நோயிலிருந்து மீண்டவர்களை மீண்டும் தாக்கியதா கொரோனா? நடுக்கத்தில் தென்கொரியா

Updated : ஏப் 08, 2020 | Added : ஏப் 08, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement

சியோல்: கொரோனா வைரஸ் தொற்றால் சீனா பாதிக்கப்பட்ட ஓரிரு வாரங்களில், அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் முன்னணிக்கு சென்றது தென்கொரியா.



latest tamil news


தொற்றுள்ளவர்களை தனிமைப்படுத்தல், அறிகுறி தென்பட்ட அதிகப்படியானோரை சோதனைக்கு உட்படுத்துதல், விரைவில் சோதனை முடிவை அறிதல், சமூக விலகலை கட்டாயமாக்குதல் போன்றவற்றால் கொரோனா பரவலை மிக விரைவாகக் கட்டுப்படுத்தியது. இதனால் பல்வேறு நாடுகளின் பாராட்டைபெற்றது தென்கொரியா.தென்கொரியாவில் தற்போது, 10 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்; 200 பேர் இது வரை உயிரிழந்துள்ளனர்.


latest tamil news




இந்நிலையில் தென்கொரியாவின் டாயிகு நகரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த, 51 பேர் குணடைந்து வீடுதிரும்பினர். அவர்களுக்கு மீண்டும் கொரோனா அறிகுறிகள் தென்பட்டுள்ளன. மருத்துவ பரிசோதனையில், அனைவருக்கும் மீண்டும் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.


latest tamil news




தென்கொரியா மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில், 'மனிதனின் உடலில் பல்லாயிரம் கோடி செல்கள் உள்ளன. இதில் ஏதோ ஒரு செல்லில் பிரிக்க முடியாத அளவுக்கு கொரோனா வைரஸ் ஒட்டிக்கொண்டு, குணம் அடைந்தவர்களை மீண்டும் தாக்கியுள்ளது' என்றனர்.


latest tamil news





மீண்டும் தாக்க வாய்ப்பில்லை!


இங்கிலாந்து ஈஸ்ட் ஆங்கிலியா பல்கலைக்கழக தொற்று நோய்த்துறை பேராசிரியர் பால் ஹண்ட்டர் கூறுகையில், 'பரிசோதனை முறைகள் தவறாக கையாளப்பட்டு இருக்கவே அதிக வாய்ப்பு உள்ளன. அதனால் தான் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மீண்டும் பாதிக்கப்பட்டதாக புரிந்து கொள்கிறார்கள். என்னை பொறுத்தவரை குணம் அடைந்த ஒருவர் மீண்டும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட வாய்ப்பே இல்லை' என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vanathi Srinivasan - Tamil Nadu,இந்தியா
08-ஏப்-202018:44:00 IST Report Abuse
Vanathi Srinivasan ,செயவீர்களா, செயவீர்களா, செயவீர்களா, செயவீர்களா, செயவீர்களா, செயவீர்களா
Rate this:
Cancel
Murthy - Bangalore,இந்தியா
08-ஏப்-202018:00:31 IST Report Abuse
Murthy உடலில் உள்ள எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதே சிறந்த வழி.......
Rate this:
Cancel
வெகுளி - Maatuthaavani,இந்தியா
08-ஏப்-202015:25:06 IST Report Abuse
வெகுளி இது கொரோனா டெஸ்ட் செய்யும் முறையில் உள்ள தோல்வியை காட்டுகிறது.. அல்லது தென் கொரியா முதலில் கூறியது பொய்கணக்கு....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X