கொரோனா வைரஸ் பாதிப்பு: ஐ.நா.,வில் இன்று ஆலோசனை| UN Security Council to discuss covid-19 pandemic in closed session today | Dinamalar

'கொரோனா' வைரஸ் பாதிப்பு: ஐ.நா.,வில் இன்று ஆலோசனை

Updated : ஏப் 09, 2020 | Added : ஏப் 09, 2020 | கருத்துகள் (1)
Share
UN Security Council, unsc, Covid-19 pandemic, corona news update, coronavirus, world wide outbreak, fight against corona

ஐ.நா; சீனாவில் ஏற்பட்ட கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இத்தாலி, ஸ்பெயின், பிரிட்டன் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளிலும், அமெரிக்காவிலும் ஏராளமான உயிரிழப்புகளை ஏற்படுத்தி உள்ளது. நம் நாட்டிலும், பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

இதுவரை, உலகம் முழுவதும், 82 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர்; 14 லட்சத்துக்கும் அதிகமானோர் வைரஸ் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். 'வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்துவதற்கு, அனைத்து நாடுகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்' என, ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில், சமீபத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.


latest tamil news



இந்நிலையில், ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில், கொரோனா பாதிப்பு, தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக, அனைத்து நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்கும் உள்ளரங்கு கூட்டம், இன்று ( ஏப்.9) நடக்க உள்ளது.

இதில், 'வீடியோ கான்பரன்ஸ்' மூலமாகவும் பிரதிநிதிகள் பங்கேற்கஉள்ளனர். ஐ.நா., பொதுச் செயலர் அன்டோனியோ குட்டரெசும் இதில் பங்கேற்கவுள்ளார். ஆலோசிக்கப்பட்ட விஷயங்கள் குறித்து, கூட்டத்தின் முடிவில் அறிக்கை வெளியிடப்படும் என தெரிகிறது.


Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X