பொது செய்தி

தமிழ்நாடு

3ம் கட்டத்திற்கு நகரும் தமிழகம்? மேலும் 48 பேருக்கு கொரோனா

Updated : ஏப் 10, 2020 | Added : ஏப் 08, 2020 | கருத்துகள் (23)
Share
Advertisement
சென்னை : தமிழகத்தில் மேலும், 48 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, 738 ஆக உயர்ந்துள்ளது. தமிழகம் மூன்றாம் கட்டத்தை நோக்கி நகராமல் தடுக்க, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக, சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதுவரை, 21 பேர் சிகிச்சை முடிந்து, வீடு திரும்பியுள்ளனர்.தமிழக சுகாதாரத்துறை செயலர், பீலா ராஜேஷ், சென்னையில் நேற்று
TN_Together_AgainstCorona,Corona,TNAgainstCorona,TNGovt,coronavirus,TamilNadu,Covid19,StayHome, Quarantine,lockdown,

சென்னை : தமிழகத்தில் மேலும், 48 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, 738 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகம் மூன்றாம் கட்டத்தை நோக்கி நகராமல் தடுக்க, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக, சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதுவரை, 21 பேர் சிகிச்சை முடிந்து, வீடு திரும்பியுள்ளனர்.

தமிழக சுகாதாரத்துறை செயலர், பீலா ராஜேஷ், சென்னையில் நேற்று அளித்த பேட்டி: தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, 60 ஆயிரத்து, 739 பேர் தனிமைப்படுத்தப்பட்டு, வீட்டு கண்காணிப்பில் உள்ளனர். அரசு கண்காணிப்பு மையங்களில், 320 பேர் உள்ளனர்.

28 நாட்கள் கண்காணிப்பு முடிந்து, 32 ஆயிரத்து, 505 பேர் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளனர். இதுவரை, 6,095 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது. அதில், புதிதாக, 48 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில், 42 பேர் டில்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள்.

மலேஷியாவை சேர்ந்தவர் உட்பட, இரண்டு பேருக்கு, அவர்களுடனான தொடர்பால் தொற்று ஏற்பட்டுள்ளது. மற்ற நான்கு பேர், சென்னையை சேர்ந்தவர்கள். அவர்களுக்கு தொற்று ஏற்பட்டது குறித்து விசாரித்து வருகிறோம்.

தமிழகத்தில் இதுவரை, 738 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது; எட்டு பேர் உயிரிழந்து உள்ளனர்; 21 பேர் வீடு திரும்பியுள்ளனர். டில்லி மாநாட்டிற்கு சென்று வந்தவர்களில், 679 பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்டுள்ளது. இதில், ஏழு பேர் வெளிநாட்டினர். தமிழகத்தில் இதுவரை, நான்கு டாக்டர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளை சுற்றியுள்ள, 15.66 லட்சம் வீடுகளில், 53.67 லட்சம் பேரிடம் காய்ச்சல் அறிகுறிகள் இருக்கிறதா என, ஆய்வு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து தடுப்பு நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம். அரசு மருத்துவமனைகளில், முக கவசம், மருத்துவ உபகரணங்கள் போதிய அளவில் உள்ளன.

தட்டுப்பாடு இருந்தால், சுகாதாரத் துறையிடம் புகார் அளிக்கலாம். தமிழகம், கொரோனா பாதிப்பால், இரண்டாம் கட்டத்தில் உள்ளது; மூன்றாம் கட்டத்திற்கு நகராத வகையில், தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகிறோம். இவ்வாறு, அவர் கூறினார்.


மாவட்ட வாரியாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை


மாவட்டங்கள் / எண்ணிக்கை

சென்னை - 156
கோவை - 60
திண்டுக்கல் - 46
திருநெல்வேலி - 40
தேனி - 39
ஈரோடு - 32
திருச்சி - 36
நாமக்கல் - 33
ராணிப்பேட்டை - 27
செங்கல்பட்டு - 24
மதுரை - 24
கரூர் -23
திருப்பூர் -22
விழுப்புரம் - 20
துாத்துக்குடி - 17
கடலுார் -13
சேலம் - 13
திருவள்ளூர் - 13
திருவாரூர் - 12
விருதுநகர் - 11
தஞ்சாவூர் - 11
நாகை - 11
திருப்பத்துார் - 11
திருவண்ணாமலை - 9
கன்னியாகுமரி - 6
காஞ்சிபுரம் - 6
வேலுார் - 6
சிவகங்கை - 5
நீலகிரி - 4
தென்காசி - 2
கள்ளக்குறிஞ்சி - 2
ராமநாதபுரம் - 2
அரியலுார் -1
பெரம்பலுார் -1

மொத்தம் - 738

Advertisement




வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ocean kadappa india - kadappa,இந்தியா
10-ஏப்-202012:45:44 IST Report Abuse
ocean kadappa india கொரோனா ஒரு வியாதியல்ல. எதிரிகளின் உடற் கூறுகளை சிதைக்க கண்டு பிடித்த எலக்ட்ரான் வைரஸ். அதை மருந்துகளால் தீர்ப்பது சற்று கடினமான பணி. அது வான் வழியில் சீனாவால் பரப்ப பட்ட பேரழிவுக்கான எலக்ட்ரான் வைரஸ் அலை வீச்சு. இரண்டாம் தடவை கொரோனா அலை வீசும் என்று சீன அதிபர் ஜின் பிங் மிரட்டலாக தெரிவிப்பதை இது மெய்ப்பிக்கிறது. செல்களின் உபயோகத்தை தடை செய்து கவனித்தால் கொரோனா படிப்படியாக குறைவதை அறியலாம். தமிழகத்தில் இதை ஊரடங்குகளில் தடை செய்தால் உண்மை நிலவரம் தெரிய வரும்.
Rate this:
Cancel
konanki - Chennai,இந்தியா
10-ஏப்-202009:46:33 IST Report Abuse
konanki இன்று வெள்ளிக்கிழமை நல்ல நாள். மதியத்திற்கு மேல் கொரோனா பரவ அதிக வாய்ப்பு
Rate this:
Cancel
Sampath Kumar - chennai,இந்தியா
10-ஏப்-202009:11:14 IST Report Abuse
Sampath Kumar அது என்ன மூன்றாம் கட்ட பரவல் நான்காம் கட்ட பரவல் என்று இன்னும் எத்தனை கட்ட பரவல் உள்ளது ஏதோ சினிமா விளம்பரம் போல 25 நாள் 50 தாவது நாள் 100 நாள் போல உள்ளது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X