வீட்டில் இருப்பதை தவிர வேறு வழியில்லை: உத்தவ் அறிவுறுத்தல்

Updated : ஏப் 08, 2020 | Added : ஏப் 08, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
coronavirus, covid-19, corona, corona in Maharashtra, covid-19 in Maharashtra, corona in Maharashtra, corona update, fight against corona, Maharashtra, stay home, Uddhav, Uddhav Thackeray, Maharashtra CM, கொரோனா,பாதிப்பு, மஹா., உத்தவ், வீட்டில் இருங்கள்

மும்பை: கொரோனா வைரஸ் பரவலை தடுக்க வீட்டிலேயே இருப்பதை தவிர வேறு வழியில்லை என மஹாராஷ்டிரா மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார் முதல்வர் உத்தவ் தாக்கரே.

நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாநிலமாக மஹாராஷ்டிரா உள்ளது. இங்கு கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியுள்ளது.


latest tamil news




இந்நிலையி்ல் இன்று முதல்வர் உத்தவ் தாக்கரே வீடியோ வாயிலாக செய்தி வெளியிட்டு கூறியுள்ளதாவது, கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஒரே வழி வீட்டிலேயே இருப்பது தான். வீட்டிலேயே முடங்கியிருப்பதால்,மனச்சோர்வு ஏற்படும் என்பதை நானும் நன்றாக அறிவேன். இருந்தாலும் வேறு வழியில்லை மக்கள் பொறுத்துக்கொள்ள தான் வேண்டும். கொரோனாவை பரப்பிய வூஹான் நகரில் 76 நாட்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு அங்கு நேற்று தான் தளர்த்தப்பட்டுள்ளது. இதனை நீங்கள் மனதில் கொண்டு வீட்டிலேய இருங்கள். இவ்வாறு அவர் கூறினார்.


முகக்கவசம் கட்டாயம்



முன்னதாக அத்தியாவசிய தேவைக்காக வீட்டை விட்டு வெளியில் வருபவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். இல்லையெனில் இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்என மும்பை மாநகராட்சி அறிவித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nallavan Nallavan - இதே பெயரில் உலாத்தும் திமுக அடிமைக்கு நன்றி,இந்தியா
08-ஏப்-202021:02:55 IST Report Abuse
Nallavan Nallavan அந்த டீக்கடைக் காரரை மிரட்டிப்புட்டீங்களா?
Rate this:
Cancel
svs - yaadum oore,இந்தியா
08-ஏப்-202020:04:13 IST Report Abuse
svs உத்தர பிரதேசம் போல் தேசிய பாதுகாப்பு சட்டம், கொலை முயற்சி சட்டம் போன்று அமல் படுத்த வேண்டும் ...இல்லையென்றால் இது சட்டம் ஒழுங்கு பிரச்னையாக மாறும் .....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X