பொது செய்தி

இந்தியா

உ.பி., மும்பையில் மாஸ்க் அணிவது கட்டாயம்

Updated : ஏப் 08, 2020 | Added : ஏப் 08, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
Mumbai, Maharashtra, Uttar Pradesh, UP, mask, mask compulsory, mask mandatory, corona, coronavirus, covid-19, corona update, fight against corona, corona in Maharashtra, corona in UP,  உத்தவ்தாக்கரே,  மும்பை, மஹாராஷ்டிரா, உ.பி., மாஸ்க்

மும்பை: கொரோனா வைரஸ் அதிகம் பரவி வருவதால், மும்பையில் அனைவரும் மாஸ்க் அணிய வேண்டியது அவசியம் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனை செய்ய தவறியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர். அதேபோல், உ.பி., மாநிலத்திலும் பொதுஇடங்களில் அனைவரும் மாஸ்க் அணிய வேண்டியது கட்டாயம் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

மஹாராஷ்டிரா மாநிலம் கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியுள்ளது. சுமார் 2 கோடி பேர் வசிக்கும் மும்பையில் மட்டும் 782 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 50 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், மஹாராஷ்டிராவில் கொரோனா பரவலுக்கு மையப்புள்ளியாக மும்பை திகழ்கிறது.

இதனையடுத்து மும்பை மாநகராட்சி கமிஷனர் பிறப்பித்த உத்தரவில் கூறியுள்ளதாவது: மும்பையில் அனைவரும் மாஸ்க் அணிய வேண்டியது கட்டாயம். இதனை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். கைது செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும். பொது இடங்கள், அலுவலகங்கள், கூட்டங்கள், வாகனங்கள் உள்ளே இருக்கும் போது கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும். மருந்து கடைகளில் கிடைக்கும் தரமான மாஸ்க்குகள், அல்லது வீடுகளில் தயாரிக்கப்பட்ட மாஸ்க்குகளை அணியலாம். அவற்றை நன்கு துவைத்து அணிய வேண்டும் எனக்கூறினார். மஹாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரேவும், அத்யாவசிய பணிகளுக்காக வெளியே செல்லும் மக்கள் மாஸ்க் கட்டாயம் அணிய வேண்டும் என வேண்டுகோள் விடுத்திருந்தார்.


latest tamil news

உ.பி., கட்டாயம்


உ.பி., மாநில கூடுதல் தலைமை செயலர் அவினாஷ் அஸ்வதி கூறுகையில், மாநிலத்தில் பொது இடங்களில் மாஸ்க் அணிவதுகட்டாயம். அப்படி செய்யாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். சண்டிகர், நாகலாந்து, ஒடிசாவில் மாஸ்க் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளன.


உதவி கேட்கும் முதல்வர்இதனிடையே மஹாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே கூறுகையில், வீடுகளில் இருக்கும் மக்களுக்கு பல்வேறு தொந்தரவு வருவது புரிகிறது. அவர்களுக்கு நேரம் போகவில்லை. அதற்காக நான் மன்னிப்பு கேட்கிறேன். ஆனால், கொரோனாவை தோற்கடிக்க வீடுகளில் இருப்பதை தவிர வேறு வழியில்லை. மருத்துவ துறை, நர்சு மற்றும் வார்டு அனுபவம் உள்ள முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் அதன் பயிற்சி முடித்தவர்கள் அரசுடன் இணைந்து செயல்பட வேண்டும். மாநில அரசிற்கு நீங்கள் தேவைப்படுகிறீர்கள். அவர்கள் மாநில அரசை தொடர்பு கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Aaandal - Tamil Nadu,இந்தியா
08-ஏப்-202019:01:19 IST Report Abuse
Aaandal செயவீர்களா, செயவீர்களா, செயவீர்களா, செயவீர்களா, செயவீர்களா, செயவீர்களா
Rate this:
Muruga Vel - Mumbai,இந்தியா
11-ஏப்-202009:42:01 IST Report Abuse
 Muruga Velவந்தா ..வெச்சு செய்வோம் ......
Rate this:
Cancel
svs - yaadum oore,இந்தியா
08-ஏப்-202018:31:33 IST Report Abuse
svs //..50 பேர் உயிரிழந்துள்ளனர்....//....மும்பை இப்போது மரண தேசம் ...அங்குள்ள பணக்காரனுக்கு சுக போக வாழ்க்கை ...ஆனால் மும்பை தாராவி பகுதியில் காரோண ....பத்துக்கு பத்தடியில் 12 பேர் வாழ்க்கை....80 பேருக்கு ஒரே கழிப்பிடம் ...இதில் எங்கிருந்து தனிமைப்படுத்துவது ....தாராவியில் காரோண பரப்பியது டெல்லி மகா நாடு சென்றவன் ....கடும் நடவடிக்கை தேவை ...இங்கும் பல பேர் ரத்த பரிசோதனை செய்ய மறுக்கிறார்கள் ...இது பெரும் ஆபத்து ...உத்தர பிரதேசம் போல் தேசிய பாதுகாப்பு சட்டம், கொலை முயற்சி சட்டம் போன்று அமல் படுத்த வேண்டும் ...இல்லையென்றால் இது சட்டம் ஒழுங்கு பிரச்னையாக மாறும் .....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X