பொது செய்தி

இந்தியா

மார்ச்சில் மட்டும் 1.11 கோடி வீட்டு சமையல் காஸ் சிலிண்டர்கள் வினியோகம்

Updated : ஏப் 08, 2020 | Added : ஏப் 08, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
Tamil Nadu, gas cylinder, tn news update, coronavirus, covid 19, corona news, cooking gas, மார்ச், காஸ், சிலிண்டர், வினியோகம்

சென்னை: தமிழகத்தில், மார்ச் மாதத்தில் மட்டும், 1.11 கோடி வீட்டு சமையல் காஸ் சிலிண்டர்கள் வினியோகம் செய்யப்பட்டுள்ளன.

பொதுத் துறையை சேர்ந்த, இந்தியன் ஆயில், பாரத், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் எண்ணெய் நிறுவனங்களுக்கு, தமிழகத்தில், 2.38 கோடி வீட்டு சமையல் காஸ் சிலிண்டர் வாடிக்கையாளர்கள் உள்ளனர். அவர்களின் வீடுகளுக்கு, அந்நிறுவனங்கள், 1,600 ஏஜென்சிகள் வாயிலாக, தினமும் சிலிண்டர்களை வினியோகம் செய்கின்றன.


latest tamil news


கொரோனா' வைரஸ் பரவுவதை தடுக்க, ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இருப்பினும், வீடுகளுக்கு தொடர்ந்து, காஸ் சிலிண்டர் வினியோகம் செய்யப்படுகிறது. அதன்படி, மார்ச் மாதத்தில் மட்டும், இந்தியன் ஆயில், 66.82 லட்சம்; பாரத், 27 லட்சம்; ஹிந்துஸ்தான் பெட்ரோலியம், 17.14 லட்சம் என, மொத்தம், 1.11 கோடி சிலிண்டர்களை வினியோகம் செய்துள்ளன. இது, 2019 மார்ச்சில், 1.01 கோடி சிலிண்டர்களாக இருந்தது. இம்மாதம், 1ம் தேதி முதல், 6ம் தேதி வரை மட்டும், அந்நிறுவனங்கள், 26 லட்சம் சிலிண்டர்களை வினியோகம் செய்துள்ளன.


latest tamil news


இதுகுறித்து, எண்ணெய் நிறுவன அதிகாரி ஒருவர் கூறியதாவது:ஊரடங்கு அமலில் உள்ள நிலையிலும், காஸ் நிரப்பும் மையங்கள், முழு வீச்சில் செயல்படுகின்றன. இதனால், வீடுகளுக்கு, காஸ் சிலிண்டர்கள், தடையின்றி வழங்கப்படுகிறது. இருப்பினும், சிலர், தட்டுப்பாடு ஏற்படுமோ என்ற அச்சம் காரணமாக, சிலிண்டர் காலியாவதற்குள், அடுத்த சிலிண்டருக்கு பதிவு செய்கின்றனர். இதனால், தினமும் சராசரியாக, 4 லட்சமாக இருந்த சிலிண்டர் வினியோகம், தற்போது, 5 லட்சமாக அதிகரித்துள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
atara - Pune,இந்தியா
08-ஏப்-202012:11:31 IST Report Abuse
atara Note: When the LPG Cylinder is collected by customer from LPG Agent office , The Delivery Charges is given discount of Rs.5 so , So how many Cylinders customers collected in person , Will the tem is correct to refund the Excess money taken by LPG Dealers.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X