இலங்கைக்கு இலவசமாக 10 டன் மருந்து; இந்தியாவிற்கு உலகமே பாராட்டு

Updated : ஏப் 08, 2020 | Added : ஏப் 08, 2020 | கருத்துகள் (56)
Share
Advertisement
கொழும்பு: இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை, 186 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; ஆறு பேர் உயிரிழந்துள்ள நிலையில், 38 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில், 263 பேர் மருத்துவமனைகளில் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். 'இலங்கையில் உள்ள சுகாதாரக் கட்டமைப்பின் படி, 2,000 கொரோனா நோயாளிகளுக்கு மட்டுமே

கொழும்பு: இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை, 186 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; ஆறு பேர் உயிரிழந்துள்ள நிலையில், 38 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில், 263 பேர் மருத்துவமனைகளில் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.


latest tamil news
'இலங்கையில் உள்ள சுகாதாரக் கட்டமைப்பின் படி, 2,000 கொரோனா நோயாளிகளுக்கு மட்டுமே சிகிச்சை அளிக்க முடியும். அதனால், வைரஸ் பரவலைத் தடுக்க ஊரடங்கு நீடிக்கப்படுகிறது. ஊரடங்கைப் பின்பற்றி, அனைத்து மக்களும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாகாமல் தற்காத்து கொள்ளவும்' என, இலங்கை சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. வெறும் 2,000 பேருக்கு மட்டுமே சிகிச்சையளிப்பதற்கான கட்டமைப்பு உள்ளதாக அரசு அறிவித்திருப்பது, இலங்கை மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.latest tamil newslatest tamil news


இந்நிலையில், அண்டை நாடான இந்தியாவிடம் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கத் தேவையான மருந்துகள் கொடுத்து உதவுமாறு, இலங்கை அரசு கோரிக்கை விடுத்திருந்தது. இலங்கை அரசின் கோரிக்கையை ஏற்று, அந்நாட்டிற்கு, 10 டன் மருந்துகளை இந்தியா இலவசமாக அனுப்பி வைத்துள்ளது.இந்தியாவிற்கு சொந்தமான சிறப்பு விமானம் இந்த மருந்துகளை, நேற்று மாலை இலங்கையின், பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு கொண்டு சேர்த்தது.


latest tamil news
இந்த நெருக்கடி மிகுந்த சூழலில், இலங்கை மக்களைக் காப்பதற்காக, மருந்துகளை இலவசமாகக் கொடுத்து உதவிய, இந்திய பிரதமர் மோடிக்கும் இந்திய மக்களுக்கும், இலங்கை அதிபர் கோட்டாபய ராஜபக்சே தனது டுவிட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார்.

இலங்கை மக்களுக்கு மட்டுமின்றி பல்வேறு நாடுகளுக்கும் உதவி வரும் பிரதமர் மோடியையும் இந்திய மக்களையும், பல்வேறு நாட்டு மக்களும் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.

Advertisement
வாசகர் கருத்து (56)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Raja - Thoothukudi,இந்தியா
10-ஏப்-202021:43:37 IST Report Abuse
Raja தமிழன் வயித்துக்கு சோறு இல்லாமல் கிடக்கறான். இலங்கைக்கு அள்ளிக் கொடுக்கணுமான்னு மோடி என்ன செய்தாலும் எதிர்க்கும் ஒரு கூட்டம் ஊளையிடும்
Rate this:
Cancel
Yes your honor - கோயமுத்தூர்,இந்தியா
10-ஏப்-202016:54:32 IST Report Abuse
Yes your honor திரு.மோடி அவர்களுக்கு உள்ளது இந்துத்துவ மனது. அடுத்தவர் அழும்பொழுது சிரிக்கும் குறுகிய எண்ணம், கதறக் கதற குரல்வளையை அருப்பவர்களுக்குத் தான் வரும், நமக்கெல்லாம் வராது. இந்தியாவும் அதன் கொள்கைகளும் மனித குலத்திற்கே எவ்வளவு நன்மையானது என்பதை உலகம் இன்று நேரில்கண்டு புரிந்து கொள்ளத்துவங்கிவிட்டது. இந்த இக்கட்டான நேரத்தில் உலக நாடுகளுடன் தோளோடு தோள் நின்று, தான் ஒரு தன்நிகரில்லாத் தலைவன் எனப்புரிய வைத்துக்கொண்டிருக்கும் திரு. மோடி அவர்களின் முன் பொறாமை அரசியல் செய்யும் சுடலை மற்றும் மவுன சிங்க் குரூப்பெல்லாம் வெறும் பூஜ்ஜியம் தான். வெறும் முரட்டுத் தனத்தை மட்டுமே தெரிந்து வைத்துக்கொண்டு, சுய ஆற்றல் இல்லாத இங்குள்ள சில சுயனலக் கட்சித் தலைவர்கள் மட்டும் திருந்திவிட்டால் போதும், திரு.மோடி அவர்களின் உன்னதத் தலைமையின் கீழ் நம் இந்தியத் தாய்த் திருநாடு, தரணியில் தலைசிறந்ததாக எளிதில் ஆகிவிடும். இந்த நேரத்தில், இந்தியர்களாகிய நாம் அனைவரும் ஜாதி மத பேதங்களின்றி, கட்சிநல, சுயநல விருப்பு வெறுப்பின்றி, நம் பிரதமர் மற்றும் முதலமைச்சர் அவர்களுடன் தோளோடு தோள் நின்று, பணத்தால் இல்லாவிட்டாலும் நம் அனைவர் மனத்தால் நம் தாய்த் திருநாட்டை வல்லரசாக உயர்த்திப் பிடிக்க உறுதி ஏற்ப்போம். சமுதாய விலகல் மற்றும் முககவசம் அணிந்து வெளியே வருதல் போன்ற அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிகைகளையும் வெறுத்து ஒதுக்காமல், இவையணைத்தும் நம் ஒவ்வொருவரின் நன்மைக்கே என்று ஏற்றுக்கொண்டு செயல்படுத்தி கொரோனா எதிர்ப்பு யுத்தத்தில் பங்கேற்ப்போம்.
Rate this:
Milirvan - AKL,நியூ சிலாந்து
10-ஏப்-202017:54:01 IST Report Abuse
Milirvan//திரு.மோடி அவர்களுக்கு உள்ளது இந்துத்துவ மனது. அடுத்தவர் அழும்பொழுது சிரிக்கும் குறுகிய எண்ணம், கதறக் கதற குரல்வளையை அறுப்பவர்களுக்குத் தான் வரும், நமக்கெல்லாம் வராது.// நிஜம்தான்.. மதஅறிவுறுத்தல்கள், வழிகாட்டுதல்கள், மற்றும் மதகுருக்களின்பிரசங்கங்கள் அந்தந்த மதத்தை சார்ந்தோரின் மனநிலையில் வெகுவாக ஆதிக்கம் செலுத்துகிறது.. சமுதாயத்திலும் பரவுகிறது.. பாவபுண்ணியங்களை நம்பும் சமுதாயத்திற்கும், எதிர்கருத்துடையோரை கழுத்தறுத்து விடு என்னும் சமுதாயத்திற்கும் மிக்க வேறுபாடு உண்டு.....
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
10-ஏப்-202004:44:50 IST Report Abuse
J.V. Iyer இந்த மனிதாபிமான நடவடிக்கைக்கு தலை வணங்குகிறோம். மக்களுக்கு உயிர் காக்கும் மருந்தை கையில் வைத்துக்கொண்டு அழகு பார்ப்பதில் அர்த்தமில்லை. நேரத்தில் உயிர்கள் காக்க மருந்தை இலவசமாக அனுப்பிய இந்தியாவின் பெருந்தன்மை உலகிற்கே எடுத்துக்காட்டு. உயிர் காக்கும் நண்பன் இந்தியா என்று பெயரெடுத்துள்ளது. வாழ்க மோடிஜி, பாஜக அரசு.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X