பொது செய்தி

இந்தியா

ஊரடங்கு நீட்டிப்பதா? 11ம் தேதி முடிவு

Updated : ஏப் 08, 2020 | Added : ஏப் 08, 2020 | கருத்துகள் (16)
Share
Advertisement
Lockdown, lockdown extension, PM Modi, Modi, India, Coronavirus, covid-19, corona, corona in India, corona update, curfew, fight against corona, இந்தியா, ஊரடங்கு, நீட்டிப்பு, பிரதமர், மோடி, முதல்வர்கள், ஆலோசனை, முடிவு

புதுடில்லி: நாடு தழுவிய ஊரடங்கை நீட்டிப்பது குறித்து மத்திய அரசு வரும் 11ம் தேதி முடிவு எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனா பரவுதலை தடுக்கும் விதமாக நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படும் என பிரதமர் மோடி அறிவித்திருந்தார். மார்ச் 24 முதல் அமலான ஊரடங்கு வருகின்ற ஏப்.,14ம் தேதி முடிவடைகிறது. இதற்கிடையே எதிர்க்கட்சி தலைவர்களுடன் மோடி இன்று (ஏப்.,08) வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனையில் ஈடுபட்டார்.
ஆலோசனை கூட்டத்தின் முடிவில், கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க ஊரடங்கு காலகட்டத்தை நீட்டிக்க வேண்டும் என மாநில அரசுகள், மாவட்ட நிர்வாகங்கள், மற்றும் நிபுணர்கள் பரிந்துரை செய்துள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.


latest tamil newsமேலும், நாட்டில் ஊரடங்கை உடனடியாக திரும்பப்பெறும் முடிவு இப்போது இல்லை என மோடி கூறியதாகவும், ஏப்.,14ம் தேதிக்கு பிறகும் ஊரடங்கை தொடருவது அவசியம் என மோடி கருதுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், பிரதமர் மோடி வரும் 11ம் தேதி வீடியோ கான்பரன்ஸ் முறையில், அனைத்து மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார். இந்த ஆலோசனை கூட்டத்தில் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து விவாதிக்கப்பட உள்ளது. அதற்கு பின்னர், ஊரடங்கு மேலும் சில நாட்கள் நீட்டிப்பது குறித்த அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sachin - madurai,இந்தியா
08-ஏப்-202019:45:22 IST Report Abuse
sachin மக்களுக்கு சாப்பிட பணத்தேவை, பொருள் யார் தருவா ..இருக்கிறவன் கவலைப்பட மாட்டான் ...முதலில் ஒழுங்கா செக் பண்ணி இருக்கலாம் வெளிநாட்டினர் கலை...இப்ப மத்திய அரசும் மாநில அரசும் லபோ திபோ சொல்லுது
Rate this:
Vijay - Bangalore,இந்தியா
08-ஏப்-202020:07:20 IST Report Abuse
Vijayஅப்படி செக் பண்ணிருந்தால் டில்லி மாநாட்டை நடத்தவிடாமல் அரசு சதி செய்கிறது னு சொல்லியிருப்பீங்களே...
Rate this:
Vijay - Bangalore,இந்தியா
08-ஏப்-202020:12:29 IST Report Abuse
Vijayஇந்த கருத்தை நீ பிப்ரவரி மாதமே போட்டிருக்கலாம் .....
Rate this:
Pannadai Pandian - wuxi,சீனா
08-ஏப்-202021:22:19 IST Report Abuse
Pannadai Pandianகொரோனாவை பரப்பிய ஜமாத் தரும், வாங்கிக்க........
Rate this:
Cancel
sachin - madurai,இந்தியா
08-ஏப்-202019:42:24 IST Report Abuse
sachin மத்திய அரசுக்கும், தமிழ்நாடு மாநில அரசுக்கும் திறமை இல்லை..மக்களின் அன்றாடத் தேவையைப் பூர்த்தி செய்வதில் தோல்வி அடைந்து விட்டனர் ...இப்படி இப்படியே வருடத்திற்கு லாக்டோன் கொண்டு போவாங்க ...மக்கள் பசி பட்டினியால் செத்து சாவாங்க ...வைரசுக்கு தடுப்பு காப்புக் இப்பவரை கண்டுபிடிக்க முடிய முடியல ...இந்த லட்சணத்துல லாக்டவுன் மீண்டும் வேண்டுமாம்...
Rate this:
Vijay - Bangalore,இந்தியா
08-ஏப்-202020:09:29 IST Report Abuse
Vijay2014 மே வரை காங்கிரஸ் ஆட்சிதானே , தொலைந்து போன மலேஷியா விமானத்தை ஏன் கண்டுபிடிக்கலை ?...
Rate this:
Vijay - Bangalore,இந்தியா
08-ஏப்-202020:14:07 IST Report Abuse
Vijayமகாராஷ்டிரா அரசு , கேரள அரசு திறமையாக கொரோனவை தடுத்து விட்டார்கள்னு சொல்லு .. கட்டுமரம் இருந்தால் கொரோனவேய கோ ராணாவே என்று விரட்டிப்பாருனு சொல்லு...
Rate this:
Pannadai Pandian - wuxi,சீனா
08-ஏப்-202021:23:47 IST Report Abuse
Pannadai Pandianசச்சினு......இந்தியாவை விட பாகிஸ்தான் தான் சூப்பர்.....அங்க ஓடிடு........
Rate this:
மனதில் உறுதி வேண்டும் - மதராஸ்:-),இந்தியா
08-ஏப்-202021:24:58 IST Report Abuse
மனதில் உறுதி வேண்டும் கட்டுமரம் இருந்திருந்தா உங்க குடும்பத்தில் ஒருத்தரா இருந்திருப்பார் நீ இப்படி கஷ்டபடமாட்டாய்...
Rate this:
Pannadai Pandian - wuxi,சீனா
09-ஏப்-202004:13:25 IST Report Abuse
Pannadai Pandianகுடும்பத்தில் ஒருவராய் இருந்து...
Rate this:
Vijay - Bangalore,இந்தியா
09-ஏப்-202012:14:21 IST Report Abuse
Vijayஹா து...
Rate this:
Cancel
08-ஏப்-202019:03:59 IST Report Abuse
தமிழ் அதான் முடிவு பண்ணிட்டீங்களே அப்புறம் எதுக்கு 11 ஆம் தேதிவரை காத்திருக்கணும். இப்பவே அறிவிச்சிடுங்க.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X