கொரோனா சிகிச்சைக்கு நெறிமுறைகளை வகுக்க குழு| Coronavirus: Panel formed to generate guidelines for treatment | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா சிகிச்சைக்கு நெறிமுறைகளை வகுக்க குழு

Updated : ஏப் 08, 2020 | Added : ஏப் 08, 2020 | கருத்துகள் (8)
Share
சென்னை: கொரோனா வைரஸ் சிகிச்சைக்கு நெறிமுறைகளை வகுக்க 19 மருத்துவ நிபுணர்கள் கொண்ட குழுவை தமிழக அரசு நியமித்துள்ளது.தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது. தற்போது வரை 690 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 8 பேர் உயிரிழந்துள்ளனர்.இந்நிலையில், கொரோனா வைரசுக்கு சிகிச்சை அளிப்பது தொடர்பாக நெறிமுறைகளை வகுக்க 19
coronavirus, corona, tamil nadu, Tn, tn news, tamil news, coronavirus in tamil nadu, covid 19, கொரோனா, கொரோனாவைரஸ், டாக்டர்கள், நிபுணர்குழு, தமிழகஅரசு

சென்னை: கொரோனா வைரஸ் சிகிச்சைக்கு நெறிமுறைகளை வகுக்க 19 மருத்துவ நிபுணர்கள் கொண்ட குழுவை தமிழக அரசு நியமித்துள்ளது.


தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது. தற்போது வரை 690 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 8 பேர் உயிரிழந்துள்ளனர்.இந்நிலையில், கொரோனா வைரசுக்கு சிகிச்சை அளிப்பது தொடர்பாக நெறிமுறைகளை வகுக்க 19 பேர் கொண்ட நிபுணர் குழுவை தமிழக அரசு நியமித்துள்ளது.

இந்த குழுவில்,

01. சென்னை மருத்துவ கல்லூரி பேராசிரியர் டாக்டர்.ரகுநந்தன்

02. சென்னை மருத்துவ கல்லூரியில் ஓய்வு பெற்ற மருந்து துறை இயக்குநர் டாக்டர்.ராஜேந்திரன்.

03. ஸ்டான்லி மருத்துவ கல்லூரி பேராசிரியர் டாக்டர். ஸ்ரீதர்

04. கீழ்பாக்கம் மருத்துவ கல்லூரி பேராசிரியர் டாக்டர்.பரந்தாமன்

05.கீழ்பாக்கம் மருத்துவ கல்லூரி துணை பேராசிரியர் டாக்டர்.சந்திரசேகர்

06. டாக்டர். கிருஷ்ணராஜசேகர்

07. தொராசிக் மருத்துவ மையத்தின் முன்னாள் இயக்குநர் டாக்டர். மஹாலிங்கம்

08. தொராசிக் மருத்துவ மையத்தின் முன்னாள் இயக்குநர் டாக்டர்.சி. ரங்கநாதன்

09. சென்னை அப்பல்லோ மருத்துவ மனை டாக்டர் ராமசுப்ரமணியன்

10. ஸ்ரீராமச்சந்திரா மருத்துவ கல்லூரியின் துறைத்தலைவர் டாக்டர்.ராமகிருஷ்ணன்

11. வேலூர் சிஎம்சி துறைத்தலைவர் டாக்டர்.ஆப்ரஹாம் மாத்யூஸ்

12. வேலூர் சிஎம்சியின் டாக்டர்.ஆனந்த் ஜகாரியா

13. சென்னை ஸ்டான்லி மருத்துவ கல்லூரியின் டாக்டர்.ஹரிஹரன்

14. விழுப்புரம் மருத்துவ கல்லூரியின் மருந்து துறைத்தலைவர் டாக்டர்.சிவக்குமார்

15. செங்கல்பட்டு மருத்துவ கல்லூரி மருந்து துறைதலைவர் நர்மதாலட்சுமி

16. சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் டாக்டர்.ராமராஜகோபால்

17. சென்னை அப்பல்லோ மருத்துவமனையின் டாக்டர்.பாபு ஆப்ரஹாம்

18. சென்னை அப்பல்லோ மருத்துவமனையின் டாக்டர்.ராமகோபால்கிஷன்

19. சென்னை விஜயா மருத்துவமனையின் கண்காணிப்பாளர் டாக்டர். என்.பாபு ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.


latest tamil news
இந்த குழுவினர் கொரோனா பரவுதலை கண்காணித்து அதனை தடுப்பதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பார்கள். கொரோனா மற்றும் கொரோனா அறிகுறியுடன் சிகிச்சை வழிமுறைகளை வகுப்பார்கள். கொரோனா வைரஸ் தொடர்பாக சர்வதேச அளவில் வெளியிடப்படும் ஆய்வுகளை ஆராய்ந்து, தமிழகத்தில் அமல்படுத்த நடவடிக்கை எடுப்பார்கள் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X