கொரோனாவுக்கு இலவச பரிசோதனை: உச்ச நீதிமன்றம் உத்தரவு

Updated : ஏப் 10, 2020 | Added : ஏப் 09, 2020 | கருத்துகள் (25)
Share
Advertisement
புதுடில்லி : 'நாட்டில் உள்ள அனைவருக்கும், 'கொரோனா' பரிசோதனை இலவசமாக செய்யப்படுவதை, மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும்' என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.கொரோனா தொற்றுக்கான பரிசோதனைகள், அரசு மருத்துவமனைகளில் இலவசமாக செய்யப்பட்டு வந்தன. தொற்று அதிகரிக்க துவங்கியதை அடுத்து, தனியார் பரிசோதனை கூடங்களும் பரிசோதனை மேற்கொள்ள, மத்திய அரசு அனுமதி அளித்தது. இதற்கு, 4,500
SC,SupremeCourt,coronatest,coronavirustest,freecoronavirustest

புதுடில்லி : 'நாட்டில் உள்ள அனைவருக்கும், 'கொரோனா' பரிசோதனை இலவசமாக செய்யப்படுவதை, மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும்' என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

கொரோனா தொற்றுக்கான பரிசோதனைகள், அரசு மருத்துவமனைகளில் இலவசமாக செய்யப்பட்டு வந்தன. தொற்று அதிகரிக்க துவங்கியதை அடுத்து, தனியார் பரிசோதனை கூடங்களும் பரிசோதனை மேற்கொள்ள, மத்திய அரசு அனுமதி அளித்தது. இதற்கு, 4,500 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது.


கடும் சுமை


இந்நிலையில், வழக்கறிஞர் சஷாங் தியோ சுதி என்பவர், உச்ச நீதிமன்றத்தில், மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதன் விபரம்:கொரோனா பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைகளின் எண்ணிக்கை போதுமானதாக இல்லாததால், தனியார் பரிசோதனை மையங்களுக்கு செல்ல வேண்டிய நிலைக்கு, சாமானிய மக்கள் தள்ளப்பட்டு உள்ளனர்.

ஆனால், தனியார் பரிசோதனை மையங்களில் வசூலிக்கப்படும், 4,500 ரூபாய் கட்டணத்தை, அனைவராலும் செலுத்த முடியாத நிலை உள்ளது. முழு அடைப்பால், கடும் பொருளாதார நெருக்கடியில் உள்ள சாமானிய மக்களுக்கு, இத்தொகை கடும் சுமையாக உள்ளது.இவ்வாறு, மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மனுவை, உச்ச நீதிமன்ற நீதிபதிகள், அசோக் பூஷண், ரவீந்திர பட் ஆகியோர் அடங்கிய அமர்வு, 'வீடியோ கான்பரன்சிங்' மூலம், நேற்று விசாரித்தது.


வழிமுறை


அப்போது, நீதிபதிகள் கூறியதாவது: கொரோனா பரிசோதனைக்கு, தனியார் பரிசோதனை மையங்கள், அதிக தொகை வசூலிக்க அனுமதிக்கக் கூடாது. அதற்கு செலவு செய்யும் தொகையை, அரசிடம் இருந்து, மக்கள் திரும்ப பெறக் கூடிய வழிமுறைகள் வகுக்கப்பட வேண்டும். நாட்டில் உள்ள அனைவருக்கும், கொரோனா பரிசோதனை இலவசமாக செய்யப்படுவதை, மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும்.இவ்வாறு, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


டாக்டர்கள் போர் வீரர்கள்


கொரோனா சிகிச்சையில் ஈடுபட்டுள்ள டாக்டர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்களுக்கு, போதிய பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கக் கோரி, உச்ச நீதிமன்றத்தில், மூன்று மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை, நீதிபதிகள் அசோக் பூஷண் தலைமையிலான அமர்வு, 'வீடியோ கான்பரன்ஸ்' மூலம், விசாரித்தது.

அப்போது, நீதிபதிகள் கூறியதாவது: டாக்டர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்கள், போர் வீரர்களைப் போன்றவர்கள். அவர்கள் பாதுகாக்கப்பட வேண்டியவர்கள். மேலும், சேவை துறையை சேர்ந்த பலர், வீட்டில் இருந்து பணியாற்றுகின்றனர். அவர்களின் உடல் மற்றும் மனநலன் குறித்தும், அரசு கவனம் கொள்ள வேண்டும். இவ்வாறு, நீதிபதிகள் தெரிவித்தனர்.

Advertisement
வாசகர் கருத்து (25)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
09-ஏப்-202018:12:10 IST Report Abuse
ஆரூர் ரங் இந்த நீதிபதிகள் இனி சம்பளமில்லாம வேலை செய்வாங்க வக்கீல்களும் இலவசமா வாதாடுவாங்க. தனியார் ஆஸ்பத்திரி வளர ஏழைகளின் வரிப்பணம் போகணுமாம். நல்லாயிருக்கு நியாயம் 😎
Rate this:
Cancel
09-ஏப்-202014:10:00 IST Report Abuse
நக்கல் , இலவசம் என்ற உடன் ஓடாதீர்கள்.. இது கொரோனா அறிகுறிகள் இருப்பவர்களுக்குத்தான் பொருந்தும்....
Rate this:
Cancel
swega - Dindigul,இந்தியா
09-ஏப்-202012:39:40 IST Report Abuse
swega இது அரைகுறை முடிவு. ஒரு தனியார் நிறுவனத்தை பணம் வாங்காமல் சேவை செய்ய சொல்லும் நீதிபதிகள், அந்த தனியார் நிறுவனங்களின் நிதி சுமையை யார் ஏட்பார்களெனவும் சொல்லவேண்டும். இன்று கோர்ட்கள் நடைபெறாததால் எத்தனையோ வக்கீல் குடும்பங்கள் பணத்தேவையால் தவிக்கின்றன, அவர்களுக்கு நீதிபதிகளாக நீங்கள் என்ன செய்தீர்கள்.
Rate this:
Mirthika Sathiamoorthi - Sembawang,சிங்கப்பூர்
09-ஏப்-202015:52:06 IST Report Abuse
Mirthika Sathiamoorthiஇருக்கவே இருக்காங்க இளிச்சவாய நடிகனுங்க...கூத்தாடிகள் ஆகுற மொத்த செலவை மக்கள் பணத்தில் கோடியில் சம்பாரிக்கும் நீங்கள்தான் கொடுக்கணும்ன்னு உத்தரவு போடா சொன்னபோச்சு...கார்ப்பரேட் கொடுக்குமா வேணாமண்ணு அடுச்சுக்கும் நாம...கூத்தாடிங்க விஷயத்தில் அடுச்சுக்கவே மாட்டோம்...எனக்கெல்லாம் செம காண்டு...கலையிலிருந்து பேயா ஓலைச்சு வாங்குன்னா மாசசம்பளம் குடுமபத்துக்கே பத்தமாட்டிங்குது...இவனுங்கெல்லாம் எந்த வேலையும் செய்யாம…மக்கள்பணத்தில் கொள்ளையடிக்கும் இவங்கதான் காசு கொடுக்கணும்......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X