பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா தடுப்பு குழுவுடன் முதல்வர் பழனிசாமி இன்று ஆலோசனை

Updated : ஏப் 09, 2020 | Added : ஏப் 09, 2020 | கருத்துகள் (5)
Share
Advertisement
TN against Corona, Corona, TN fights Corona, TN govt, Palaniswami, tn cm, coronavirus, Tamil Nadu, Covid 19, consultation meet, EPS, முதல்வர்,பழனிசாமி,இபிஎஸ்,ஆலோசனை

சென்னை: கொரோனா நோய் தடுப்பு மற்றும் கண்காணிப்பு குழுவினருடன், முதல்வர், பழனிசாமி இன்று (ஏப்.,9) ஆலோசனை நடத்த உள்ளார்.

தமிழகத்தில், கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க, பல்வேறு துறைகள் வழியே, ஏராளமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தொடர் பாதுகாப்பு நடவடிக்கைகளை கண்காணிக்க, மத்திய, மாநில அரசுகள் இடையேயும், மாநிலம், மாவட்டம் இடையேயும், ஒட்டுமொத்த ஒருங்கிணைப்பு குழு, அத்தியாவசிய பொருட்கள் உற்பத்தி குழு; தனியார் சுகாதாரப் பணிகள் ஒருங்கிணைப்பு குழு உட்பட, 12 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இக்குழுவின் உறுப்பினர்களாக, மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.


latest tamil news



இக்குழுவினர் உடனான ஆலோசனை கூட்டம், இன்று காலை, 11:00 மணிக்கு, தலைமை செயலகத்தில் நடக்க உள்ளது. கூட்டத்திற்கு, முதல்வர், பழனிசாமி தலைமை வகிக்கிறார். கூட்டத்தில், கொரோனா நோய் தடுப்புக்கு, இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, ஆலோசிக்கப்பட உள்ளது. கூட்டம் முடிந்ததும், முதல்வர் முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவார் என, எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sindu - chennai,இந்தியா
09-ஏப்-202012:23:12 IST Report Abuse
sindu இன்றைக்கு எப்படி முஸ்லிம்களின் (தப்லீக் ஜமாத்தின்) மீது பழி போடலாம் என்றா ?
Rate this:
Cancel
babu - Nellai,இந்தியா
09-ஏப்-202009:13:13 IST Report Abuse
babu சார் உங்கள் கவனத்திற்கு, சென்னை போரூர் கொளப்பாக்கம் கடை மாதானந்தபுரம் மாதா நகர், MRK நகர் 5 ஆவது தெரு, maxiworth நகர் தெரு போன்ற பகுதிகளில் வட மாநிலத்தவர் நிறைய பேர் இன்னும் தங்கி கட்டிட வேலை முறையான பாதுகாப்பின்றி செய்து வருகின்றனர். கேட்டால் அந்த கட்டிட என்ஜினீயர் மற்றும் கான்ட்ராக்டர்ஸ் அசிங்கமாக பேசுகின்றனர். தயவு செய்து காவல், சுகாதார துறையினர் நடவடிக்கை எடுத்து மக்களுக்கு நோய் பரவாமல் காப்பாற்றுங்கள்.
Rate this:
Cancel
RajanRajan - kerala,இந்தியா
09-ஏப்-202007:40:43 IST Report Abuse
RajanRajan அரசையும் அது சார்ந்த துறைகளையும் லஞ்சம் வாங்க கூட நேரம் கொடுக்காமல் சேவை செய்ய வைக்கும் இந்த கொரானாவுக்கு நன்றி சொல்ல தான் வேண்டும். மொத்தத்தில் அரசு நிர்வாகத்தை குரானா நல்ல ட்ரில் வாங்குகிறது. . ஏதோப்பா அரசியல்வாதிகளும் சுய உழைப்பில் லஞ்ச லாவணியம் இல்லாமல் வாழ வைக்கும் இந்து குரானா. வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X