பொது செய்தி

இந்தியா

கர்நாடகா - கேரளா எல்லை திறப்பு; இரு தரப்புக்கும் இடையே ஒப்பந்தம்

Updated : ஏப் 08, 2020 | Added : ஏப் 08, 2020 | கருத்துகள் (11)
Share
Advertisement

புதுடில்லி: கொரோனா வைரஸ் பிரச்னை காரணமாக மூடப்பட்டிருந்த, கர்நாடகா - கேரளா எல்லை மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பாக, இரு தரப்புக்கும் இடையே ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளதாகவும், மத்திய அரசு தரப்பில், உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



latest tamil news


கொரோனா வைரஸ் நாடு முழுதும் வேகமாக பரவி வருகிறது. கேரளாவில், கொரோனா பாதிப்பு அதிகம் உள்ளதால், அங்கிருந்து தங்கள் மாநிலத்துக்கு கொரோனா பரவி விடும் என்ற பயத்தில், கேரளாவுடனான எல்லையை, கர்நாடக அரசு, சமீபத்தில் மூடியது.

கேரளா - கர்நாடகா எல்லையில் உள்ள சாலைகள் தடுப்புகள் வைத்து மூடப்பட்டு, அதை மீறி யாரும் உள்ளே வராமல் இருக்க, போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்; இதற்கு, கேரள அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. கர்நாடகாவின் நடவடிக்கையால், அங்கு வசிக்கும் தங்கள் மாநிலத்தவர் யாரும் வர முடியாத சூழல் இருப்பதாகவும், அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், கேரள அரசு சார்பில், உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.


latest tamil news


இது, மக்களின் அடிப்படை உரிமையை மீறும் செயல் என்றும், கேரளா முறையிட்டது. இதையடுத்து, இரு மாநில அரசு அதிகாரிகளும், இது குறித்து ஆலோசித்து முடிவை தெரிவிக்கும்படியும், இது குறித்து மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்யக் கோரியும், உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், இந்த வழக்கு, தலைமை நீதிபதி, எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான அமர்வு முன், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.அப்போது, மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல், துஷார் மேத்தா கூறியதாவது: உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி, இரு மாநில அதிகாரிகளும் ஆலோசித்து, சுமுக தீர்வுக்கு வந்துள்ளனர். கேரளாவுடனான எல்லையை, கர்நாடகா ஏற்கனவே திறந்து விட்டது. இரு மாநில அரசுகளுக்கும் இடையே, இது தொடர்பாக சுமுகமான ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு, அவர்வாதிட்டார். இதையடுத்து, இந்த வழக்கை முடித்துவைப்பதாக, நீதிபதிகள் அறிவித்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
13-ஏப்-202021:05:01 IST Report Abuse
A.George Alphonse இனிமேல் மிக தாராளமாக இந்த கொரோனா வைரஸ் இந்த மாநிலங்களில் ஏற்றுமதி,இறக்குமதி செய்யப்படும் இதன் மூலம் இந்த வாகனங்கள் கடக்கும் மற்ற மாநிலங்களிலும் மிக சுலபமாக இந்த கரோனா வைரஸ் பரவ அவகாசம் உண்டு.பின்பு எதற்காக இந்த Red,Orange and Green zones buildappu .ஒன்னுமே புரியலே இவர்களின் நோக்கமும் தெரியலே.
Rate this:
Cancel
Aaandal - Tamil Nadu,இந்தியா
08-ஏப்-202019:00:01 IST Report Abuse
Aaandal ,செயவீர்களா, செயவீர்களா, செயவீர்களா, செயவீர்களா, செயவீர்களா, செயவீர்களா
Rate this:
Cancel
Tamilan - kailasa,இந்தியா
08-ஏப்-202017:46:41 IST Report Abuse
Tamilan கொலையாளிகள் .....இதே போல் நம் மாநிலம் என்றால் மதிக்கவே மாட்டான் . கொலையாளிகள் ...ரொம்ப சுயநலவாதிகள் ...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X