பொது செய்தி

இந்தியா

ஊரடங்கால் பாதிக்காத ஒரே பெருங்கோடீஸ்வரர்!

Updated : ஏப் 09, 2020 | Added : ஏப் 09, 2020 | கருத்துகள் (21)
Share
Advertisement
Coronavirus, d mart, Radhakishan Damani, RK Damani, corona, Avenue Supermarkets, covid 19, corona crisis

மும்பை: உலகையே உலுக்கி வரும் கொரோனாவும், அதைத் தொடர்ந்து ஏராளமான நாடுகள் பிறப்பித்த ஊரடங்கு உத்தரவும், பெருங்கோடீஸ்வரர்களை கோடீஸ்வரர்களாகவும், லட்சாதிபதிகளாகவும் மாற்றிவிட்டன.

இந்தாண்டு துவக்கத்தில், ஆசிய பெருங்கோடீஸ்வரர்களில் முதலிடத்தில் இருந்த, முகேஷ் அம்பானி, தற்போது, பல படிகள் கீழிறங்கி விட்டார். இவரது, ரிலையன்ஸ் குழும நிறுவன பங்குகளின் சந்தை மதிப்பு கடுமையாக வீழ்ச்சி கண்டுள்ளது. இதனால், முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பில், 42 ஆயிரம் கோடி ரூபாய் குறைந்துள்ளது.

இந்நிலையில், ஊரடங்கு உத்தரவால், எந்த வித பாதிப்பும் இல்லாமல், அதேசமயம், அதிக லாபமீட்டி வருகிறார், 'அவென்யூ சூப்பர்மார்ட்ஸ்' நிறுவனத்தின் தலைவர், ராதாகிருஷ்ணன் தமானி. இந்தாண்டு, இவரது சொத்து மதிப்பு, 5 சதவீதம் உயர்ந்து, 73 ஆயிரத்து, 400 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இந்தியாவின், மிகப் பெரிய, 12 பணக்காரர்களில், இவரது சொத்து மதிப்பு மட்டுமே, சமீபத்தில் அதிகரித்துள்ளதாக, 'புளும்பெர்க் பில்லியனர்ஸ்' தர வரிசை நிறுவனம் தெரிவிக்கிறது.


latest tamil newsஊரடங்கு உத்தரவால், மக்கள் அத்தியாவசியப் பொருட்களை அதிக அளவில் வாங்கி இருப்பு வைத்தது தான், இந்நிறுவனத்தின் லாபத்திற்கும், அதன் விளைவாக, பங்கின் சந்தை மதிப்பு உயர்வுக்கும் காரணம். இந்நிறுவனம், 'டி மார்ட்' என்ற பிராண்டு பெயரில், நாடு முழுவதும் பல்பொருள் அங்காடிகளை நடத்தி வருகிறது.

இந்நிறுவனம், வாடிக்கையாளர்களை கவர, இலவசங்களை வழங்குவதில்லை. மொத்த வியாபாரிகளிடம் குறைந்த விலையில் பொருட்களை வாங்கி, குறைந்த லாபத்தில் விற்பனை செய்கிறது. இதுதான், கூட்டம் அலைமோத காரணம். அத்துடன், பிற நிறுவனங்களைப் போல, விளம்பரங்களுக்கு அதிகம் செலவு செய்வதில்லை. செலவை குறைத்து, நியாயமான விலையில் பொருட்களை கொடுக்கிறது.

''இலவசங்கள் இல்லாமல் பொருட்களை விற்பனை செய்வது, வணிக வளாகங்களுக்கு வெளியிலும், பொருத்தமான இடங்களில் கடைகளை அமைத்து வருவது ஆகியவை தான், அவென்யூ சூப்பர்மார்ட் வெற்றிக்கு காரணம்,'' என, கிரிஸ், முதலீட்டு ஆலோசனை நிறுவனத்தின் இயக்குனர், அருண் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sundararaman Iyer - Bangalore,இந்தியா
13-ஏப்-202022:56:25 IST Report Abuse
Sundararaman Iyer This formulae had been followed by many businesses in various sectors. Lure the customers initially with low prices as the procurement is in bulk the benefit can be passed on partially to customers. And when the customer populations stabilizes and saturates, sell the business for a huge profit to other business magnets and exit the field. For example, Deccan Aviation did the same few years ago. Ofcourse this is good for the customers for a short period and they will be left high and dry later................
Rate this:
Cancel
அம்பி ஐயர் - நங்கநல்லூர்,இந்தியா
12-ஏப்-202011:42:05 IST Report Abuse
அம்பி ஐயர் ஆம்... விலை நார்மல் தான்.... பிக் பஜாரை விடவும் குறைவாகவும் தரமானதாகவும் இருக்கிறது.... இதற்குத் தான் இதே போல எல்லா மாவட்டங்களிலும் இது போன்ற சூப்பர் மார்க்கெட்கள் திறக்கப்பட வேண்டும் என்பது..... இந்த அநியாய வியாபரக் கொள்ளையர்களிடமிருந்து மக்கள் விலக வேண்டும்...
Rate this:
Cancel
ranganathan seetharaman - chennai,இந்தியா
11-ஏப்-202019:26:57 IST Report Abuse
ranganathan seetharaman சென்னையில் இல்லையே
Rate this:
ilango - Al-Khobar,சவுதி அரேபியா
12-ஏப்-202000:17:41 IST Report Abuse
ilangoசென்னையில் விருகம்பாக்கத்தில் இருக்கிறது....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X