பொது செய்தி

தமிழ்நாடு

நீங்கள் தான் எங்கள் ஹீரோ ': சென்னை விமானியை கொண்டாடிய மக்கள்..!

Updated : ஏப் 09, 2020 | Added : ஏப் 09, 2020 | கருத்துகள் (6)
Share
Advertisement

சென்னை: சென்னையில் தனிமைப்படுத்தி கொண்டுள்ள ஏர் இந்தியா விமானி வீட்டில் முன்பு ஒட்டப்பட்ட ஸ்டிக்கரின் கீழ் அண்டை வீட்டார் கைப்பட நன்றி பாராட்டி எழுதிய வாசகங்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.latest tamil newsகடந்த மார்ச் 15ம் தேதி மஸ்கட்டில் இருந்து திரும்பிய சென்னையை சேர்ந்த ஏர் இந்தியா விமானி மணீஷ் சர்மா, நந்தம்பாக்கத்தில் உள்ள தனது வீட்டில் 28 நாட்கள் தனிமைப்படுத்தி கொண்டுள்ளார். சென்னை மாநகராட்சி அதிகாரிகள் விதிமுறைப்படி, தனிமைப்படுத்த ப்பட்ட நபர் குறித்த ஸ்டிக்கரை அவரது வீட்டின் முன் ஒட்டினர்.

கொரோனா பரவாமல் இருக்க தனிமைப்படுத்தி கொண்டுள்ள நபர்களிடம் பாகுபாடு காட்டுவதோடு, வீட்டின் உரிமையாளர்கள் சிலர் வீடுகளை காலி செய்யுமாறு வற்புறுத்தும் கசப்பான நிகழ்வுகள் நடந்தது.

ஆனால் அதற்கு மாறாக சென்னையில் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் அக்கம் பக்கத்தினர், 'உங்களுடைய அனைத்து சேவைக்கு மிக்க நன்றி கேப்டன் மணீஷ். நீங்கள் எங்கள் ஹீரோ ' என கைப்பட எழுதி வாழ்த்து தெரிவித்துள்ளனர். இதனை சுவர்ணா என்பவர் டிவிட்டரில் பகிரவே லைக்குகள் குவிந்ததோடு, பலரும் வாழ்த்து மழையை பொழிந்தனர்.

அடுத்த ஒரு வாரத்தில் தனிமைப்படுத்துதல் முடிவடையும் நிலையில், என்னுடைய அண்டை வீட்டாரிடம் இருந்து வந்த இது ஒரு அழகான பாராட்டு என விமானி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார்.


latest tamil newsகொரோனாவுக்கு எதிராக முன்னணியில் இருக்கும் கேப்டன் மணீஷ்சர்மா உள்ளிட்டோருக்கு எங்களுடைய நன்றியின் அடையாளம். ஞாயிறன்று இது போன்ற ஹீரோக்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக விளக்குகள் மற்றும் மெழுகுவர்த்தி ஏற்றினோமென அதே அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் அனில் ஜோசப் தெரிவித்தார்.

கொரோனாவுக்கு எதிராக போரில் ஒற்றுமையை வெளிப்படுத்த வீடுகள் தோறும் விளக்குகள் ஏற்ற பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார். அதனை ஏற்று மக்கள் விளக்கேற்றி நம்பிக்கையை யும், ஒற்றுமையையும் வெளிப்படுத்தி இருந்தனர். இதன் தொடர்ச்சியாக தன்னலம் கருதாமல் உழைத்து வரும் டாக்டர்கள்,, சுகாதார பணியாளர்கள் உள்ளிட்டோர் மீதான மக்களின் பார்வை நேர்மறையாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement
வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
வெற்றிக்கொடிகட்டு - - மதராஸ்:-),இந்தியா
11-ஏப்-202010:36:34 IST Report Abuse
வெற்றிக்கொடிகட்டு "இதன் தொடர்ச்சியாக தன்னலம் கருதாமல் உழைத்து வரும் டாக்டர்கள், சுகாதார பணியாளர்கள் உள்ளிட்டோர் மீதான மக்களின் பார்வை நேர்மறையாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது." ஒரு நிகழ்வை வைத்து தமிழகம் மாறிவிட்டதென சொல்ல முடியாது
Rate this:
Cancel
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
09-ஏப்-202009:35:25 IST Report Abuse
Natarajan Ramanathan தான் இறக்கும்வரையில் அடுத்தவனுக்கு உதவுவது தான் இந்துமத கோட்பாடு. LOKHA SAMASTHA SUKINO BHAVANTHU இதுவே நான் தினமும் சிவனிடம் வேண்டுவது.
Rate this:
Cancel
Ravi K -  ( Posted via: Dinamalar Android App )
09-ஏப்-202008:19:17 IST Report Abuse
Ravi K இப்படி நெஞ்சார்ந்த நன்றி தெரிவிக்கும் ஒரு செயலை மூர்க்க கும்பல் கொச்சைப்படுத்தி தங்கள் தரம் என்ன என்று காண்பித்துக் கொண்டிருக்கிறார்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X