'அத்தியாவசிய பொருட்களை பதுக்குவோர் மீது கடும் நடவடிக்கை:

Added : ஏப் 09, 2020 | கருத்துகள் (6)
Share
Advertisement

புதுடில்லி : 'அத்தியாவசிய பொருட்களை பதுக்குவோர் மீது, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு, மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.



latest tamil news


மாநில மற்றும் யூனியன் பிரதேச தலைமை செயலர்களுக்கு, மத்திய உள்துறை அமைச்சக செயலர், அஜய் பல்லா எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த, நாட்டில், 21 நாள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நாட்களில், உணவு பொருட்கள், மருந்துகள் போன்ற அத்தியாவசிய பொருட்களுக்கு எந்த தட்டுப்பாடும் ஏற்படக் கூடாது என்பதற்காக, அவற்றுக்கான உற்பத்தி, போக்குவரத்து போன்றவற்றுக்கு, பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ், மத்திய அரசு அனுமதிஅளித்துள்ளது.



latest tamil news


ஆனால், இந்த இக்கட்டான நேரத்தில் அத்தியாவசிய பொருட்களை கூடுதல் விலைக்கு விற்பதாக, புகார்கள் வந்து உள்ளன. இதற்கு சிலர், அத்தியா வசிய பொருட்களை பதுக்குவதும், கடத்துவதும் தான் காரணம். அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படுவதை தவிர்க்க, அத்தியாவசிய பொருட்கள் சட்டம், 1955ன் கீழ், மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதில், கையிருப்பு அளவு, உற்பத்தி அதிகரிப்பு, வர்த்தகர்களின் கணக்கை ஆய்வு செய்தல், ஆகியவை அடங்கும்.தவறு செய்தவர்கள் மீது, அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தின் கீழ், ஏழு ஆண்டு சிறை அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படலாம். அத்தியாவசிய பொருட்களை பதுக்குவோர் மீது, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வை, தடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.


Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
M.P.Madasamy - Trivandrum,இந்தியா
09-ஏப்-202011:21:41 IST Report Abuse
M.P.Madasamy சரக்கு போக்குவரத்தை ஒழுங்காக கண்காணித்து அத்தியாவசிய பொருட்களை அதிக அளவில் தருவிக்கும் பொழுது பதுக்கல்காரர்கள் தானாக வழிக்கு வருவார்கள்.
Rate this:
Cancel
S.Baliah Seer - Chennai,இந்தியா
09-ஏப்-202009:31:16 IST Report Abuse
S.Baliah Seer வெங்காய தட்டுப்பாட்டை வைத்தே ஒருவன் பல கோடி சம்பாதித்து விட்டான்.இப்போ எல்லா விலையும் டபுள் தான்.ஒரு சில மளிகை கடைகளே திறக்கப்பட்டுள்ளன.5000 ரூபாய்க்கு பொருள் வாங்குபவனுக்காக வெறும் 50 ரூபாய்க்கு ஓரிரு பொருள் வாங்குவோர் மணிக்கணக்கில் Q -வில் நிற்க வேண்டியுள்ளது.நிறைய அத்யாவசிப் பொருட்கள் கிடைக்க வில்லை.சீனாக்காரனை சபிப்பதை தவிர வேறுவழியில்லை. கொரானாவால் பீடிக்கப்பட்ட 4 லட்சம் சீனர்கள் அமெரிக்காவில் நுழைந்து அந்நாட்டையே கொரோனா நாடாக மாற்றியதாக வாஷிங்டன் டைம்ஸ் கூறுகிறது.
Rate this:
Cancel
muthu Rajendran - chennai,இந்தியா
09-ஏப்-202008:06:36 IST Report Abuse
muthu Rajendran தன்னிடம் இருந்த சரக்குக்களை அதிக விலைக்கு விற்று சம்பாதித்து விட்டார்கள் இன்னும் கூவிக்கிட்டே இருங்க ஒரு நாலு பேரையாவது புடுச்சு உள்ள வச்சா பயப்படுவாங்க
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X