பொது செய்தி

இந்தியா

40 கோடி இந்தியர்கள் வறுமையில் மூழ்கும் அபாயம்: ஐ.நா எச்சரிக்கை

Updated : ஏப் 08, 2020 | Added : ஏப் 08, 2020 | கருத்துகள் (32)
Share
Advertisement
United Nations, UN, united nations news, economy, coronavirus, covid 19, corona, coronavirus outbreak, ஐநா, ஐக்கியநாடுகள், இந்தியா, வறுமை, மூழ்கும், அபாயம்

புதுடில்லி: உலக தொழிலாளர்கள் அமைப்பு இன்று (ஏப்., 8) வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா வைரஸ் காரணமாக போடப்பட்டுள்ள, ஊரடங்கு உத்தரவால் உலகம் முழுக்க 270 கோடி தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 40 கோடி இந்திய முறைசாரா தொழிலாளர்கள், வறுமையின் பிடியில் சிக்கும் அபாயம் உள்ளது என எச்சரித்துள்ளது.

மேலும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: கொரோனா வைரஸால், ஏற்கனவே லட்சக்கணக்கான முறைசாரா தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு மற்றும் பிற கட்டுப்பாடுகள் காரணமாக, இந்தியா, நைஜீரியா, பிரேசில் ஆகிய நாட்டின் தொழிலாளர்கள் கணிசமாக பாதிப்படைந்துள்ளனர்.


latest tamil newsகுறிப்பாக, குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் உள்ள நாடுகளில், முறைசாரா தொழிலாளர்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். இவர்களுக்கான சுகாதார சேவைகள் மற்றும் சமூக பாதுகாப்பு அம்சங்களும் குறைவாகவே உள்ளது. பொருத்தமான கொள்கை இல்லை என்றால், தொழிலாளர்கள் வறுமையில் வீழ்வதற்கான அதிக ஆபத்தை எதிர்கொள்வார்கள். தங்கள் வாழ்வாதாரத்தை மீண்டும் பெறுவதிலும் அதிக சவால்களை அனுபவிப்பார்கள்.
இந்தியாவில், முறைசாரா பொருளாதாரத்தில் பணிபுரியும் 90 சதவீத மக்கள், அதாவது 40 கோடி பேர், இந்நெருக்கடியான நிலையால் வறுமையை சந்திக்கும் அபாயத்தில் உள்ளனர். தற்போதைய ஊரடங்கால் பலர் கிராமப்புறங்களுக்கு திரும்பி உள்ளனர்.


latest tamil news


முழு ஊரடங்கு மற்றும் பகுதி ஊரடங்கால் 270 கோடி தொழிலாளர்கள் உலகம் முழுக்க பாதிக்கப்பட்டுள்ளனர். இது உலக தொழிலாளர்கள் எண்ணிக்கையில் 81 சதவீதம் ஆகும். மேலும், தொழிலாளர்களுக்கு ஊதியக் குறைப்பு, பணிநேரம் குறைப்பு, தகுதிக்கும் குறைந்த பணி போன்ற சிக்கல்கள் ஏற்படும். முக்கிய துறைகளான சில்லறை வர்த்தகம், தங்குமிடம் மற்றும் உணவு சேவைகள் துறை, உற்பத்தி துறை ஆகியவை வேலைவாய்ப்பில்லாதவைகளாக மாறியுள்ளன. துரித கதியிலான நடவடிக்கைகள் தான் மக்களை காப்பாற்றும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (32)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
பாலசுப்பிரமணியன் அ. Lies, Big lies and Statistics "பொய், பெரிய பொய், புள்ளி விவரம்" என்று ஆங்கிலத்தில் ஓர் வழக்கு உண்டு. இதுதான் இவர்கள் சொல்வது எல்லாம். எங்கோயோ ஓர் அமெரிக்க கட்டிடத்தின் குளிர்சாதன மாடியில் உட்கார்ந்து கொண்டு, மனதில் வந்தபடி எழுதவதற்கு இவர்களுக்கு சம்பளம் கொடுக்கிறார்கள். அதையும் நம்பும் பாமர்களும் உண்டு.
Rate this:
Cancel
Tamilan - NA,ஐக்கிய அரபு நாடுகள்
08-ஏப்-202020:23:14 IST Report Abuse
Tamilan இவர்கள் கூறித்தான் அனைவருக்கும் தெரியவேண்டும் என்பதல்ல . இவர்கள் கொடுத்த ஒரு பில்லியன் டாலர் இவர்களின் கண்ணீர் துடைக்க கூட பத்தாது . எதற்காக இவர்கள் வீணாக கத்துகிறார்கள். உலகில் உள்ள அனைவரையும் மிரட்டுகிறார்கள் . மக்கள் மத்தியில் பீதியை கிளப்புகிறார்கள் . உலக அரங்கில் ஒரு நாட்டுக்கு எதிராக கூச்சலிடுகிறார்கள் ?. இதற்க்கு எல்லாம் காரணமானவர்களை மடியில் கட்டிக்கொண்டு , வேஷம் போடுவது ஏன் ?. இதற்க்கு காரணமானவர்களை இனம் கண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் . அப்போது ஐக்கிய நாடுகள் சபையையே மூட வேண்டி வரலாம் .
Rate this:
Cancel
08-ஏப்-202020:01:32 IST Report Abuse
தமிழ் உண்மையைத்தான் சொல்லியிருக்கிறார்கள்.நாட்டில் இப்போதிருக்கும் நிலைமை என்னவென்று அனைவருக்கும் தெரியும்.பசியில் உயிரை விடுவதைவிட நோயில் போவதே மேல்.அதெல்லாம் அந்த நிலைமையில் இருப்பவருக்குத்தான் தெரியும்.ஊரடங்குக்கு பின் இந்தியாவில் பாலாறும் தேனாறும் ஓடும் என்று சொல்லியிருந்தால் பக்கோடா பார்ட்டிகளுக்கு இனிச்சிருக்கும்.இப்படி நம்மை அசிங்கப்படுத்திவிட்டார்களே என்று அவர்களுக்கு கோவம்.அவர்களை சொல்லி குற்றமில்லை. ஓயாமல் சொம்படிப்பது என்பது அவர்களுடைய அன்றாட கடமை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X