நிறுவனங்களுக்கு ஊக்கத் தொகை: ரூ.31 லட்சம் கோடி ஒதுக்கீடு

Updated : ஏப் 08, 2020 | Added : ஏப் 08, 2020 | கருத்துகள் (8)
Share
Advertisement
Italy, economic aid, govt of Italy, coronavirus, PM Giuseppe Conte, incentive scheme, covid 19, இத்தாலி, பிரதமர், கூடுதல், பொருளாதார, ஊக்கத்தொகை,

ரோம்: இத்தாலி அரசு, தொழில் நிறுவனங்களுக்கு, 31 லட்சம் கோடி ரூபாய் ஊக்கச் சலுகை திட்டத்தை அறிவித்துள்ளது.

ஐரோப்பிய நாடான இத்தாலியில், கொரோனாவால், 17 ஆயிரத்து, 127 பேர் இறந்துள்ளனர். ஒரு லட்சத்து, 35 ஆயிரத்து, 586 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கு, ஊரடங்கு உத்தரவால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதால், பெரும் இழப்பை சந்தித்துள்ளன.


latest tamil news


இது குறித்து, இத்தாலி பிரதமர், கியுசெப்பி கான்ட், 'கூறியதாவது: தொழில் நிறுவனங்களுக்கு மிகப் பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இத்தருணத்தில், அன்னிய நிறுவனங்கள், இத்தாலியின் நலிந்த நிறுவனங்களை கையகப்படுத்த விட மாட்டோம். ஏற்கெனவே, பல்வேறு கடன் வசதிகளுக்காக, 25 லட்சம் கோடி ரூபாய் ஊக்கச் சலுகை திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது, குறிப்பாக, ஏற்றுமதியால் பாதிக்கப்பட்டுள்ள நிறுவனங்களுக்கு உதவ, மேலும், 31 லட்சம் கோடி ரூபாய் ஊக்கச் சலுகை திட்டம் செயல்படுத்தப்படும்.


latest tamil newsஇதன் மூலம், இத்தாலியின் பொருளாதாரம் சரிவில் இருந்து மீண்டெழும். வரும்,13ம் தேதி ஊரடங்கு உத்தரவு முடிவுக்கு வருகிறது. எனினும், அதை நீட்டிப்பது குறித்து, பல்வேறு வல்லுனர்களின் கருத்துக்களை கேட்டு, முடிவு எடுக்கப்படும். நிறுவனங்கள், படிப்படியாக திறக்க அனுமதிக்கப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.

இத்தாலியில், புதிய பாதிப்பு குறைந்து வருகிறது. எனினும், அந்நாட்டில், ஊரடங்கு உத்தரவு மே, முதல் வாரம் வரை நீட்டிக்கப்படும் என, தெரிகிறது.

Advertisement
வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Girija - Chennai,இந்தியா
08-ஏப்-202015:41:46 IST Report Abuse
Girija தலைப்பையும் போட்டோவையும் பார்த்து ஒரு நிமிஷம் ஆடிப்போயிட்டேன், இந்த ராகு திரும்பி வந்துட்டதான்னு? இத்தாலியில் ங்கிற வார்த்தையை தலைப்பில் சேர்த்து போட்டால் குறைந்த போய்விடுவீர்கள் என்று ?
Rate this:
Cancel
Pandiyan - Chennai,இந்தியா
08-ஏப்-202012:50:19 IST Report Abuse
Pandiyan அய்யா எங்க PM 1.7 லட்சம் கோடி ஒதுக்கிறாங்கோ ..ஆனா உங்களைவிட 15 மடங்கு ஜனத்தொகை அதிகமுக்கோ ..அப்போ நாங்க தானே பெரிய ஆளுங்கோ ..எப்படி எங்க குஜராத்தி கிட்ட நீங்க ஒன்னும் இல்லிங்கோ
Rate this:
Cancel
g.s,rajan - chennai ,இந்தியா
08-ஏப்-202011:28:35 IST Report Abuse
g.s,rajan In India many Corporate companies, private sector companies will take steps to retrench their employees by mentioning Corona citing losses during lockdown periods, they will also deduct from their own leaves even though the Government s the Holidays for the locked period,more torture and mental agony to their employees will follow after Corona.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X