கொரோனாவுக்கு டிரைவ்-த்ரூ சோதனை மையம்: துபாயில் அமைப்பு

Updated : ஏப் 08, 2020 | Added : ஏப் 08, 2020 | கருத்துகள் (7)
Share
Advertisement

அபுதாபி: கொரோனா வைரசை எதிர்ப்பதற்கான தீவிர முயற்சிகளின் ஒரு பகுதியாக, துபாய் சுகாதார ஆணையம், அல் நாஸர் கிளப்பில் டிரைவ்-த்ரூ கொரோனா சோதனை மையம் பொது மக்களுக்காக திறக்கப்பட்டுள்ளதாக அறிவித்தது.



latest tamil news


உலகையே உலுக்கிக்கொண்டிருக்கும் கொரோனா வைரசால், பல ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா அறிகுறிகளுடன் இருக்கக்கூடிய நபர்களுக்கு பல்வேறு நாடுகளும் சோதனை செய்து குறிப்பிட்ட கால இடைவெளியில் கொரோனா தாக்கம் உண்டா இல்லையா என பரிசோதனை முடிவுகளை சொல்லி விடுகிறது. இதன்மூலம் மற்றவர்களுக்கு பரவுவதற்கு முன்பாகவே நோயாளிகள் உடனடியாக தனிமைப்படுத்தப்பட்டு, போதிய சிகிச்சைகள் மேற்கொள்ள முடிகிறது. பலர், கொரோனா அறிகுறியை உணராமலும் பாதிக்கப்பட்டு வருவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் துபாய் சுகாதார ஆணையம், அல் நாஸ்ர் கிளப்பில் பொதுமக்களுக்காக டிரைவ்-த்ரூ கொரோனா சோதனை மையம் திறக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.


latest tamil news


இந்த டிரைவ்-த்ரூ சோதனை மையம், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டினர் அனைவரும் தினமும் காலை 8 மணி முதல் மாலை 6.30 மணி வரை திறந்திருக்கும். சோதனை மையத்திற்கு வருபவர்கள் தங்கள் காரை விட்டு வெளியேறாமல் ஐந்து நிமிடத்தில் சோதனை செய்யலாம். மூத்த குடிமக்கள், கர்ப்பிணி பெண்கள் ஆகியோருக்கு மட்டும் இலவசமாகவும் மற்றவர்களுக்கு 100 டாலர் அளவிற்கு செலவாகும் எனவும் கூறப்பட்டுள்ளது. சோதனை முடிவுகள் 48 மணி நேரத்தில் கிடைக்கும் என்று துபாய் ஊடக அலுவலக செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

நாள் ஒன்றுக்கு 250க்கும் மேற்பட்ட சோதனை திறன் கொண்ட டிரைவ்-த்ரூ மையம், கொரோனாவை சோதிக்க மக்களுக்கு எளிதில் அணுகக்கூடியதாக உள்ளது. சமூகத்தின் ஆரோக்கியத்தையும் பாதுகாப்பையும் உறுதி செய்யும் முயற்சியாக பார்க்கப்படுகிறது. பல்வேறு உயர் பயிற்சி பெற்ற மருத்துவ பணியாளர்களால் செயல்படும் இந்த மையம், துபாயில் டிஹெச்ஏ நடத்தும் மூன்று சோதனை மையங்களில் ஒன்றாகும்.


அழைப்பு மற்றும் பதிவு


latest tamil news


சோதனை மேற்கொள்பவர்கள் தங்கள் வருகையை பதிவு செய்ய, மக்கள் DHA ஐ 800DHA (800342)-ல் அழைக்கலாம். பதிவுசெய்ததும், உறுதிப்படுத்தல் தகவலை பெறுவர். பின்னர், டிரைவ்-த்ரூ சோதனை மையத்திற்கும் தகவல் வழங்கப்பட்டு, சரிபார்க்கப்படும். சோதனைக்கு வருபவர்கள் தங்கள் காரிலேயே இருக்கலாம். அவர்களிடம் வரும் டிஹெச்ஏ மருத்துவ பணியாளர்கள் சோதனை மேற்கொள்வர். அதுவரையில் காரை ஜன்னல் கண்ணாடியை மூடியவாரு இருக்க அறிவுறுத்தப்படுகின்றனர். சுமார் ஐந்து நிமிடங்கள் நீடிக்கும் ஒரு நடைமுறையில் உடல் வெப்பநிலையை சரிபார்க்ப்பட்டு, நாசியில் துணியால் சளி மாதிரிகளை எடுத்துக்கொள்வர். அடுத்த 24 முதல் 48 மணிநேரத்தில் சோதனை முடிவுகள் எஸ்எம்எஸ் மூலமாக தெரிவிக்கப்படும். அதுவரையில் தங்கள் வீடுகளில் சுய தனிமைபடுத்தலை பின்பற்ற அறிவுறுத்தப்படுகின்றனர்.


அனுமதி தேவை

பிற அத்யாவசிய நோக்கங்களைப் போலவே, துபாயில் உள்ள நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை உச்சக் குழுவின் உத்தரவுகளின்படி, சோதனைக்காக வீட்டை விட்டு வெளியேற நினைப்பவர்கள் https://dxbpermit.gov.ae/permits என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டியது அவசியமாகும். முகமூடி, கையுறைகள் அணிவது உள்ளிட்ட அத்யாவசிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மக்கள் எடுக்க வேண்டும். சோதனைகளை மேற்கொள்ளும்போது மூன்றுக்கும் மேற்பட்ட பயணிகள் ஒரு காரில் இருக்க அனுமதிக்கப்படுவதில்லை.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Tamil Tiger - Tamil Nadu,இந்தியா
08-ஏப்-202018:53:49 IST Report Abuse
Tamil Tiger ,செயவீர்களா, செயவீர்களா, செயவீர்களா, செயவீர்களா, செயவீர்களா, செயவீர்களா
Rate this:
Cancel
கதிர் - கரூர் -> கான்பெரா,ஆஸ்திரேலியா
08-ஏப்-202013:11:13 IST Report Abuse
கதிர் . ஆஸ்திரேலியாவில் இது வந்து 40 நாட்கள் ஆகிறது. நான் பரிசோதனை என் காரில் சென்று டிரைவ்-த்ரூ மூலமாக 20 நாட்கள் முன்பே எடுத்துவிட்டேன்.
Rate this:
Cancel
Bharathi - Melbourne,ஆஸ்திரேலியா
08-ஏப்-202013:01:58 IST Report Abuse
Bharathi ஆஸ்திரேலியாவில் ரெண்டு வாரத்திற்கு முன்பே இதை ஆரம்பித்து விட்டார்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X