வீட்டிலிருந்து பயிற்சி - கோஹ்லியை சவாலுக்கு அழைத்த பெடரர்! | Federer challenges Kohli to play tennis | Dinamalar

வீட்டிலிருந்து பயிற்சி - கோஹ்லியை சவாலுக்கு அழைத்த பெடரர்!

Added : ஏப் 08, 2020 | கருத்துகள் (5)
ஜெனிவா: கொரோனா வைரஸ் பரவல் பொருளாதாரத்தை மட்டுமல்ல, விளையாட்டுத் துறையையும் மோசமாக பாதித்துள்ளது. ஒலிம்பிக் போட்டிகள், ஐ.பி.எல்., பிரெஞ்ச் ஓபன், விம்பிள்டன் போட்டிகள் உட்பட ஏராளமான முக்கிய விளையாட்டுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.விளையாட்டு வீரர்கள் பலரும் தனிமைப்படுத்திக் கொண்டு உள்ளனர். பொழுதை கழிக்க சமூக ஊடகங்களில் தீவிரமாக இயங்குகின்றனர். சுவிஸ் டென்னிஸ்
Virat Kohli, Roger Federer, Tom Brady, Stephen Curry, Toni Kroos, viral news, sports news, coronavirus, corona, covid 19, federer, கொரோனா, கொரோனாவைரஸ், ரோஜர்பெடரர், பெடரர், விராட்கோஹ்லி, கோஹ்லி,

ஜெனிவா: கொரோனா வைரஸ் பரவல் பொருளாதாரத்தை மட்டுமல்ல, விளையாட்டுத் துறையையும் மோசமாக பாதித்துள்ளது. ஒலிம்பிக் போட்டிகள், ஐ.பி.எல்., பிரெஞ்ச் ஓபன், விம்பிள்டன் போட்டிகள் உட்பட ஏராளமான முக்கிய விளையாட்டுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

விளையாட்டு வீரர்கள் பலரும் தனிமைப்படுத்திக் கொண்டு உள்ளனர். பொழுதை கழிக்க சமூக ஊடகங்களில் தீவிரமாக இயங்குகின்றனர். சுவிஸ் டென்னிஸ் நட்சத்திரமான ரோஜர் பெடர், கொரோனா ஊரடங்கு காரணமாக வீட்டில் குடும்பத்தினருடன் நேரம் செலவிட்டு வருகிறார். அவ்வப்போது சமூக ஊடகங்களில், அவரது ரசிகர்களுக்காக சுவாரஸ்யமான வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

சமீபத்தில், வீட்டிலிருந்தே பயிற்சி என்ற பெயரில், டுவிட்டரில் பகிர்ந்துள்ள ஒரு நிமிட வீடியோவில், டென்னிஸ் பந்தை சுவற்றில் அடித்து 'சோலோ டிரில்' செய்கிறார். இந்த வீடியோவை 17 லட்சம் பேர் பார்த்துள்ளனர். ரசிகர்களையும் பதிலுக்கு வீடியோ பதிவிடும் படி கேட்டுக்கொண்டார். அடுத்த பதிவில், இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் கோஹ்லி, கால்பந்தாட்ட வீரர்களான டோனி க்ரூஸ், ரொனால்டோ மற்றும் பில்கேட்ஸ், பியர் கிரில்ஸ் உள்ளிட்டவர்களை குறிப்பிட்டு, நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்? என கேட்டுள்ளார்.


latest tamil newsசுவிட்சர்லாந்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கும் குடும்பங்களுக்கு 1 மில்லியன் சுவிஸ் பிராங்கை, (இந்திய மதிப்பில் ரூ.7.7 கோடி) நிவாரண நிதியாக பெடரர் வழங்கியுள்ளார். ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்திலும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்தே காணப்படுகிறது. ஏப்ரல் 8 நிலவரப்படி, அங்கு 22 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 821 பேர் உயிரிழந்துள்ளனர்.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X