பொது செய்தி

இந்தியா

ஊரடங்கை நீட்டிக்க மாநில அரசுகள் பரிந்துரை: பிரதமர்

Updated : ஏப் 08, 2020 | Added : ஏப் 08, 2020 | கருத்துகள் (39)
Share
Advertisement
PM MODI, NARENDRA MODI, LOCKDOWN, LOCKDOWN EXTENTION, CORONA, CORONAVIRUS, COVID 19, CORONAVIRUS OUTBREAK,
 கொரோனா, கொரோனாவைரஸ், பிரதமர்மோடி, நரேந்திரமோடி, மாநிலஅரசுகள், ஊரடங்கு, மோடி, நரேந்திரமோடி

புதுடில்லி: ஏப்.,14க்கு பிறகும் ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என மாநில அரசுகள் பரிந்துரை செய்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா அச்சுறுத்தல் குறித்து பிரதமர் மோடி, வீடியோ கான்பரன்சிங் முறையில், எதிர்க்கட்சி தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கை: அனைத்து கட்சி தலைவர்கள் ஆலோசனைகள், பரிந்துரை வழங்கினர். ஊரடங்கு குறித்து விவாதிக்கப்பட்டது. ஒவ்வொருவரின் உயிரை காப்பாற்ற வேண்டியது அரசின் பொறுப்பு. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, உலகமே, கடுமையான சவாலை எதிர்கொண்டு வருகிறது. தற்போதைய சூழ்நிலை, மனிதர்குல வரலாற்றில், தற்போதைய காலகட்டத்தையே மாற்றும் வகையில் உள்ளது. கொரோனாவை எதிர்த்து நாம் போராட வேண்டும். இந்த வைரசுக்கு எதிராக மத்திய அரசுடன் மாநில அரசுகள் இணைந்து செயல்படுவதற்கு பாராட்டு தெரிவித்தார்.


latest tamil newsதற்போது, நாட்டில் நிலவும் சூழ்நிலை சமூக அவசர நிலைக்கு ஒப்பாக உள்ளது. இது கடுமையான முடிவுகளை எடுக்க வேண்டிய நிலையை உண்டாக்கியுள்ளது. நாம் இன்னும் விழிப்புடன் இருக்க வேண்டிய சூழ்நிலையை உண்டாக்கியுள்ளது. கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க ஊரடங்கு காலகட்டத்தை நீட்டிக்க வேண்டும் என மாநில அரசுகள், மாவட்ட நிர்வாகங்கள், மற்றும் நிபுணர்கள் பரிந்துரை செய்துள்ளனர். இவ்வாறு பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.


முதல்வர்களுடன் ஆலோசனைஇதனிடையே, பிரதமர் மோடி வரும் 11ம் தேதி வீடியோ கான்பரன்ஸ் முறையில், மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (39)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pats - Coimbatore,இந்தியா
08-ஏப்-202020:24:35 IST Report Abuse
Pats இரண்டு கோடிக்கு மேல் வங்கியில் பணம் வைத்துக்கும் தனி நபர்களிடம் இருந்து 50 சதவிகித பணத்தை அரசுடைமை ஆக்கலாம். அவசர காலத்தில் தடாலடி முடிவுகள் தேவை.
Rate this:
Cancel
Mango Mani - Bangalore,இந்தியா
08-ஏப்-202019:38:31 IST Report Abuse
Mango Mani நீங்க அடிக்கிற மாதிரி நடிங்க' நாங்க அழுகிற மாதிரி .....
Rate this:
Cancel
Janarthanan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
08-ஏப்-202019:21:39 IST Report Abuse
Janarthanan ஒரு பிரபல நியூஸ் சேனல் இப்பொழுது காண்பித்து கொண்டு இருக்கிறாரக்ள் தமிழ்நாட்டில் டெல்லி போயிட்டு வந்தவர்கள் 331 உன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை என்று ??? இது உண்மையா ??? உண்மையென்றால் தமிழ்நாட்டை காப்பற்றுவது கஷ்டம் தான் ???
Rate this:
மனதில் உறுதி வேண்டும் - மதராஸ்:-),இந்தியா
08-ஏப்-202019:44:01 IST Report Abuse
மனதில் உறுதி வேண்டும் இது உண்மையா??? யாரை கேட்கிறீர்கள் நீங்கள் சொன்ன சேனல் கேட்டு சொல்லுங்கள் நீ இல்லை எனில் தமிழ்நாடு காப்பாற்றப்படும் பயப்படாதீர்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X