி தலைவர்கள் பங்கேற்கின்றனர். இக்கூட்டத்தின் போது கொரோனா பாதிப்பிலிருந்து விடுபடவும், தேவையான நடவடிக்கைகள் எடுப்பது குறித்து கட்சி தலைவர்களின் கருத்துக்களை கேட்க உள்ளார். ஊரடங்கு நீட்டிக்கப்படுவது குறித்தும் ஆலோசனை நடத்தப்படலாம் எனக்கூறப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (38)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
08-ஏப்-202021:42:48 IST Report Abuse
p.stalin Dear Boss......pls consider including middle class family.....🙏🙏🙏
Rate this:
Cancel
sreedhar - mumbai,இந்தியா
08-ஏப்-202015:29:19 IST Report Abuse
sreedhar Be safe and make sure other's safe as well
Rate this:
Cancel
Ashanmugam - kuppamma,இந்தியா
08-ஏப்-202013:26:54 IST Report Abuse
Ashanmugam மே 15 போதாது இந்தியாவை ஒரு வருடத்திற்கு இழத்து மூடி விடுங்கள். பிறகு இந்திய மக்களின் தலையெழுத்து, வாழ்வாதாரம், வாணிப வர்த்தகம், விவசாயம், தொழில்துறை, பொருளாதாரம் என்னவாகும் என்பதை வீட்டில் ஒரு மூலையில் முக்காடுபோட்டுக்கொண்டு வானவேடிக்கை பார்க்கலாம். அதுமட்டுமின்றி, ஊரடங்கு சட்டத்திற்கு முன் கோவிட்19 ல் எவ்வளவு பேர் பலியானார்கள். அதன்பிறகு எவ்வளவு பேர் பலியானார்கள் என்ற புள்ளிவிவர கணக்குப்படி மத்திய அரசு இத்தருணத்தில் ஊரடங்கு சட்டத்தை மேலும் நீடிப்பதா அல்லது ரத்து செய்வதா என்பதை சிந்தித்து செயல்படுத்தவேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X