ஓரம்போ ! கொரோனா வண்டி வருது !

Updated : ஏப் 08, 2020 | Added : ஏப் 08, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
Coronavirus, covid-19, corona, awareness, corona car, covid-19 car, coronavirus car, corona awareness, covid-19 awareness, coronavirus awareness, Hyderabad, corona update, கொரோனா, வைரஸ், சுதாகர், கார், வடிவமைப்பு, விழிப்புணர்வு

ஐதராபாத்: பலவிதமான வடிவங்களில் கார்களை வடிவமைத்து அசத்தும் சுதாகர் என்பவர், கொரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வைரஸ் போன்ற வடிவமைப்பில் கார் ஒன்றை தயாரித்து அசத்தியுள்ளார்.

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்த கே.சுதாகர் என்பவர், கற்பனை செய்யமுடியாத வடிவங்களில் கார்களை வடிவமைப்பதில் கில்லாடி. சுதா கார்ஸ் என்ற நகைச்சுவையான அருங்காட்சியகத்தை நடத்தி வரும் இவர், இதற்கு முன்பு, பர்கர், ஸ்டைலெட்டோ, ஒரு பை, கேமரா, கால்பந்து மற்றும் கணினி வடிவத்திலும் கார்களை வடிவமைத்து அசத்தியுள்ளார். மேலும், உலகின் மிகப்பெரிய மூன்றுச்சக்கர வண்டியை வடிவமைத்து கின்னஸ் உலக சாதனையும் படைத்துள்ளார். இந்நிலையில், தற்போது கொரோனா குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கொரோனா வைரஸ் போன்று வடிவமைத்துள்ளார்.


latest tamil news


மொத்தம் 6 சக்கரங்களை கொண்டுள்ள இந்த கொரோனா காரில் ஒரு இருக்கை மட்டுமே இருப்பது போல் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், 100 சிசி இன்ஜினுடன் பைபர் பாடியையும் கொண்டுள்ளது. அதிகபட்சமாக 40 கி.மீ வேகத்தைத் தொடக்கூடிய இந்த காரை உருவாக்க 10 நாட்கள் ஆனதாக சுதாகர் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், கொரோனா வைரஸ் பற்றிய விழிப்புணர்வைக் கொண்டு வருவதற்கும், மக்களை வீட்டிலேயே இருக்க ஊக்குவிப்பதற்கும், இந்த காரை உருவாக்கியுள்ளேன். கொரோனா குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த காரை ஐதராபாத் போலீசாருக்கு நன்கொடையாக வழங்க திட்டமிட்டுள்ளேன், என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Raghuraman - Tamil Nadu,இந்தியா
08-ஏப்-202018:38:54 IST Report Abuse
Raghuraman செயவீர்களா, செயவீர்களா, செயவீர்களா, செயவீர்களா, செயவீர்களா
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X