பொது செய்தி

இந்தியா

கப்பல் போக்குவரத்திற்கு சலுகை: மத்திய அரசு தகவல்

Updated : ஏப் 08, 2020 | Added : ஏப் 08, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
India, Coronavirus, thermal scan, covid 19, fight against corona, coronavirus news update, Union Shipping Ministry, இந்தியா, கப்பல், போக்குவரத்து, அனுமதி, மத்தியஅரசு

புதுடில்லி: 'நாடு முழுவதும் உள்ள துறைமுகங்களில் 46 ஆயிரம் பயணியருக்கு 'தெர்மல் ஸ்கேனிங்' சோதனை செய்யப்பட்டுள்ளது கப்பல் போக்குவரத்து பாதிக்கப்படாமல் இருக்க வாடகை உட்பட பல்வேறு கட்டணங்களில் மத்திய அரசு விலக்கு அளித்துள்ளது' என கப்பல் போக்குவரத்து துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.

இது குறித்து மத்திய கப்பல் போக்குவரத்து துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 'கொரோனா' வைரஸ் பரவலால் மிகப் பெரிய நெருக்கடி நிலையை நாடு சந்தித்து வரும் வேளையில் கப்பல் போக்குவரத்து துறையை தடையின்றி செயல்பட வைக்க அமைச்சகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.


latest tamil news


நாட்டின் உள்ள பல்வேறு துறைமுகங்களிலும் 46 ஆயிரத்து 202 பயணியருக்கு தெர்மல் ஸ்கேனிங் எனப்படும் காய்ச்சல் கண்டறியும் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. ஜனவரி 27 முதல் பிப்ரவரி 4 வரையிலான காலகட்டத்தில் இந்த சோதனை நடத்தப்பட்டது. அதே போல கப்பல் போக்குவரத்து தடையின்றி நடக்க துறைமுகங்களில் நிறுத்தி வைத்துள்ள கப்பல்கள் சரக்குகள் அகற்றப்படாத கப்பல்களுக்கு கூடுதல் கட்டணங்கள் அபராதங்களில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளன.

துறைமுகங்கள் உட்பட கப்பல் போக்குவரத்து துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள அலுவலக ஊழியர்களின் சம்பளத்தில் இருந்து பிரதமர் நிவாரண நிதிக்கு ஏழு கோடி ரூபாய் நிதி உதவி அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankar - Nellai,இந்தியா
08-ஏப்-202011:15:55 IST Report Abuse
sankar எல்லாத்தையும் நிறுத்திவிட்டு கப்பல் போக்குவரத்தை இயக்குவது என்ன லாஜிக் - தவறு - அதிகமான தொற்று இதில் வர வாய்ப்பு உள்ளது - ஒவ்வொரு விஷயத்தையும் சரிபார்த்துக்கொன்டு இருக்க முடியாது - இதை நிறுத்தினால்தான் முழுமையான தடுப்பு என்பதை ஏற்படுத்த முடியும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X